
இவன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். அந்த அகலமான கடைத்தெருவின் வலது கோடியிலிருந்த எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டிருந்தன. இவன் வேலை பார்த்த கடையையும் சற்று முன்தான் மூடியிருந்தார்கள். மறு கோடியில் இன்னும் நிறைய ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் திறந்திருந்ததை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. மணி இரண்டரைக்கு மேல் ஆகிவிட்டது. இடைவெளி விட்டு ஒளி வீசிக்கொண்டிருந்த தெரு விளக்குகள் எரிய, மெலிதான இருள் கவிழ்ந்து அமைதியாகக் காட்சி தந்தது தெரு. இரு பக்கங்களிலும் பெரியபெரிய மரங்கள் நிழலை நிறையப் பரப்பியபடி இருந்தன. தெருவின் நடுவிலும் ஓரத்திலும் சில கழுதைகள் இரண்டும் மூன்றுமாகக் குழுமி வித்தியாசமான கோணங்களில் அருகருகே உட்கார்ந்தவாறே தூங்கிக்கொண்டிருந்தன. ஒரு குட்டிக் கழுதை அருகில் மேய்ந்துகொண்டிருந்தது.
செழிப்பாக உயர்ந்திருந்த மரங்களைக் கடக்கும்போது அவற்றின் பாதுகாப்பான வளர்ச்சியினூடே நடப்பது தனக்கு மிகவும் ஆசுவாசமாய் இருந்தது என்று இவன் கண்டுகொண்டான். மரங்கள் ஆடி அசைந்தன. வேகமாய் வீசிய குளிர்ந்த காற்றில் இலைகள் அடிக்கடி சலசலத்தன. இவன் தலையைக் குனிந்து, மிக உன்னிப்பாக அதைக் கேட்டபடி நடந்தான். அந்த ஓசை இவன் மனத்தில் முதலில் இதமாய்ப் படர்ந்து, பின் ஏனோ ஆழமாய் வதைத்தது. அச்சிறு இலைகளின் மெலிதான அதிர்விலும் ஓசையிலும், விழுங்க எழும் கடலலைகளின் உயிர்ப்பை தான் உணர்வதாக இவன் நினைத்துக்கொண்டான். இதைத் தொடர்ந்து இவன் மனம் விரிந்து விசாலமடைவதாக உணர்ந்தான். இலைகளின் திரட்சியான சலனம் காதில் ரீங்காரமி இவன் நிமிர்ந்து தெருவைப் பார்த்தான்.
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. அதன் உறங்கிய முகம் பரிதாமாக இருந்தது. மூடிய கடைகள், பரபரப்புடன் இயங்கி, பின் சோர்த்து நித்திரையில் ஆழ்ந்துவிட்ட விலைமாதர்களாய்க் காட்சி தந்தன. வின் பகல் நேரத்து கதியும் இயக்கமும் இவன் மனத்தில் நிழலாடி இப்போது படர்ந்துவிட்ட அமைதியையும், அந்த முற்பகல் பதி பரப்பையும் அழுத்தமான காட்சிகளாய் வரைந்து மனத்தில் கொண்டு நிறுத்தினான். பின், நிதானமாக அவற்றை ஒப்புநோக்க ஆரம்பித்தான் இதில் ரொம்பவும் லயித்துப்போனான். உற்சாகம் பொங்கத் திடீரென்று மனத்தின் கதியை மாற்றி அந்த இரு காட்சிகளையும் மீண்டும் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாய் மாற்றிமாற்றி வேகமாக வந்துபோக செய்து சந்தோஷம் கொண்டான். பின் ஓரிடத்தில் தன் மனப்படத்தை இரவின் அமைதியான காட்சியோடு முடித்து அதில் ஒன்றிப் போனான். தெரு முன்பைவிட அமைதியாய் விளங்கிற்று.
