தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian/கால சுப்பிரமணியன்

இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian (Han Kang), தமிழில் நண்பர் சமயவேலால் மொழிபெயர்க்கப்பட்டு, நண்பர் கலாபனால் தமிழ்வெளி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடனே உங்கள் பிரதிக்கு முந்துங்கள். தாமதித்தால் மறுபதிப்புக்காகக் காத்திருக்க நேரலாம்.

மரக்கறி – ஹான் காங்
தமிழில்: சமயவேல்
பதிப்பகம்: தமிழ்வெளி

இதே நேரத்தில் இன்று வடகொரியா பற்றியும் நண்பர் பா.ராகவனால் தமிழில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். உலகில் இன்றுள்ள கமிஸார்களில் ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவற்றின் மும்மூர்த்திகள்தான் முதன்மை வகிக்கின்றனர் என்று தலையில் அடித்துச்சொல்லலாம். எனவே Kim Jong Un பற்றித் தெரிந்திருக்க வேண்டாமா? ஹான் காங்கை விட கிம் ஜோங் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது உடனடி அத்தியாவசியம் அல்லவா? எனவே உங்கள் சலுகைப் பிரதிக்கு முந்துங்கள்.

வட கொரியா பிரைவேட் லிமிடெட் | பா. ராகவன் | பக்கங்கள் 528 | விலை ரூ. 650
இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. முன்பதிவுச் சலுகை விலை ரூ. 455.
(முன்பதிவு லிங்கை பின்னூட்டத்தில் காண்க.)

The Vegetarian (Han Kang) ஆங்கில நாவலைப் படிக்க நினைப்போர் எனது வாட்ஸ் அப் குழுவில் தந்திருக்கும் மின்நூலை இலவசமாகப் பெறலாம். (இதன் லிங்கையும் பின்னூட்டத்தில் காண்க.)