சிறகா/சும்மா

சும்மா இருப்பதால்
சும்மா ஆகிவிடுமா இக்காலம்

பல ஆண்டுகளாக சும்மா இருந்த
மலைகளே இடம் பெயர்ந்து
தடம் அற்று அமிழ்ந்து போக

சும்மா காணாமல் தான்
போயிற்று
பெரியதாக ஒன்றுமில்லை ஆயினும்

சும்மா ஒரு பகிர்தல்
சுற்றி சுற்றி வருகிறது
சும்மாவான சும்மாவாக.