மெல்லத் தலையை உயர்த்தி மரங்களுக்கப்பால் விரிந்த வானத்தைப் பார்த்தான். நிலவு எங்கோ ஒரு கொழுத்த மேகத்தின் பிலன் மறைந்து கிடந்தது. எங்கும் நட்சத்திரங்கள் இயற்கையின் சிதறிய புதர்களாய் ஜொலித்துக்கொண்டிருந்தன. சற்று நேரம் அதையே வெறித்து பார்த்தான். வானம் இவன் விழிகளைச் சுருக்கி விரிந்துகொண்டு, சென்றது. திடீரென்று இயற்கையின் அந்தக் கள்ளமற்ற பிரம்மாண்ட தின் முன் இவன் ஓர் அற்பப் புள்ளியாய்ச் சுருங்க ஆரம்பித்தான் மனத்தில் எங்கிருந்தோ ஒரு வறட்சி பரவி உலுக்கிற்று. இவன்உலர்ந்து போனான். மறு கணம் தன்னுள் நிறைந்து கிடக்கும் சூன்யத்தைச் சிறிதும் மிச்சமில்லாமல் பிரதிபலித்து நீண்ட அந்த முடிவற்ற வானை காணச் சகிக்காமல் நடுங்கியபடியே தலையைக் கவிழ்த்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
நன்றாகப் புலர்ந்துவிட்டிருந்த பிரக்ஞை இப்போது இவனை முழுகாய்க் கவ்விக்கொண்டது. மூளை ஏதாவது ஒன்றைத் தொடர்ச்சியாக மென்று அசைபோடக் குதி உயர்த்திப் பரபரத்தது.ஆனால் இவனுள் திரண்ட நினைவுகள் அனைத்தும் அறுந்த நூல்களாகவும், மூலம் தப்பிவிட்ட ஞாபகங்களாகவுமே தெறித்து விழுந்தன. அவை வேகமாய் மறையவும் செய்தன. அந்த நிலையின் அவஸ்தையை அப்போது அபாரமாய் உணர்ந்துகொண்டிருந்தான் இவன். மூளை பயத்தால் சிலிர்த்துக்கொண்டேயிருந்தது. இவன் ஒரு மெலிதான திரவமாக இளகி வழிந்து கரைந்துகொண்டே இருந்தான். அப்போது தோலைவில் எங்கோ வெடித்த பட்டாசுகளின் சப்தம் இவனைத் திடீரென்று கலைத்தது. இவன் அதைச் சபிக்கும் முன்னால் அது அடங்கிப்போயிற்று. அந்த வேட்டொலிகள் வந்த திசையையும் தெருவையும் ஊகித்துத் தீர்மானிக்க ஒரு கணம் முற்பட்டு, பின் அதையும் கைவிட்டான். தெருவை மீண்டும் ஒரு சுற்றுப் பார்த்துக் கோண்டான். பிறகு மெல்லத் தலையைத் திருப்பி, அவசரமாய் நீண்டு மெதுவாய்ச் சுருங்கும் தன் நிழலை ஒரு சாரமற்ற சிரத்தையுடன் வெறித்தபடி நடந்தான். இவனுக்குப் பின்னால் ஒரு கழுதை கத்த ஆரம்பித்தது.
தெருவின் இடது கோடியில் இயக்கம் சுறுசுறுப்பாக இருந்தது. ஆண்களும் பெண்களும் முகங்களில் சிரிப்பும் புன்னகையும் தவழ கைகளில் பைகளுடனும் குழந்தைகளுடனும் இங்கும் அங்கும் கண்கள் பாபளக்க உலவிக்கொண்டிருந்தனர். கடை வாசல்களில் கூட்டம் திறைய இருந்தது. ஒருசில கடைகள் மூடப்பட்டிருந்தன. அவற்றின் வாசல்களில் ஒளியில் சோம்பிய இருள் பரிதாபமாய்ச் சிதறியிருந்தது. இரு பெரிய கடையின் பெயர்ப் பலகையில் பதிக்கப்பட்ட எழுத்துகள், அழகிய சிவப்பு நிறத்தில் அக்கடையின் விழிப்பை உணர்த்தியபடி விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தன. ஏறக்குறைய எல்லாக் கடைகளின் பெயர்ப் பலகைகளைச் சுற்றியும் சிறியசிறிய மின் விளக்குகள் எரித்தும் அணைந்தும் அலங்கரித்துக்கொண்டிருந்தன. தெருவில் ஒளியும் இருளும் மாறிமாறிக் குவிந்துகொண்டேயிருந்தன. இவன் அதையே கவனித்தபடி நடந்தான்.
