பூமியும்-வானமும்/நியாண்டர் செல்வன்

1969

மனிதன் நிலவில் காலடி எடுத்து வைக்கிறான். டைம்ஸ் நாளிதழில் அந்த வித்தியாசமான செய்தி வெளியாகி இருந்தது

தன்னை முந்திக்கொன்டு அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியதால் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனர் அதிர்ச்சி, நிறுவனம் கலைக்கபடுகிறது என

ஜாம்பியா ஆபிரிக்காவில் இருக்கும் ஒரு ஏழை நாடு. அந்த நாட்டில் மனிதனை நிலவுக்கு அனுப்ப முயற்சி எடுத்தார்களா என யோசிக்க எல்லாம் வேண்டாம்

அவர்கள் அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை. எட்வர்ட் நிக்கல்சோ எனும் ஜாம்பிய பள்ளி ஆசிரியர்தான் ஜாம்பியா ஸ்பேஸ் ஏஜென்ஸி எனும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கினார். இலான் மஸ்க் எல்லாம் ஸ்பேஸெக்ச் எனும் தனியார் நிறுவனத்தை துவக்குகையில் இவர் ஏன் துவக்கூடாது?

ஜாம்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி, அதில் 12 அஸ்ட்ராநாட்டுகளையும் வேலைக்கு எடுத்தார். அவர்களுக்கு ஆப்ரோநாட் எனவும் பெயர் சூட்டினார். அதன்பின் தினமும் அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கபட்டன.

கைக்கு கிடைத்த உடைகளை வைத்து விண்வெளி வீரர் உடைகளை தயாரித்து அதை அணிந்தபடி மலைகளில் ஏறி, இறங்குவது, ஊஞ்சல் கட்டி வேகமாக ஆடுவது (புவியீர்ப்பு சக்தி இல்லாத நிலையை செயற்கையாக உருவாக்க) இப்படி எல்லாம் பயிற்சி எடுத்தார்கள்.

இதுக்கு எல்லாம் நிதி?

ஆப்ராநாட்டுகள் மாலையில் பாட்டுபாடி காசு சேர்த்தார்கள்.

நாசா, ஐரோப்பிய, ரஷ்ய விண்வெளி ஏஜென்சிகளுக்கு எல்லாம் கடிதம் அனுப்பி நிதி உதவி, பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் போட்டுக்க வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவர்களும் “நிதி எல்லாம் கொடுக்கமுடியாது. ஆனால் விண்வெளி ஏனெஜ்ஸியை எப்படி நடத்துவது என அட்வைஸ் கொடுக்கிறோம்” என அட்வைஸ் மழைகளை பொழிந்து பதில் கடிதம் அனுப்பினார்கள்.

இத்தனை கஸ்டபட்டும் கடைசியில் அமெரிக்கா முந்திக்கொன்டு மனிதனை நிலவுக்கு அனுப்பிவிட்டது. அத்துடன் ஜாம்பியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் கலைக்காப்பட்டுவிட்டது

அதன் நிறுவனர் அரசியலில் குதித்து உள்ளூர் தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டார். ஆனால் ஜனாதிபதி ஆகாததால் அவரால் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப முடியவில்லை

1991ல் ஒரு அமெரிக்கருக்கு இது குறித்து ஆர்வம் ஏற்பட்டு ஜாம்பியா போய் ஜாம்பியா ஸ்பேஸ் ஏஜென்ஸி குறித்து விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார்

அவர்கள் காமடி பீஸ் மாதிரி வெளியுலகுக்கு தெரிந்தாலும், அவர்களுக்கு இருந்தது நிஜமான ஆர்வம்தானாம். நிறுவனத்தை துவக்கி உலக நாடுகள் உதவியுடன் ஜாம்பியனை நிலவுக்கு அனுப்பலாம் என நிஜமாக கனவு கண்டிருக்கிறார்கள், பாவம்.

நடக்காத விசயத்துக்கு ஆசைப்படுவது தானே மனிதனின் இயல்பு?

ஆப்ரோநாட் (Afronaut) எனும் பெயரில் அந்த நூல் வெளியே வந்து நன்றாக விற்பனை ஆனது. நூல் விற்பனை பணத்திலாவது அவர்களுக்கு எதாவது நல்லது செய்தார்களா என தெரியவில்லை.

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்புநீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே

~

One Comment on “பூமியும்-வானமும்/நியாண்டர் செல்வன்”

  1. வியத்தகு செய்தி. சிறு நாடு
    ஒன்று சிரத்தையாக எடுத்த முயற்சி உண்மையான பாராட்டுக்குரியது. இன்று எனக்கு கிடைத்த ஒரு நல்ல செய்தி. நன்றி

Comments are closed.