
இந்தப் படத்திலுள்ள முருகனின் பெயர்
‘மயூரப் பிரியா’.
பல தசாப்தங்களுக்கு முன் வரையப் பட்டது. பழைய பஜனை மடங்களிலும், கோயில் வளாகங்களிலும் காணலாம். பச்சையும் மஞ்சளுமாய் இரண்டே வண்ணங்கள் தோய்ந்த சித்திரம்.
இளவயதில் இருந்தே இந்த முருகன் என்னைக் கவர்ந்து, சிந்தையைப் பிடித்தாட்டுவித்தபடி இருந்தான். இந்த விநோதப் பேரழகனின் அலைக்கழிப்பில், இவன் என் பூஜையறையில் இருக்க வேண்டுமென்று பத்து வருடங்களுக்கு மேல் அயராது தேடி வந்தேன்.
‘என்னைச் சேர விருப்பமில்லையா?’ என்று கசிந்துருகி வேண்டி வந்தேன்… பத்து வருடங்கள்…. எந்தப் படக்கடையைப் பார்த்தாலும் படத்தை விவரித்து கேட்டுப் பார்ப்பேன்.
என் வேண்டுதலுக்கு ஒருவழியாக செவி சாய்த்து, ஆச்சரியமான வழியில் என்னை வந்து சேர்ந்தான் என் குமாரஸ்வாமி!
வாராது போல் வந்த என் மாமணியின் அளப்பரிய பெருங்கருணையே என்னை வழிநடத்தி வருகிறது.
இந்த மயூரப்பிரியன் என் இல்லத்தில் சேர்ந்து முப்பத்தியைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
எங்கள் இல்லத்திற்கும் ‘மயூரப் பிரியா’ என்றே பெயர்.
அனைவருக்குமான என் பிரார்த்தனைகள்![]()
![]()
![]()
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்.
அய்யா உனக்கு ஆளாகும் போது அடியார் தமக்கும் எளியேன்.
பொய்யான காயம் அறவே ஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன்,
வையாளி யாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே!
(முருகன் அவநாசப் பத்து)

தெரியாத விவரம், அருமை