மெல்ல ஊர்ந்துகொண்டிருந்த இவன் கால்கள் மூலையில் இருந்த பெட்டிக்கடை அருகே மிக இயல்பாகச் சென்று நின்றன. ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்து அதை அசாத்தியமான தாகத்துடன் இழுத்தான். புகை நெஞ்சை நிறைத்ததும் இதமாக இருந்தது . திரும்பி நின்று கடைத்தெருவைப் பார்க்க ஆரம்பித்தான். அது நாளைய திருநாளை எதிர்கொள்ளப் பூண்டுவிட்டிருந்த கோலாகலக்துடன் பேரழகாய் மிளிர்ந்துகொண்டிருந்தது. மனிதர்கள் அங்குமிங்கும் அலைக்கழிந்தாலும் நெருங்கிக்கொண்டிருந்த பண்டிகையில் ஞாபகம் அவர்களின் மனங்களைப் பூரிக்கச் செய்துகொண்டிருந்தது. இவன் இந்தக் கோணத்திலிருந்து தெருவின் அழகையும் இயக்கத்தையும் தான் மிகவும் ரசித்ததாக நினைத்தான். சிறிது நேரம் அதையே லயித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். அப்போது இவனுக்கு வெரு சமீபத்தில் ஒரு நீண்ட பட்டாசுச் சரம் வெடிக்க ஆரம்பித்தது. இவன் மனம் அந்த சப்தத்தை ஏற்று சந்தோஷத்தில் ஆழ்ந்தது.
அந்தப் பட்டாசு சரம் வெடித்து முடிய வெகுநேரம் பிடித்தது போல் தோன்றியது. அது வெடிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே இவன் தன்ணுணர்வு மிகுந்து, தனக்குள் அலைமோத ஆரம்பிக்க விட்டிருந்தான். அது வெடித்து ஓய்ந்ததும், திடீரென்று அந்தத் தெ வின் ஒளி மிகுந்த அழகிய காட்சி இவனுக்குத் திகட்டியது. மாலை நேரத்து அலைகளாய் குதித்து ஓடிக்கொண்டிருந்த மனத்தின் வேகம் தளர்ந்தது. உற்சாகம் கலைந்து பறிபோயிற்று. இவன் மனம், இவரை அந்நியமாக்கி அந்த இரவின் பரவசமான காட்சியில் ஆழ்ந்து எங்கோ மறைந்தது. இரவை முழுவதும் உண்ண முடியாமல் அதையே உடுத்திக்கொண்டு விழி சிமிட்டிய சின்னச் சுடர்கள் இவனைச் சிதற அடித்தன. தெருவில் பரபரப்புடன் குழுமி நடமாடிக்கொண்டிருந்த மனிதர்களை விரக்தியுடன் பார்த்தான் இவன்.
அந்தப் பட்டாசுக் கடையின் வாசலில் கூட்டம் நிறையவே இருந்தது. இங்கு வீசிய பிரகாசமான ஒளியில் குழைந்து அவர்கள் வெறும் உருவங்களாய்த் தென்பட்டனர். இவன் சிகரெட்டை மீண்டும் ஆழமாக இழுத்தபடி அந்த உருவங்களில் அலட்சியத்துடன் லயித் தான் அந்த உருவங்களுக்கு, அவற்றின் வடிவங்களுக்கேற்ப, உயரங்களுக்கேற்ப முகங்களை மனத்திற்குள், நிதானமாக வரைந்து பொருத்த ஆரம்பித்தான். பிறகு அந்த முகங்களுக்கு பாவங்களையும், அவற்றில் தொனிக்கக்கூடிய மனங்களையும் இவனே சிருஷ்டித்தான். பிறகு நட்சத்திரங்களை எண்ணுவதுபோல், அந்த மனங்களில் பாயக்கூடிய, விளையக்கூடிய சின்னச்சின்ன ஆசைகளையும் பயங்களையும் கற்பித்துக்கொண்டான். பிறகு அந்தச் சின்ன மனங்களை ஆட்டிப் படைக்கிற மூளைகளையும், அவற்றின் அசாத்தியமான பயணத்தையும் அதன் இலக்கற்ற சுழற்சியையும், அதன் கதியையும் இவனே உருவாக்கி, தீர்மானித்து, பிறகு அவர்களுக்காக ரொம்பவும் பரிதாபப் பட்டான்.
மீண்டும் இவனுக்கு வெகு சமீபத்தில் எங்கோ ஒரு பட்டாசு வெடித்தது. கண்முன் தோன்றிய முகங்கள் சிதற மீண்டும் கடைத் தெருவை விழியுணர்ந்து பார்த்தான். இவனைப் பற்றிய பிரக்ஞையற்று சிறுக் கடைத்தெரு சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. இவன் சலையைக் கடந்து ஒரு சிறிய தெருவுக்குள் நுழைந்தான். அந்தத் தெருக் கோடியில் இவன் வீடு இருந்தது.
