ஆக்ராவில் என்னைக் கவர்ந்த ஒரு காஃபி ஷாப்../பாதசாரி விஸ்வநாதன் 

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..

ஆக்ராவுக்கு அடுத்து லக்னோ , நொய்டாவில் கிளைகளுடன் செயல் படுகிறது இந்த ஹோட்டல். ஆசிட் வீச்சால் முகம் சிதைந்து பிளாஸ்டிக் சர்ஜரிகப்புறம் பிழைத்த 38 பெண்கள் தற்போது பணியில் உள்ளார்கள்.. ஷான்வி எனும் தொண்டுநிறுவனத்தின் முயற்சியில் இது நடக்கிறது.

மதியம் ,இரவு உணவுவகைகளும் உண்டு..

உள்ளேசென்றேன்..மிக ரம்மியமான சூழல். சிறு நூலகம். அழகிய கைவினைப் பொருட்களின்காட்சி..

சுவரில் ஃபிரென்ச் பெண்ஒவியர் வரைந்த ,

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரியில் மீண்ட பச்சிளம் பெண் முகங்கள்.

மேலும் அங்கே பாதிப்பிலிருந்து

மீண்ட 6 இளம் சகோதரிகளையும் கண்டேன்.

“என்ன சாப்பிடுகிறீர்கள் ? ” – எனக் கனிவாக ஒரு தங்கை கேட்டார்.

“பிளேக் காஃபி “

இதன் ஒருங்கிணைப்பாளர்மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி அஜய் டோமர் , முன்னாள் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் ,கிரைம் & மெடிசின் பகுதிச் சிறப்புச் செய்தியாளர். நேர்ப்பேச்சில் அவர் சொன்னார் : ” 2013 மார்ச் 8 அன்றுப் ‘ஸ்டாப் அட்டாக் ‘ எனும் இயக்கத்தைத் தொடங்கினோம்..அதன் பின், மூன்றாண்டுகளுக்கு முன் இந்த கபே உருவானது..

ஃபிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பெண் ஒவியர் ஒருவர் எங்களின் இந்த முயற்சி குறித்து ஃபிரென்ச் , இந்தி,ஆங்கிலத்தில் ஓவியங்களுடன் ஒரு நூல் வெளியிட்டுள்ளார் .

காதல் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத , கருணையற்ற மூடர்கள் , காதலி கைவிடும் – rejection proposal தருணத்தில் இந்தக் கொடூரத்தைச் செய்வது என்பது தான் 50 முதல் 60 சதவிகிதமாகத் தொடர்கிறது..”