இவருக்கு ஒரு இனோவா கார், சன் பிக்சர்ஸ் பரிசளிக்குமா?/திருவட்டாறு சிந்துகுமார்


ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்கவில்லை. ஸ்டைலிஷாக பல காட்சிகளில் நடந்து வந்தார். காய்கறி வாங்கினார். கால் மேல் கால் போட்டார். மகனுடன் நடந்தார். பேரனுடன் நடந்தார். ஸ்லோமோஷனில் கத்தி எடுத்தார். வில்லன்களை குத்தினார். அவருக்காக அவரது சகாக்கள் ரிஸ்க் எடுத்து சண்டை போட்டனர்.

ஆனால் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ரிஸ்க் எடுத்து கடும் உடலுழைப்பைக் கொடுத்து நடித்தது வில்லன் விநாயகனே. வேட்டி இல்லாமல் சவால் விட்டு நடந்தார். ரஜினியை விட 32 வயது இளையவர் நிஜத்தில் . ரம்யா கிருஷ்ணனிடம் போய் 10 ரூபாய்க்கு பிச்சை எடுத்தார். அம்மா என அவர் அழைப்பதை பார்த்தால் ஒரிஜினல் பிச்சைக்காரனும் நம்புவான். பாட்டுக்கு டான்ஸ் ஆடினார் .கொச்சின் ஹனிபாவுக்குப் பின் மலையாளம் கலந்த விநாயகனின் குரல் ஃபேன்டாஸ்டிக். முட்டைக் கண்விரிய காவி படிந்த 32 பல் தெரிய அவரது சிரிப்பும் பகடியும் ஆஹா ரகம். இறுதியில் ஏமாற்றமுடன் ரஜினியால் மிதிபட்டு, தலைகீழாக சல்பியூரிக் ஆசிட்டில் மூழ்கடிக்கப்பட்டு செத்தும் போகிறார். ரெத்தம் தெறிக்க குளோசப்பில் அவர் முகத்தைப் பார்க்க திகில் தொற்றிக் கொள்கிறது. விநாயகனின் வில்ல நடிப்பு இப்போதும் மனதில் நிற்கிறது. நெல்சனின் டைரக்ஷன் சக்சஸ் ஆனது.
படம் ஹிட். ரூ. 700 கோடி தாண்டுது வசூல் .மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் துக்கு கார் கொடுத்து விட்டார்.
சிலை கடத்தல் தாதா வர்மன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டான்.
படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்றவர் விநாயகன்.

உயிரைக் கொடுத்து நடித்த விநாயகனுக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஒரு இனோவா காராவது பரிசாக கொடுப்பாரா?
எந்தா சாரே, மனசிலாயோ?

அன்புடன்,
திருவட்டாறு சிந்துகுமார்,
பத்திரிகையாளர்.