
“அவங்க இல்லன்னா நான் இங்க இல்ல” யாரைச் சொல்கிறார் சாம்பியன் குகேஷ்?
“அப்பா, அம்மா இருவரும் மருத்துவர்களாக இருந்தாலும் என்னுடன் பயணிப்பதற்காக அப்பா தனது மருத்துவப் பணியை விட்டார். அப்பொழுதெல்லாம் ஸ்பான்சர் இல்லாததால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்க அம்மா ஒருவருடைய சம்பாத்தியம் தான். பின்னர் என் அம்மா அப்பாவுடன் படித்த மருத்துவர்கள் சிலர் உதவ முன் வந்தனர். ஐரோப்பிய நாடுகளில் சென்று குறைவான பட்ஜெட்டில் குறுகி குறுகி செலவு செய்து டோர்னமெண்ட்களில் கலந்து கொண்டோம். ஏர்போர்ட்டுகளில் படுத்து உறங்கினோம். என் அம்மா அப்பா பின் தொடர முடியாத மேட்ச்களை கூட அவர்கள் ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணி அவங்களுக்கு அப்டேட் கொடுப்பாங்க. பணரீதியா மட்டும் இல்லாம மனரீதியாகவும் அவங்க ஹெல்ப் பண்ணாங்க. அந்த நன்றிக் கடனை நான் எப்படி திருப்ப செலுத்த போறேன்னு தெரியல” – செஸ்ஸில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற குகேஷ்
