வண்ணதாசன் கவிதை

என்னைப் பகடி செய்யுங்கள்.
என்னைத் தாண்டிச் செல்லுங்கள்.
என்னைப் புறக்கணியுங்கள்.
என்னைத் தவிருங்கள்.
என்னைத் தனிமைப்படுத்துங்கள்.
என்னைக் கைவிடுங்கள்.
என்னை அனுமதிக்காதீர்கள்.
என்னைத் துரத்துங்கள்.
நான் இங்கேயே தான் இருப்பேன்
அதுவும் உங்களுடன்,

ஒரு ஓரமாக.
%
2015