தெருவுக்குள் நுழைந்ததும் நடையைத் தளர்த்தி எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்க்கத் தீர்மானித்தான். தெரு இன்னும் விழித்திருக்கவில்லை. தெருவின் இரு ஓரங்களிலும் மரங்கள் வரிசையாக நின்றிருந்தன. ஒரு கழுதை அசையாமல் தெருவின் மையத்தில் நின்றிருந்தது. இவன் அதைக் கடக்கும்போது அது லேசாகத் தன் இடது காதை அசைத்துக் கொண்டது.
இவன், வீடுகளைச் சிரத்தையுடன் பார்க்க ஆரம்பித்தான். எல்லாம் நடுத்தர மக்கள் வாழ்கிற சின்னச்சின்ன வீடுகள். இவன் வீடுகளின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்தவர்களைப்பற்றி நினைக்கத் துவங்கினான். அவர்களின் முகங்களையும், அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலைகளையும் கற்பனைசெய்துபார்த்தான். நிமிர்ந்து நேராகப் படுத்திருந்தவர்கள், கவிழ்ந்து படுத்திருந்த, பக்க வாட்டில் சாய்ந்து காலிடுக்கில் தலையணை வைத்துப் படுத்திருந்தவர்கள், தலை மட்டும் லேசாய்த் திரும்பி வாயிலிருந்து ஜொள்ளொழுகி தலையணை நனைத்துக்கொண்டிருந்தவர்கள், வாடிய பூவின் வாசம் ‘கமகம’க்க உறங்கிப்போன பத்துப் பன்னிரெண்டு வயதுப் பெண் பிள்ளைகள், விரல் சப்பிப் புன்னகைத்த குழந்தைகள். இவன் வாஞ்சையுடன் புன்னகைத்துக்கொண்டான்.
ஒரு வீட்டின் திண்ணையிலிருந்து உறங்கிக்கொண்டிருந்த வயோதிகர் ஒருவரின் இருமல் சப்தம் கேட்டது. தொடர்ந்து அவர் ஒரு சரடாக இரும ஆரம்பித்தார். அவருக்குக் காசநோயாக இருக்குமோ என்று நினைத்து அவருக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டான். இருமல் சப்தம் அடங்கி, சிறிது நேரம் நடந்திருப்பான். அதற்குள் மறுபடியும் ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையில், திண்ணையில் தூங்கியபடி ஒரு இளைஞன் முனகிக்கொண்டிருந்தான். இவன் மெல்ல நகர்ந்து அந்த வீட்டின் வெளிச் சுவரை நெருங்கினான். திடீரென்று அவ்விளைஞன் உரக்க உளறினான். “கோயிலுக்குப் போனாளாம்… கோயிலுக்கு… என்னடி பெரிய கோயில்!… அடுத்த வேளை சோத்துக்கு வளியெக் காணம், கோயிலு என்ன வேண்டி யிருக்கு கோயிலு… சனியென, என்னடி ஐயோ ஐயோன்னு கத்தறே, அடிச்சு பல்லெல்லாம் உதுத்துப்புடுவேன் ராஸ்கல்… கோயிலுக்குப் போனாளாம் கழுதை.” அந்த இளைஞன் மெல்ல அடங்கிப் போனான். அந்த இளைஞன் உளறியதை ஒரு கணம் நினைத்தபோது இவனுக்குச் சிரிப்பு வந்தது. இந்த இளைஞனைப் போலவே அத் தெருவில் உறங்கிக்கொண்டிருந்தவர்களில் பலரும் ஏதாவதொரு கனவைக் கண்டுகொண்டிருப்பார்கள். இவன் தன் சமீபத்திய கனவொன்றை நினைவுகூர்ந்தான்.
