
முன்பெல்லாம்
நண்பர்கள் வந்தவுடன்
இணைந்தருந்தலாம் என்று
மகிழ்வுடன் காத்திருந்த
தேநீர் மனம்
இப்போதெல்லாம்
தேடுவதே இல்லை
நண்பர்களையும்..
தேநீரையும்!
ஏனென
நண்பர்களோ
தேநீரோ
தேநீர் கடைக்காரரோ
இதுவரையில்
கேட்டதே இல்லை…
அது ஏனென
நீங்கள் கேட்பதால்
சொல்கிறேன்..
‘வாங்க..
ஒரு கோப்பைத் தேநீர்’
அருந்திக் கொண்டே பேசுவோம்!

அருமை