
நான்
போஜராஜனல்ல
கவிதைக்கென உயிரை விட்டுவிட.
நான்
பிருதிவி ராஜனல்ல
ஒரு சம்யுக்தையை தூக்கிச் செல்ல.
நான்
தேசிங்கு ராஜனல்ல
செஞ்சிக் கோட்டையைக் கட்டி ஆள.
நான்
ராஜ ராஐனல்ல
தஞ்சையில் கோயிலை நாட்டிச் செல்ல
நான்
கவிராஜன் பாரதி வம்சம்
உயிர்ப்பிக்கும் கவிதை சொல்லி,
சம்யுக்தைகளுக்கு காதல் சொல்லி,
கோட்டைகளில் தமிழை ஏற்றி,
கோயில்களில் பாசுரம் பாடி,
திரிகின்ற தமிழ் வானம்பாடி.
நானுமது….
