பா. சரவணனின் முகநூல் பதிவு

சாரு எழுதிய குப்பையை படித்து அதற்கு views ஏற்ற விரும்பவில்லை.

Abilash Chandran உங்கள் பதிவை ஒட்டி சில கேள்விகள் மற்றும் கருத்துக்கள் :

  1. இலக்கிய கூட்டத்துக்கு வந்தால்தான் அறிவு சீவியா ?

2.ராஜாவை குறிப்பாக ராஜாவின் இசையை வைதீக பிராமண என்று வகைப்படுத்துவது ஆணவம் மிக்க அறியாமை

  1. Pulp அல்லது popular எல்லாம் குப்பை , தரம் தாழ்ந்தது என்பது எப்போதோ காலாவதியான சிந்தனை. Popular art குறிப்பாக சினிமா சார்ந்த எதைப் பற்றியும் எழுதுபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல், கையேடு The secret politics of our desires compiled by Ashis Nandy. இதை வாசித்தால் நான் சொல்வது புரியும்.
  2. ராஜாவின் இசை பற்றிய ” இளையராஜாவின் இசையில் தத்துவமும் அழகியலும் – ரமேஷ் பிரேம் ” என்ற நூல் ராஜாவின் இசையின்
    நீள அகல ஆழங்களை விரிவாக அலசுகிறது. சாரு இதையெல்லாம் படித்திருக்குமா ?
  3. ராஜா , நாட்டுப்புற இசை, மேற்கத்திய .ஸ்திரியஇசை, “கர்நாடக சங்கீதம்” , மேற்கத்திய பாப் இசை அனைத்தையும் பயன்படுத்துகின்றர். ஆகவே ராஜாவுக்கு பன்னாட்டு இசை அறிவு இல்லை என்பது தவறான வாதம்.
  4. எந்தத் தமிழ் சினிமா ஆட்களுக்கும் சமூக அக்கறை பொறுப்பு இல்லை என்பது பொய் அபத்தம் கட்டுக்கதை. இந்தியாவும் அதிக அரசியல் பேசும் படங்கள் தமிழ்த் திரைப்படங்களே. வெட்டியான் வேடம் போட்ட கவுண்டமணி பாப்பானை பார்த்துப் பேசிய வசனம் முதல் , வெற்றி மாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் முதல் “மசாலா” படம் எடுக்கும் வெங்கட் பிரபு ( மாநாடு) வரை அரசியல் பேசிய, சமூக உணர்வு கொண்ட இயக்குனர்கள் ஏராளம் – உங்கள் நண்பர் இயக்குனர் ராம் உட்பட.
  5. சுதந்திரப் போராட்டத்தில் நாடகத்தின்
    பங்களிப்பு மறக்கவோ மறுக்கவோ முடியாத ஒன்று. விடுதலைக்குப் பிறகு பல நாடகக் குழுக்கள் காசே கண்ணாக செயல்பட்டு இருக்கலாம் என்றாலும் அதிலும் சமூக அக்கறை கொண்ட, திராவிட அரசியல் பேசிய நாடகக் குழுக்கள் பல இருந்தன. வாசிக்க வெளி ரங்கராஜனின் ” வெளிச்சம் படாத நிகழ் கலைப் படைப்பாளிகள் “

8 . ராஜா சிம்பொனி அதிகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் “அக்கறை ” புரிகிறது. அதே நேரத்தில் சினிமா மட்டுமல்ல வேறு எவரும் இந்தியாவில் இருந்து எத்தனை சிம்பொனி அல்லது மாற்று இசைக் கோர்வை அல்லது ஆல்பங்களை செய்துள்ளனர் ? பேசுங்கள் !

  1. ராஜாவின் சினிமா இசையில் மம்பட்டியான் பற்றிய நாட்டுப்புற பாடல் , தாலாட்டு , தெம்மாங்கு, கும்மி, ஒப்பாரி எனப் பல தமிழ் வாழ்க்கை சார்ந்த மண் சார்ந்த இசைக் கூறுகள் பரவிக் கிடக்கின்றன. இதைச் சீரழிவு என்ற வகையில் எப்படிச் சேர்ப்பது ?
  2. இளையராஜா அதிகாரத்தோடு சமரசங்கள் செய்கிறார் அதுவும் தற்போது பாஜக சார்பாக வெளிப்படையாக செயல்படுகிறார் என்பது உண்மை. ஆனால் அதுவே அவரது இசையை அளக்கும் அளவுகோல் என்பது உங்கள் இலக்கிய “முன்னோடிகள்” செய்த , செய்யும் மட்டமான பாலி மிக்ஸ் அன்றி வேறென்ன ?