குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life/செந்தூரம் ஜெகதீஷ்

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல் பத்திரிகையில் நடிகர் நடிகைகளைப் பற்றிய ஹாட் கிசுகிசுக்களை பேனாவில் விஷம் தோய்த்து எழுதினார், யார் யாருடன் படுத்தார்கள் என்று அம்பலப்படுத்தினார். இதனால் அவருக்கு நண்பர்கள் யாரும் இல்லை நிறைய எதிரிகளை சம்பாதித்தார். அவர் தந்தை ஒரு கோடீசுவரர்.ஆனால் குதிரைப் பந்தயம், சூதாட்டம் என செல்வத்தை இழந்துவிட்டார். பத்திரிகையாளராக மாறிய தேவயானி குஷ்வந்த் சிங் ஆசிரியராகப் பொறுப்பேறற இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்கு வருகிறார். அப்போது இருவருக்கும் நட்பு மலர்கிறது. நடிகர்கள் குறிப்பாக ஆண்கள் மீது தேவயானிக்கு எந்தவித மரியாதையும் இல்லை.அவர்களின் காம இச்சைகளை அம்பலப்படுத்துவதே அவளின் நோக்கம் என்று கூறுகிறார் குஷ்வந்த் சிங் ,இருவரும் நீலப்படங்கள் பார்ப்பது, திரையுலக பார்ட்டிகளுக்கு செல்வது, வீட்டில் மது அருந்த தேவயானி கம்பெனி கொடுப்பது என்று நட்பு வளர்கிறது. தேவயானி குடிக்க மாட்டார். ஆனால் குடிப்பதற்கு பேச்சுத் துணையாக இருப்பார். பல சினிமா பிரபலங்களின் பலவீனங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படி விவரிப்பார், ஒரு முறை தர்மேந்திரா பற்றி தேவயானி கிசுகிசு எழுதி விட்டார். படப்பிடிப்பில் அவருக்கு தினமும் இரண்டு நடிகைகள் உடல்பசிக்கு வேண்டுமாம். அது தவிர இரவில் மனைவியுடனும் படுக்கையைப் பகிர்வாராம். இதிில் ஹேமா மாலினியுடன் காதல் கல்யாணம் வேறு. இவர் தர்மேந்திராவைப் பற்றி இப்படியெல்லாம் எழுத கொதித்தெழந்த பஞ்சாபி சிங்கம் தேவயானியின் காரை மடக்கி வயல்களில் விரட்டினாராம். புடைவை கட்டியதால் ஓட முடியாமல் மாட்டிக் கொண்ட தேவயானியை கன்னத்தில் பளார் என அறைந்து கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு மிரட்டிச் சென்றாராம். இதற்கு குஷ்வந்த் சிங்கிடம் பலரும் கருத்து கேட்ட போது தர்மேந்திரா இடத்தில் நான் இருந்திருந்தால் என்னைப் பற்றி ஆபாசமாக எழுதிஇருந்தால் நானும் அப்படித்தான் செய்து இருப்பேன் என்றார் சிங். இதற்கு தர்மேந்திரா அவருக்கு போன் செய்து நன்றி கூறினார்.

இதனையடுத்து தேவயானியிடம் நட்பு குறைந்தது என்கிறார் குஷ்வந்த் சிங் , பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு உடல் பருத்து 53 வது வயதில் தேவயானி காலமாகி விட்டார். அவர் மரணித்த போது ஒருவர் கூட அருகில் இல்லாத அனாதையாகி விட்டார். மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடி அவர்களின் சாபங்களைப் பெற்றால் இப்படித்தான் முடிவு வரும் என்று உணர்த்துகிறது தேவயானியின் வாழ்க்கை

2 Comments on “குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life/செந்தூரம் ஜெகதீஷ்”

  1. கடைசி வரிகள் எழுத்தாளர் பெண்கள் மீது கொண்டுள்ள வன்மத்தை காட்டுகிறது.

    காமுகன் என்கிற பெயரை வாழ்நாள் அவமானமாக சுமந்து 90 வயது வாழ்வதை விட, காமுகனை அடையாளம் காட்டி எழுதும் பெண்ணின் ஆயுள் அல்பமாய் இருந்தாலும் ஏற்று கொள்ள தக்கது.

    துர் மரணத்திற்கும் சாபத்திற்கும் சம்பந்தம் இல்லை. கருவறைக்குள் இறந்து விடும் குழந்தை எத்தகைய சாபம் அடைந்தது?

    காமுகன் ஆயுதம் கொலை மிரட்டல், தற்கொலை மிரட்டல் இறுதியாக சாபம்.

Comments are closed.