
என் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து எழுதிக் கொண்டு வா என்றாள் என் தோழி
சத்தியமாக எதை எழுதுவது.?
எதைவிடுவது.? என்று தெரியவில்லை.
எதையாவது எழுதிவிட்டால் எதற்கு உனக்கு இந்த வேலையென்று .?கோபித்து கொள்வாள்
எதையாவது விட்டுவிட்டால் உனக்குத் தெரிந்தது
இவ்வளவுதானா.? என்பாள்
ஏன் வம்பென்று வெறுங்கையை வீசியபடி போனேன்
அவளும் பதிலுக்கு வெறும் ஒரு புன்னகையை மட்டும் கொடுத்தாள்
அந்தப் புன்னகை என் வெறுங்கையைப் பிடித்துக் கொண்டு ஊர்சுற்றக் கிளம்பிவிட்டது
இப்போது
அவளும் நானும் வெட்டவெளியற்ற
இரண்டு வெறும் அவ்வளவுதான்.
தாராபுரம்
