
ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய தொடங்கிய ஜெயகாந்தன் யாரை வணங்குவது என்று தெரியவில்லை. இந்த மேடையில் நான் வணங்கத்தக்க மனிதர்கள் யாரும் இல்லை என்றார். ஆனால் ஒரு பொதுமேடையில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனை பார்த்து மரியாதை செய்ய தவறி விட்டான் என்ற செய்தி வரலாற்றின் காதுகளுக்கு போய் விட கூடாது என்பதற்காக இந்த மேடையை வணங்குகிறேன் என்றார். இதைக்கேட்ட மேடையில் இருந்த திமுக பிரமுகர்கள் அதிர்ந்தனர்.
இதையடுத்து விழாவின் நிறைவுரை ஆற்ற வந்த கலைஞர் நாங்கள் யாரும் வணங்க தக்கவர்கள் இல்லை என்று சொன்னார். ஆனால் நான் ஜெயகாந்தனை வணங்குகிறேன். காரணம் அவர் ஒரு எழுத்தாளர் என்பதற்காக அல்ல, சாகித்யஅகாடமி விருது பெற்றவர் என்பதற்காக அல்ல.
எனக்கு வாக்களிக்கப்போகும் கோடான கோடி மக்களில் அவரும் ஒருவர் என்பதற்காக வணங்குகிறேன் என்றார். இப்படித்தான் இந்த மாநிலத்தில் அரசியல், விமர்சனங்களும் ஒரு வகையில் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பது இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
இப்படி ஜெயகாந்தன் அரசு அதிகார மையம் என எல்லாவற்றையும் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் தான் சரி என்று நினைத்ததை எல்லா இடங்களிலும் தைரியமாக எடுத்து வைத்தார்.
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

படைப்பாளி என்கின்ற முறையில் இருவரும் இரு மலைகள்.
தனது கருத்தை முன்னிறுத்தி பேசுவதில் தயக்கம் காட்டதாவர் திரு. ஜெயகாந்தன் அவர்கள். அவரின் ” கங்கை எங்கே போகிறாள்? அவரின் முற்போக்கு சிந்தனைக்கு கதையை கையாளும் திறத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நன்றி