உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை நினைவு படுத்திக்கொள்ள முடிகிறதா?” 20 படிகள் இருக்கும். கைபிடி இருக்காது. உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற 6 மாதம் ஆனது.

மண்குதிரை நேர்காணலில் சொன்னது.

முகநூலில் ஆர் . கந்தசாமி