
பெண்ணையறிந்து
தன்னை மறந்து
பெண்ணுருவாகித் திரிந்திடினும்
வானோக்கித் தன்மை
காட்டிடும் வீரன்.
இவனைக் காத்திடவோ
இத்தனை பொல்லாப்பு?
சோமன் கட்டிடினும்
வேட்டியெனும் வேலி சுற்றிடினும்
ஊடுருவிப் பாயும் விந்தை காண்!
இவனன்றோ வீரன் –
தமிழ் மணங்கமழும் குறிஞ்சிநில மன்னன்?
கவிதையின் சீரும் சிறப்பும்
தளையற்ற இளமை வனப்பும்
இவன்கண் காண்மின் காண்மின்.
இவனைச் சிறைப் பிடித்திடவும்
உண்டோ வீரர்கள்
வீராங்கனைகள்?
