திண்டுக்கல்சமையல்/தட்டை முறுக்கு செய்வது எப்படி

.

தேவையான பொருட்கள்:-

பச்சரிசி மாவு – இரண்டு கப்
வறுத்து அரைத்த உளுந்து மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
எள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
பெருங்காய தூள் – இரண்டு ஸ்பூன்
ஊறவைத்த கடலை பருப்பு – 2 ஸ்பூன்
வெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :::

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு கப் பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

பின் வறுத்த மாவை நன்கு ஆறவைக்க வேண்டும். மாவு நன்கு ஆறியதும் அவற்றில் வறுத்து அரைத்த உளுந்து மாவு ஒரு டேபிள் ஸ்பூன், பொடிதாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் தூள் இரண்டு ஸ்பூன், கருப்பு அல்லது வெள்ளை எள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன், ஒரு மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு இரண்டு ஸ்பூன், வெண்ணெய் 1 1/2 ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து எடுத்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவிற்கு பிசையும் பதத்திற்கு பிசைய வேண்டும்.

இவ்வாறு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு வாழையிலை அல்லது பிளாஸ்ட்டிக் கவரில் எண்ணெயை நன்கு தடவி கொள்ளவும்.

உருட்டிய உருண்டைகளை எண்ணெய் தடவிய பேப்பரில் வைத்து தட்டையாக கையினால் விரித்து விடவும். இவ்வாறே எல்லா சிறு உருண்டைகளையும் தட்டைகளாக விரித்து விடவும்.

பின் தட்டி வைத்துள்ள தட்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

சுவையான தட்டை முறுக்கு தயார், இந்த தீபாவளிக்கு தட்டை முறுக்கை (thattai recipe in tamil) செய்து அசத்துங்கள்…..