அழகியசிங்கர்/மினி கதை 1

சங்கர் வழக்கம்போல ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவன் மனம் பரபரவென்று இயங்கியது. ஸ்கூட்டர் வேகத்தை விட மனோ வேகம் அதிகமாக இருந்தது.

இன்று எப்படியும் வசந்தாவிடம் தன் உள்ளக்கிடக்கையை சொல்ல வேண்டுமென்று நினைத்தான்.
வழக்கமாக பஸ் ஸ்டாண்டில் வசந்தாவைப் பார்த்தபோது, அவள் கேட்ட முதல் கேள்வி.

“ஏன் சட்டைப் போடாமல் வந்து விட்டீர்கள்?” என்பதுதான்.