பெரிய அளவில் நோய்கள் வந்த்ததில்லை. இளம் வய்தில் விளையாட்டு வீரன். சிறுவயதில் ஹீமோபோலியோ குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இது நோய் அல்ல. ப்ரொட்டீன் குறைபாடு. லட்சத்தில் ஒரு ஆணுக்கு குறைபாடு இருக்கும். இதனால் ஆண்கள் பாதிக்கப்படவர்கள். பெண்கள் Carriers. 19ம் நூற்றாண்டு விக்டோரியா மகாராணி குடும்பத்தில் உறவில் இருந்த இந்திய மக்கள் வழியாக மரபணுவுடன் இணைந்து இரத்த உறைவு ப்ரோட்டீன்களை தடுத்துள்ளது. (Jene mutation) பிடிட்டிஷ் மக்கள் நோய்க்குக்கூட தங்கள் மேட்டிமைத்த்னத்தை பீற்றிக்கொள்ளும் அல்பப்பேவழிகள்.. இதன் பெயர் Royal Deficency. இதுவரைக்கும் நிரந்த்ரமாக குணப்படுத்த மருந்து இல்லை. உயிர் பிழைக்க வைக்கலாம். ஆனால் Complesx and very very very expensive medical treatement. ,
எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடுமாறிவிட்டார்கள். கொஞ்சம் பிசகினாலும் மரணம் உறுதி. AIIMS Delhi, CMC Vellore போன்ற பெயர் பெற்ற பணியாற்றும் Hematolologit உடன் கலந்தோசித்து Factor VIII ஊசியை தேர்வு செய்தர்கள்., ஒரு ஊசி தோராயமாக ரூ.1000. ரத்தக்கசிவு வீர்யத்டில், நாள், மாதம், ஆண்டுக்கணக்கில் ஊசி செலுத்த வேண்டும்.
மூன்று மணி நேரம் சிகிச்சை நல்ல முடியாக முடிந்தது. மயக்க மருந்து கொடுத்தபோது கண் மூடுவதற்கு முன் காலஞ்சென்ற என் பெற்றோரை பார்த்தேன். விழிப்பு வந்துடம் மனைவியையும், மகளையும் பார்த்தேன். பெற்றோர்கள் தீர்க்கதசிரிகள். நான் யாருடன் இருக்க வேண்டும் என தீர்க்கமாக தீர்மானித்துவிட்டார்கள். மெதுவாக தேறி வருகிறேன். நல்ல நிலைமைக்கு வர சில மாதங்கள் வரும்.
நிற்க.
சில வியாக்கனங்களை எழுத வேண்டிய கட்டாயம். என் சொந்த பிர்ச்சைனையை பொது வெளியில் எழுதியதில்லை.எனக்கு ஒத்து வராது.என் குடும்ப புகைப்படங்களைக்கூட இது வரையில் பகிந்ததில்லை. என் தன்மானத்தை விற்க விரும்பவில்லை. இந்த என் உடல்நிலை சிக்கலை அரசபுரசலாக கேள்விப்பட்டு திரு. பரமேஸவரி, கவின்மலர் தொடர்பு கொண்டார்கள் விலாவரியாக விளக்கினேஎன். அதிச்சியடைந்துவிட்டார்கள். இதுவரையில் 17_20 லட்சம் செலவாகியுள்ளது. மேற்செலவுக்கு மோட்டுவலையை பார்த்தேன்.
