தற்போதைய சீனாவின் துயரத்தைப் பார்க்கவேண்டும்/வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதலே ஒருவித அச்சம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே, அந்நாடு, தம் மக்களுக்குச் செலுத்தியது. அவற்றின் செயல் திறன் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
உதாரணமாக, ‘ஸ்லேட்’ வலைத்தளத்தில் உள்ள கட்டுரையில் இந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன:

//China could do more than just ramp up vaccination—it could use more-effective vaccines. So far, eight COVID vaccines have been approved by its government. The two that are most commonly used are CoronaVac and Sinopharm, says William Moss, the executive director of the International Vaccine Access Center, also at Johns Hopkins. And they don’t stack up to the mRNA vaccines used in the U.S.
Both CoronaVac and Sinopharm are inactivated vaccines, meaning they use viral particles that have been killed. They were first approved for emergency use in mid-2021. Clinical trial data at that time, which was based on the original Wuhan strain of the virus, deemed CoronaVac 51 percent effective, and Sinopharm 79 percent effective. This is significantly lower than the efficacy of the Pfizer and Moderna mRNA vaccines, which were both over 90 percent at the time of approval.
Inactivated vaccines may not help the body secrete the highest quality of antibodies. That’s because the inactivation process uses harsh chemicals like formalin, says Durbin. This weakens the antibody binding site of the inactivated virus. Basically, it’s harder for your immune system to “practice” on an inactivated virus, versus the replicas of the viral spikes that an mRNA vaccine teaches the body to synthesize. The result is that inactivated vaccines “don’t give a broad immune response,” she says.//

இந்தப் பின்னணியில் இருந்து தற்போதைய சீனாவின் துயரத்தைப் பார்க்கவேண்டும். தொடர்ந்து மருத்துவமனைகள் நிரம்புகின்றன, நோயாளிகளின் எண்ணிக்கை உயர்கிறது.

அமெரிக்க ஆய்வாளர் Eric Feigl-Ding, ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அடுத்த 90 நாட்களில், சீன மக்கள்தொகையில் 60 சதவிகிதம் பேரும், உலக மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேரும் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என்பது இவரது கணிப்பு.

நமது மத்திய அரசு, மாநில அரசு சுகாதாரத் துறைகளுக்கு கடிதம் எழுதி, உஷார்படுத்தியுள்ளது.

அதைவிட முக்கியம், நாம் மீண்டும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்பது தான்.
டிவிட்டரில் விஜயானந்த் என்ற கொரோனா ஆய்வாளர் இருக்கிறார். சீனாவில் புதிதாக எந்தக் கொரோனா திரிபும் உருவாகவில்லை. ஏற்கெனவே உள்ளவை தான். அவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை நாம் செலுத்திக் கொண்டிருப்பதனால், நாம் கவலை கொள்ளத் தேவை இல்லை என்பது இவரது முடிபு.

இந்தச் செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன. ஆனாலும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்னொரு சமூக, பொருளாதார பேரிழப்புகளை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது.