Today JK’s Birth Day!/வாசு தேவன் 

1920-களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவுக்கு சென்றபோது அவர் வயது 27. அப்போதே அவர் தீவிர சுய தேடலில் தன்னை ஆட்படுத்திக்கொண்டார். அவருடைய இளைய சகோதரர் நித்தியாவும் அவருடன் இருந்தார். தியாசிஃபெக்கல் சொசைட்டியுடன் ஐரோப்பியர்களுக்கு நல்ல உறவு இருந்தது. ரோசாலிண்ட் என்ற பெண்மணி அன்னி பெசண்ட் மூலமாக ஜே.கேவுக்கு அறிமுகமானார். ரோசா லிண்ட் சகோதர்களுடன் உடன் இருந்தார். ஒரு கட்டத்தில், ரோசா லிண்ட்க்கு ஜே.கேவின் இளைய சகோதரர் நித்தியா மேல் காதல் வயப்பட்டார். ஆனால், எலும்புறுக்கி நோயால் தாக்கப்பட்டி நித்தி அகாலமாக மரணமடைந்தார்.

1927-இல் அன்னி பெசண்ட் முன்னிலையில் ரோசா லிண்டுக்கும் தமிழரான ராஜகோபாலனுக்கும் லண்டனில் திருமணம் நடந்தது. அன்னி பெசண்ட் அறிவுறுத்தலில், தம்பதியினர் ஜேகேவுடன் உடன் இருந்து அவருக்கு உதவி புரிந்தனர். ஜேகேவின் சிந்தனைகளை எடிட் செய்து அதை பதிப்பகங்களுக்கு அனுப்பியவர் ராஜகோபால். ராஜகோபால் இல்லையெனில், ஜேகேவின் மகத்துவம் பரவலாக தெரிந்திருக்காது….அல்லது தாமதம் ஆகியிருக்கலாம். எவ்வாறாயினும், அவருடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவியலாது.

ராஜகோபாலனுக்கும் ரோசா லிண்டுக்கும் பல விஷயங்களில் ஒத்துபோகாமல் கருத்து வேறுபாடு அதிகரித்தது. இது இருவரையும் பிரித்தது…. இந்த சம்பவம், ரோசா லிண்ட் ஜேகே மேல் காதல் வயப்பட்டதில் போய் நின்றது… இந்த காதல் ஏறத்தாழ 25 வருடங்களுக்கு மேல் ரகசியமாக நடந்து வந்துள்ளது. இந்த காதலுக்கு சாட்சியாக இருந்தவர் அமெரிக்க எழுத்தாளர் அல்டஸ் ஹக்ஸ்லி.. இவரும் ஜேகேவுக்கு நெருக்கமானவர்.. ரோசா லிண்டுக்கு மூன்று முறை கருக்கலைப்பும் நடந்துள்ளது. உண்மையில் இப்படிபட்ட 25 வருட ரகசிய காதல் விசித்திரமானது… ஆனால், 1960-களில் காப்புரிமை சர்ச்சையில் ராஜகோபாலனுக்கும் ஜேகேவுக்கு வழக்கு நடந்து இருவருக்கும் பிரச்சினை முற்றியது. இதற்கு காரணம் இந்த ரகசிய காதல்…

இந்த வழக்கு இவர்கள் காதலையும் பாதித்தது….இறுதி காலத்தில் மூவருமே தனித் தீவாக வாழ்ந்தார்கள்…

1986-ல் 91 வயதில் கலிஃபோர்னியாவில் ஜேகே காலமானார்…

1991-ல், ரோசா லிண்ட்—ராஜகோபால் தம்பதிக்கு பிறந்த ராதா ராஜகோபால் ஸ்லாஸ் Lives in the Shadow with J. Krishnamurti என்ற சர்ச்சைக்குரிய நூலை எழுதி ஜேகேவின் மறுப்பக்கத்தை உலகுக்கு காட்டினார். பிறகு ஜேகே அறக்கட்டளை / ஆர்வலர்கள் கடுமையாக எதிர்வினை புரிந்தார்கள்..இரு தரப்பினருக்கும் பல வாக்குவாதங்கள் நடந்தது….

இது நடந்திருக்கலாம்…தவறில்லை..

இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது…மேலும், காதல்-காமம் பற்றி ஜேகே ஆரோக்கியமாகவும் நேர்மறையாக கருத்துகளைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். இந்த குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து அவரை நிராகரிப்பதோ அல்லது அவரை அவதூறு செய்வதோ சரியல்ல..அறமற்றது…

கஸ்தூரிபாய் இருக்கும்போது காந்திக்கு காதல் மலர்ந்தது.. ரவீந்திரநாத் தாகூரின் அக்கா மகள் சரளா தேவி மேல் பித்தம் கொண்டு காதல் போதையில் கடிதம் எழுதியவர்…ஒரு மனிதனின் பலகீன தருணங்களை கொண்டு ஒட்டு மொத்தமாக அவர் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது…குறிப்பாக, காதல்-காமத்திற்கு ஆட்படாதவர்களே யாரும் இல்லை… ஆதி உணர்ச்சி…இதில் பால் பேதமும் இல்லை…இருவர்கள் சம்பந்தப்பட விஷயம்… யாரும் மகாத்மாக்களும் கிடையாது…

புகைப்படத்தில் ஜேகேவும் ரோசா லிண்டும்..