முகநூலில் எழுதி நிதி சேர்க்கலாம் என்ற யோசனையை கறாக மறுத்தேன்.என்னை புரியவைத்தார்கள். வேறு வழி என்ன? எனக் கேட்டார்கள். எதற்கும் என்னிடம் பதிலில்லை. இதற்கு தீர்வு வரும் என நம்பின்னேன். ஆனால் வழி தெரிய்வில்லை. இதற்ஜிடையில் சில விஷயங்களை பகிர்கிறேன். L&T, Siemens போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்திய அளவில் உயர் பதவியில் பணியாற்றியுள்ளேன். லட்ச்சக்கணக்கில் சம்பாதித்தேன். பெற்றோர் உடல் நிலை மோசமானது. ஏகப்பட்ட செலவுகள். வேலையிலிரிந்து விலக வேண்டிய சூழ்நிலை. சேபிப்பில் இருந்த ஏறத்தாழ 80_90 லட்சம் பணம் செலவானது. அடுத்த சில மாதங்களில் இருவரும் காலமானார்கள். ஈமைக்காரியங்கள் முடிந்த சில மணிநேரங்களில் என் தம்பி பெண்டாட்டி தலைப்பைப் பிடித்துக்கொண்டு அமெரிக்கவுக்கு சென்றுவிட்டான். இதுவரையில் தொடர்பில்லை.கார்ப்பரேட் கலாச்சாரம் ஒத்துவரவில்லை. Perform or perish (0r) Do or Die போன்ற கார்ப்பரேஎட் வீர வசனங்கள் எனக்கு ஒத்துவரவில்லை.2017 வாக்கில் ஒரு சிறிய மருத்துவமனை தொழிலை தொடங்கினேன். முதல் சில வருடங்கள் நல்ல லாபம் ஈட்டியது. இதை இன்னும் விரிவுபடுத்த ,முயற்சி செய்தேன். அடுத்த சாத்தான் வந்தது. கோவிட் பூதம் வியாபாரத்தை சின்னாபின்னாமாக்கியது. மீண்டும் ஏகப்பட நஷ்டம். இதை சரிகட்ட மெல்ல முயன்றேன். அடுத்த பூதம் வெள்ளம், மழை ரூபத்தில் வந்து (2023) மொத்த மருத்துவ மருந்துகள் வெள்ளத்தத்தில் அடித்து சென்றது. மனம் தளரவில்லை.ஜப்பானிலிருந்து என் நெருங்கிய நணபன் சில முக்கிய வியாபார உத்திகளை சொன்னான்.அதை செயல்படுத்த முயன்றபோது இந்த அகோர விபத்து.இவ்வளவு விஷயங்கள் என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். நேற்றிலிருந்து பலர் சாடைமாடையாக இதைப்பற்றி கேட்டபோது இதை வெளிப்படையாக எழுதுவது சரி எனத் தோன்றியது.அ.மார்க்ஸ் அவர் மனவி ஜெயம்மா, வழக்குரைஞர் கஸ்தூரி சுமதி(ஹீபோபோலியாவிற்கு இன்ஷீர்ன்ஸ் இல்லை என மறுத்த தனியார் காப்பீடு கழகத்தின் மேல் கிரிமனல் வழக்கு தொடங்க இருக்கிறார்.), ஓவியர் விஸவம், ஓவியர் கார்த்திக், சி.மோகன், சித்ரா பாலசுப்ரமணியன், தி.பரமேஸ்வரி, கவின்மலர், மலேசியாவிலிருந்து சிரிராமுலு நாயுடு இன்னும் பலர் என்னை சந்தித்தது கண் கலங்கியது.. ஆர்.சிவகுமார், ஆரணி குப்புசாமி போன்றவர்கள் என் பின்புலத்தை கருத்தில் கொன்டு முகநூலில் எழுத அறிவுறுத்தினார்கள். முதலில் தி.பரமேஸ்வரி இதை பொது பொதுவெளியில் எழுதினார்.25_30 லட்சம் நிதி என்பது சாத்தியமில்லை கூடுமானவரையில் முகநூலில் திரட்டுவோம். பிறகு அடுத்த உத்தியை யோசிப்போம் என அ.மார்க்ஸ்,ஆர்.சிவகுமார் அறிவுறுத்துனார்கள்.
இப்படி எகப்பட்ட சிக்கல்களுக்கு நடுவில் மனதையும், உடலையும் ஆரோக்கியமான் சமநிலையில் தக்கவைத்து வருகிறேன். நன்கொடைகள் கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றன். தெம்பாக இருக்கிறேன். நாளுக்கு 20_30 போன் கால்கள். உதவிய நண்பர்கள், நன்கொடையாளர்கள், பற்றி குணமடைந்தவுடன் எழுதுகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், “ Am an agnostic. But am blessed with remarkable friends, great souls”. Many Thanks to you all!
குறிப்பு: ஹீமோபோலியோ பற்றி அச்சமடைய வேண்டாம். அருந்ததி ராய் இந்திய காப்பர்ரேட் மருத்துமனைகளை பற்றி குறிப்பிடும்போது, ” நோயாளிகளின் மரணம் நோயாளிகளின் அச்சத்தால் வருவதில்லை.சிகிச்சை கட்டணத்தின் மீதான் அச்சத்தில்த்தான் பெரும்பாலான மரணங்கள் நிகழ்கின்றன் என்கிறார்.. இதற்கு தமிழ்நாடு ஓமாந்தூரார், ராயப்பேட்டை மருத்துவமனையில் சில ஆயிரக்கணக்கில் இலவசனாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழிமுறைகள் இருக்கின்றன.இதைப்பற்றி விசாரித்து வருகிறேன். விரிவாக எழுதுகிறேன். நன்றி!

All reactions:

படிக்கவே மனது சங்கடப்படுகிறது. சீக்கிரம் நலமடைய ஆண்டவனைப்பிரார்த்திக்கிறேன்