ஜெயதேவன்/பழைய நண்பரை இழந்தேன்

1975 . 80களில் வேலை தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்த நேரம். எங்கள் குடும்ப நண்பர் சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சினிமா

வெளியிட்டாளர் திரு தங்கப்பாண்டியன் அவர்கள் மூலமாக

சாதாரண ஆசிரியராக எனக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் ராஜேஷ். . எனது நண்பர் தங்கப்பாண்டியன் மூலம் திரை உலகிற்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார். அவருடைய பல போட்டோ

சினாப்புகளை எனக்கு காட்டினார். நான் சொன்னேன் உங்களுக்கு சிவாஜி முகஜாடை இருக்கிறது. நிச்சயம் திரைத்துறையில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து சொன்னது நினைவிருக்கிறது

அதற்குப் பிறகு பல சந்தர்ப்பங்கள் அவரை சந்தித்தோம்.

பலமுறை நகரப் பேருந்தில் ஒன்றாக பயணித்தோம். நடிகர் ராஜேஷ், வித்தியாசமான ஒரு மனிதர். ஒரு பக்கம் காரல் மார்க்ஸ் தத்துவங்களை ஆழமாக உரையாடும் அதே நேரம் ஜோதிடத்தில் ஆழ்நத பற்று கொண்டவராகவும் புலமை கொண்டவராகவும் அந்த வயதிலேயே இருந்தார். எனக்கும் ஏற்கனவே ஜோதிட ஆர்வம் உள்ளதால் அது பற்றி அதிகமாக உரையாடுவோம்

ஒரு முறை அவருடன் விஜயா வாகினி ஸ்டுடியோவிற்கு நுழைய முற்படும் போது இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டோம்

அப்போது அவருடைய ஆதங்கத்தை சொன்னார். “நேற்று முன்தினம் தான் மகேந்திரன் உடன் வந்தேன் .உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.. இன்று அடையாளம் தெரியாத மாதிரி உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்”

என்று வேதனை பட்டார்

நான் சொன்னேன்” இன்று மறுப்பவர்கள் நாளைக்கு உங்களுக்காக கதவுகளை திறந்து வைத்திருப்பார்கள்” என்று சொன்னேன்

உதிரிப்பூக்கள் மகேந்திரன் அவர்களின் அக்கா மகன்தான் நடிகர் ராஜேஷ் என்பது பலருக்கும் தெரியாது

“என்னுடைய வாய் முகூர்த்தம் போலவே முதல் முதலில் கன்னிப்பருவத்திலே” படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் .

சூட்டிங் முடித்துவிட்டு வரும் பொழுது சமயத்தில் ஆதங்கப்படுவார். .வடிவுக்கரசியோடு அவருக்கு பொருத்தமான ஜோடி பொருத்தம் இல்லை என்பது அவருடைய ஆதங்கம்

படம் வெளியானவுடன் “ஆனந்த விகடன் “அலுவலகத்தில் இருந்து கொண்டு நான் ஒரு கடிதம் எழுதினேன் . “கன்னிப் பருவத்திலே படம் பார்த்தேன். உங்களுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இருந்தாலும்” இன்னும் கொஞ்சம் நடிப்பில் எனர்ஜி இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறேன்” என்று கடிதம் எழுதி இருந்தேன்.அதற்கு நன்றி சொல்லி அடுத்தடுத்து அதனை சரி செய்து கொள்கிறேன்” என்று பதில் எழுதி இருந்தார். அப்போது அலைபேசி இல்லை

பிறகு பல படங்கள் நடித்த ஆரம்பித்த பிறகு ஒரு திரைப்பட நிகழ்வு. விழாவில் அருகருகே அமர்ந்திருந்தோம். நிறைய பேசினோம். பிறகு அவர் வளர்ந்துவிட்டார் .நான் நின்ற இடத்தில் நின்று கொண்டே இருந்தேன்

காலச்சுழச்சியில் அவர் தீவிரான் நடிகர் ஆகிவிட்டார் .ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் திரைத்துறையில் ஆர்வத்தை குறைத்துக் கொண்டு தொழில் துறையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்

மிக மிக நல்ல மனிதர். மிக மிகப் அறிவாற்றல் வாய்ந்தவர். ஒரு தீவிரமாய் தீவிரமான மார்க்ஸிஸ்ட் தீவிரமான அஸ்ட்ராலஜிஸ்ட் ஆக இருப்பது என்பது ஒரு வித்தியாசமான பரிணாமம் தான்

எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய மாமா மகேந்திரன் மூலம் திரை உலகு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணங்கள் குடும்பச் சூழலாக இருக்கலாம்

எப்படியோ தன்னுடைய இலக்கை அடைந்த ராஜேஷ் திரைத் துறையில் இருந்த விலகி இருந்தார்… தமிழ் திரைப்பட உலகம் அவரை இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும்

ஆனால் ஏனோ தவறிவிட்டது

ஆசிரியராக பணியை தொடங்கியவர் திரையில் நடிகர், தொழில் அதிபராக விளங்கி இன்று காணாமல் போய்விட்டார்

அவருக்கு என் அஞ்சலியை தெரியப்படுத்திக் கொள்கிறேன்

வாழ்க ராஜேஷ் நாமம்

May be an image of 1 person

One Comment on “ஜெயதேவன்/பழைய நண்பரை இழந்தேன்”

Comments are closed.