நாகேந்திர பாரதி/வேலை இல்லா வேளை

திட்டியும் பார்த்தாச்சு – யாரும்
திரும்பத் திட்டவில்லை

பாராட்டியும் பார்த்தாச்சு – யாரும்
திரும்பப் பாராட்டவில்லை

அவனவளுக்கு
அவளவன் வேலை

நமக்கு என்னமோ
இதுதான் வேலை