கலைச்செல்வி/மற்றபடி நான் என்பது


ஒரே மாதிரி எழுதுகிறீர்கள்
ஒன்றையே திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள்
ஒன்றிலேயே நின்று கொண்டிருக்கிறீர்கள்
என்கிறார்கள்
என்னை தெரிந்தவர்கள்

ஒரேமாதிரி இருப்பதற்கு கூட எத்தனை சலிப்பு?
எத்தனை கேள்வி.?
எத்தனை முறையீடு.?

ஒரேமாதிரி என்பது வேறொன்றுமில்லை கொஞ்சம் போலியாக இல்லாமல் இருப்பது
போலியில்லாதது கொஞ்சம் கசக்கிற சலிப்பு
அவ்வளவே

என்னவோ சொல்லுங்கள்
ஒரே மாதிரி
இருப்பது எனக்கு வசதியாக இருக்கிறது
அது வாழ்வாகவும்
வார்த்தையாகவும் இருப்பதால்


28.12.2023
தாராபுரம்.