திருப்பதி லட்டு தொடர்பாக நம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்யக்கூடாது .ஒரு வேளை ஜெகன் மோகன் ஆட்சியில் இது நடைபெற்றிருந்தாலும் ஆட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை . லட்டு தயாரிப்பு முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது
இந்த லட்டு தயாரிக்கப்படுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன
திருப்பதி லட்டு தயாரிக்க தனியான ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன இந்த ஊழியர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு தேவையான நெய்யை ஆந்திராவில் இருந்து மட்டும் வாங்குவது இல்லை தமிழகத்தில் இருந்தும் நெய் செல்கிறது
இன்றைக்கு ஒன் இந்தியா செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நமது திண்டுக்கல்லை சேர்ந்த
ஏ ஆர் டெரி பால் நிறுவனத்தின் பெயரும் அடிபடுகிறது அவர்கள்
சில்லறை விற்பனையாக ராஜ் பால் என்று விற்பனை செய்யப்படுகிறது
அந்த நிறுவனத்தில் வாங்கிய நெய்யில் கலப்படம் இருக்க வாய்ப்பு உண்டு என்று தேவஸ்தானம் கருதுவதாக ஒன் இந்தியா செய்தி குறிப்பு கூறுகிறது
ஆனால் திண்டுக்கல் ஏ.ஆர்
பால் நிறுவனம் இதை மறுத்துள்ளது நாங்கள் திருப்பதிக்கு அனுப்புகின்ற அளவு என்பது அது மொத்த கொள்முதலில் ஒரு சதவீதம் மட்டுமே நாங்கள் எந்த சோதனைக்கும் தயாராக இருக்கிறோம் என்று பதில் சொல்லி உள்ளது
ஆகவே இது பக்தர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் அதோடு ஒரு நிறுவனத்தின் அல்லது பல நிறுவனங்களின் தொழில் தொடர்பான ஒரு விஷயம்
திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு விற்பனையை பாதிக்க கூடிய ஒரு விஷயம். அதுவும் இந்த புரட்டாசி மாதம் புனித மாதமாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். ஆகவே இப்படிப்பட்ட நேரத்தில் இந்த விஷயத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நல்லது
இதில் அரசியலும் இருக்கிறது உண்மையும் இருக்கலாம் எந்த நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் இருந்திருக்கலாம் என்பதை கண்டறிய தேவஸ்தானத்திற்கும் அவகாசம் தரவேண்டும்
ஆகவே முகநூலில் நம் எண்ணம் போல கிண்டல் செய்வதோ கேலி செய்வதோ ஆக்கபூர்வமானது அல்ல இது ஒரு சென்சிட்டிவ்வான பிரச்சனை என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இதை நாம் கடந்து போய் விடுவோம்
