செ.புனிதஜோதி கவிதை

பூ விழுதலை
இயல்பாய்
ஏற்றுக்கொள்ளும்
நிலமாய் இருந்திருக்கிறாள்

காலம் முழுதும்
அவள் மீது
வெயில்
படர்ந்தும்
ஒருமுறை கூட
சலித்துகொள்ளவில்லை
இவ் வாழ்வை

பனைமரத்தில்
இருவாசல் வைத்து
கட்டும்
தூக்கணாங் குருவியின்
கூடு போன்றது
வாழ்வு என்கிறாள்

வாழ்வை
இனிதாய்
காண்பவளிடத்தில்
இதுபோன்ற
சொற்களைத்தவிர
வேறு என்ன
எதிர்ப்பார்க்க?

இருள் நெருங்கமுடியா
ஒளியவள்..