கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/டீ டைம் எப்படி உருவானது?……….

ஆசிரியர் கலைமகள்……………….

பொதுவாக நான் காப்பி பிரியன். ஆனால் என்று கலைமகள் பதிப்பாளர் ராஜன் அவர்களுடன் இணைந்தேனோ அன்று முதல் டீ குடிப்பதற்கும் பழகிக் கொண்டேன். இன்று மாலை ஒரு டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, இதை ஏன் சார் ” டீ “என்று அழைக்கிறார்கள்? என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

பொதுவாக இது போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் இந்திரநீலன் சுரேஷ் அவர்கள் தான் முன் வைப்பார். அவர் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார் எனவே ராஜன் அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் சரியான தகவலைச் சொல்வது தான் முறை!! அவரிடம் சொன்ன தகவலைக் கீழே பதிவிடுகிறேன்…………

கி.பி 1662 இல் போர்ச்சுகல் நாட்டின் இளவரசியான கேத்தரின் ஆஃப் ப்ரகான்ஸா இங்கிலாந்தின் அரசரான சார்லஸ் 2 ஐ மணம் செய்து கொண்டார். தேயிலைக்குரிய அந்தஸ்தை ஐரோப்பாவில் உயர்த்தியவர் அவர்தான். இளவரசியின் திருமணத்திற்காக போர்ச்சுகல் தரப்பில் இருந்து சீர்வரிசைகள் லண்டனுக்குச் சென்றது. அதில் ஒன்றே அரசி கேத்தரினின் விருப்பத்திற்குரிய தேயிலை.

கேத்தரின் அரசியானதும் கேத்தரினிடம் இருந்த தேநீர் பழக்கம் பிரிட்டன் உயர்குடி பெண்களிடம் வேகமாக பரவியது. மாலை நேரங்களில் பெண்கள் ஒன்றாக இணைந்து தேநீர் பரிமாறிக்கொள்ளும் “டீ” டைம் பழக்கம் இன்றளவும் ஐரோப்பாவில் வழக்கில் வந்தது இப்படித்தான்!!

Motcha என்று அழைக்கப்பட்ட தேயிலைக்கு Tea என்ற பெயர் வருவதற்குக் காரணமாக இருந்ததும் அரசி கேத்தரின் தான் என்ற கருத்து நிலகிவுகிறது. கேத்தரின் தேயிலைகளைக் கொண்டுவந்த பெட்டியில்

Transporte de

Ervas

Aromalsicus

என்று எழுத்தப்பகிட்டிருந்தது. இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் இணைந்தே TEA என்ற வார்த்தை உருவானது என்று டீ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒரு உபரி தகவலையும் கீழே தருகிறேன்…

பொதுவாக மூன்று வகையான தேயிலைச் செடிகள் பயிரிடப்படுகின்றன. ஒன்று சிறிய இலைகளைக் கொண்ட சீன வகை (க. சினென்சிஸ் சினென்சிஸ்). அடுத்தது பெரிய இலைகளைக் கொண்ட அசாமிய வகை (க. சினென்சிஸ் அசாமிக்கா). மூன்றாவது கம்போட் வகை.தேயிலைச் செடிகளை வகைப்படுத்துவதற்கான முக்கியமான அடிப்படை இலையின் அளவு ஆகும். இதன்படி மூன்று வகைகளை அடையாளம் காணலாம். 1. அசாம் வகை: பெரிய இலைகளைக் கொண்டது. 2. சீன வகை: சிறிய இலைகளுடையது. 3. கம்போட் வகை: நடுத்தர அளவுள்ள இலைகளைக் கொண்டது.

May be an image of coffee cup and tea

All reactions: