வே.கல்யாண் குமார்/டாட்டா..டாட்டா.. உனக்கு டாட்டா.!

கலங்கின கண்கள்! கடவுளுடன்
இன்று கலந்திடச் சென்றீர்..
டாட்டா! கண்ணீரோடே
கவிதையில் சொன்னேன் டாட்டா!

பாட்டா தொடங்கி நாட்டில் தொழில்வளம்..
ஊசியில் தொடங்கி உலைக்கலம் வரையில்..
இரும்பைக் காய்ச்சி.. உருக்கி உலகினில்..
ஊருக்கு உழைத்தீர்!
பிரியாவிடை பெற்றீர் டாட்டா!
பேசவொரு வார்த்தையேது.. டாட்டா!

பல்தொழில் வித்தகரே..
பண்பாட்டுச் சித்திரமே!
தொல்பொருள் யாவும்
தொழிற்ச்சாலை தோறும்
நல்மனதோடு நாளும் உருவாக்கி..
நாட்டுக்கு உழைத்தீர் டாட்டா!
உனக்கு பாட்டுக்குள்
உரைத்தேன் டாட்டா!
ஆழந்த இரங்கலுடன்