வினோத செய்தி 3/தகவல் : அழகியசிங்கர்

உலகையே அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா லெபனானை ஆட்டிப் படைக்கும் பரிதாபம்

வாஷிங்டன், செப். 19-

மேற்காசியாவில் உள்ள மிகவும் குட்டி நாடான லெபனானில் அதிபர். பிரதமர் அடங்கிய அரசு உள்ளது;
ராணுவமும் உள்ளது. ஆனால், இவை அனைத்தும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதுவே, மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள நாட்டின் நிலை.
பயங்கரவாத அமைப்பு ஒரு நாட்டையே கட்டுப் படுத்துவது என்பது, ஆப் கானிஸ்தானில் தலிபான், காசா அடங்கிய பாலஸ் தீனத்தில் ஹமாஸ் ஆகி யவற்றின் வரிசையில், லெபனானும் உள்ளது.
வெறும் 10,000 சதுர கி.மீ., பரப்புள்ள, 54 லட் சம் மக்கள்தொகை உள்ள இந்த நாடு, அதிகாரப்பூர்வமாக குடியரசு நாடாக அறியப்படுகிறது.
ஆனால் இங்கு, ‘கன்பெஷனல் எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட கூட்டு ஜனநாயக முறையே உள்ளது. அதாவது, இங்கு அரசியல் மற்றும் ராணுவத்தில், ஒவ்வொரு குறிப்பிட்ட பதவிக்கும், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களே
நியமிக்கப்படுவர். நாட்டின் அதிபர் பத விக்கு மரோனைட் கத் தோலிக்க கிறிஸ்துவரே நியமிக்கப்படுவர். பிரதமராக சன்னி முஸ்லிம், பார்லிமென்ட் சபாநாயகராக ஷியா முஸ்லிம் நியமிக்கப்படுவர்.
துணை சபாநாயகர் மற் றும் துணை பிரதமர் பத விகளில் எப்போதும் கிரீக் ஆர்த்தோடெக்ஸ் கிறிஸ்துவர்கள், ராணுவத்தின் தலைமைத் தளபதியாக, ட்ரூஸ் எனப்படும் மதங்களின் கலவையான மதப்பிரிவைப்
பின்பற்ற பவர் நியமிக்கப்படுவர்.
அங்குள்ள பார்லிமென்ட் எம்.பி.,க்கள் பதவிகள் 6 : 5 என்ற விகிதத்தில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒதுக் கப்பட்டுள்ளது. கடந்த, 1920ல் பிரான்சின் காலனி ஆதிக்கத்தின்போது
இந்த அரசியல் முறை உருவாக்கப்பட்டது; தற்போதும் தொடர்கிறது. லெபனான் உருவாக்கப்பட்டபோது, முஸ்லிம்கள், சிரியாவுடன் இணைவதற்கு ஆர்வம் காட்டினர்.
அதையடுத்தே, இந்த நடை முறை உருவாக்கப்பட்டது. அதுவே தற்போது அங்குள்ள அரசியல் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது.

போர்

தற்போது அரசு, ராணுவம் அனைத்தும் ருந்தாலும், ஈரானின்ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டிலேயே
அனைத்தும் நடக்கிறது. எந்த ஒரு முடிவையும் இவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் செயல் படுத்த முடியாது. நிர்வாகம், ராணுவத்தில்
அரசு அனைத்து நிலைகளிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிகம் உள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள், எம்.பி.,க்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர்.
கடந்த, 1982ல், இஸ்ரேல் போர் தொடுத்தபோது, லெபனான் ராணுவத்தைவிட, சிறிய அளவில் இருந்த ஹிஸ்புல்லா அமைப்பே கடுமையாகப் போரிட்டது.
இதையடுத்து, கடந்த, 40 ஆண்டுகளில் அது தன் பலத்தை படிப்படியாக வளர்த்துக் கொண்டது.
இந்த அமைப்புக்கு ஈரானின் ஆதரவு உள்ளது. அங்கும் அரசு அமைந்திருந்தாலும், முஸ்லிம் மதத் தலைவர் அயதுல்லா காமெனியே அனைத்து
முடிவுகளையும் எடுப்பார். இதுபோலவே,லெபனானையும் உருமாற்றும் ஈரானின் திட்டமே, ஹிஸ்புல்லா அமைப்புக்கான ஆதரவு.
கடந்த, 1982ல் உருவான ஹிஸ்புல்லா அமைப்பு, தற்போது லெபனானில் நிழல் ஆட்சியை புரிந்து வருகிறது.
இந்த அமைப்பு லெபனானுக்கு மட்டுமல்ல, உலகுக்கே, குறிப்பாக மேற்காசியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
தற்போதைய லெபனானின் நிலவரம் மிகவும் பரிதாபமாக உள்ளது. அதிபர் பதவி நீண்ட கால மாக கலியாக உள்ளது.
அமெரிக்கா பொருளாதா ரத் தடை விதித்தது. ஈரான் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதனால், ஈரானின் நிதியுதவி கிடைப்பதிலும்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

ஆனாலும், ஆயுதங்களை தாராளமாக ஈரான் வழங்கி வருகிறது. இந் தப் பிராந்தியத்தில் எங்கு மோதல் ஏற்பட்டாலும், தன் சார்பில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை ஈரான் ஏவி வருகிறது.
மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் உள்ளிட் டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, பொருளாதாரம் ஒடிந்த நிலையில் உள்ளது. ஆனாலும், நாட்டிலும், உலகெங் கும் தன் இருப்பைக் காட் டுவதற்காக, இஸ்ரேலை அடிக்கடி சீண்டி வருகிறது ஹிஸ்புல்லா அமைப்பு.
லெபனானில் இதுவரை ஆட்சியில் இருந்தவர்களும், தற்போது ஆட் சியில் உள்ளவர்களும், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக எந்த பெரிய நடவடிக்கையும்
எடுக்க முயற்சிக்கவில்லை.
அவ்வாறு முயன்றவர்கள், மரணத்தையே சந்தித்தனர். தற்போது நீர்வாகம், ராணுவத்திலும், ஹிஸ்புல்லா பெருமளவு ஊடுருவியுள்ளது.
அதனால், லெபனான் அரசோ, ராணுவமோ அதன்மீது நடவடிக்கை எடுப்பதற்கு சாத்தியமில்லை.
காசா பகுதிகளில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத எதிராக அமைப்புக்கு இஸ்ரேல் போரிட்டு வருகிறது. அது ஓராண்டை எட்ட உள்ளது. ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும், ஹமாஸ் அமைப்பைவிட, ஹிஸ்புல்லா 10 மடங்கு அதிகமானது. அதனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நேரடியாக போர் தொடுப்பதற்கு இஸ்ரேல் தயாராக இவ்வை.
ஈரானின் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கு உள்ளதால், அது பெரிய போராக மாறி விடும் என்பதால், பதுங்கியுள்ளது. அதே நேரத்தில், தன் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
ஒருவேளை, இஸ்ரேலுக்கு எதிராக, ஈரான் தீவிரமாக இறங்கினால், அதில் ஹிஸ்புல்லாவும் சேர்ந்து கொண்டால், நிலைமை மாற வாய்ப்புள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது.
அவை இரண்டும் கைகோர்த்தால், ஹிஸ்புல்லாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ஆனால், லெபனானை கைப்பற்ற இஸ்ரேலுக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

தினமலர் 19.09.2024