அது ஒரு பெரிய அடர்த்தியான வனம். வனத்தின் நடுவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்ந்துவிட்ட ஏழெட்டு மரங்களும் அவற்றின் அருகருகே புதர்களும் ஒரு சிறிய பாறையும் சேர்ந்து அரை வட்டமாகச் சூழ்ந்திருந்த ஒரு புல்வெளி. அதிகாலை அல்லது சாய்கிற பொழுதாய் இருக்கக்கூடும். புல்வெளியில் இரண்டு யானைகள் புணர்ந்துகொண்டிருந்தன. யானைகளின் பூதாகரமான உடல்கள் வெகு எளிதாக இசைந்துகொண்டிருந்தன. ஓரிரு கணங்களுக்குப் பின் யானைகளின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு காட்டெருமை யானைகளை வியப்புடன் பார்த்தபடி நின்றது. எருமை சரியாக ஆண் யானைக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தது. பிறகு அது திடீரென்று ஆண் யானையின் வாலில் தனது பற்களைப் பதித்துக் கடித்தது. ஆண் பானை தனது வேகத்தை அதிகரித்தபடி சிறிது நகர்ந்துகொண்டது. மீண்டும் எருமை கடித்தது. இம்முறை அது யானையின் அகன்ற புட்டத்தில் கடித்தது. யானைகளின் வேகம் மேலும் அதிகரித்தது. காட்டெருமை மீண்டும்மீண்டும் யானையின் புட்டத்தைச் சுற்றிச் கற்றிக் கடித்துக்கொண்டே இருந்தது. யானைகளின் வேகமும் அசுரமாய்க் கூடிக்கொண்டே சென்றது. பின் திடீரென்று யானைகள் இரண்டும் மறைந்துவிட, காட்டெருமை மட்டும் எதையோவெறித்துக்கொண்டு நின்றது. அது வெறித்துக்கொண்டிருந்த திசையிலிருந்து சிறிய பாறைமீது கறுப்பு முயல் ஒன்று அமர்ந்திருந்தது. அது மிகவும் பயந்து கால்களைக் குவித்து, கண்களைச் சிமிட்டிச்சிமிட்டி, எங்கோ பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கறுப்பான பட்டுப் போன்ற சருமம் பார்க்க வெகு அழகாக இருந்தது. சிறிது நேரமாக வெறித்துக் கோண்டிருந்த காட்டெருமை, மறந்துவிட்டதைத் திடீரென்று இளைவுகூர்ந்ததைப் போல் முயலை நோக்கிப் பாய்ந்தது. முயல் கீழே குதித்து ஓட ஆரம்பித்தது. எருமை புதர்களை மிதித்தும் தாண்டியும் ஆக்ரோஷத்துடன் முயலைத் துரத்தியது. ஓடிக்கொண்டிருந்த முயல் எதேச்சையாய் ஒரு பெரிய ஆழமற்ற குழிக்குள் விழுந்தது. பின் அங்கேயே பதுங்கிக்கொண்டது. எருமை ஆர்வத்துடன் தன் வாயைப் பிளந்தபடி குழிக்குள் தலையை விட்டது. அதன் பற்கள் சரியாக முயலின் பிடரியில் பதிய, அது மீண்டும் தலையை வெளியே எடுத்து நிமிர்ந்தபோது முயலின் குடலும் வயிறும் தனித்தனியாய்ச் சரிந்து கீழே விழுந்தன. பின், எருமை மிக நிதானமாக முயலைச் சாப்பிட்டு முடித்த பின் நீண்ட நாக்கைச் சுழற்றிச்சுழற்றித் தன் வாயை சுற்றிலும் நக்கிக்கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த வனம் குழையத் துவங்கியது. வேகவேகமாக அந்த வனத்திலிருந்த எல்லாத் தாவரங்களின் இலைகளும் உதிர்ந்து விழுந்தன. பின், அவற்றின் அழுத்தமான, வெளிறிய பச்சை நிறங்கள் ஒன்றாய்க் குழைந்து ஒரு பிரம்மாண்டமான பச்சை மேகமாய்த் திரள, அம்மேகம் மேலே உயம் ஆரம்பித்தது. வனத்தில் எங்கோ ஒரு மூலையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இலையற்ற கொடிகளும் மரங்களும் கற்களும் மண்ணும் அந்த நெருப்பில் எரியத் துவங்கின. பின், அவை பழுப்பும் கறுப்புமான புகையாய் மெலிந்து வானத்தில் எழும்பிப் பச்சை மேகத்தை ஒட்டி நகர ஆரம்பித்தன. சட்டென்று மேகம் எங்கோ தங்கிவிட, புசை மட்டும் படர்ந்து உயர்ந்தது. அது வானத்திற்கப்பால் சென்று, திரண்டு தடித்துத் திசைகளை விழுங்கிய பின் கறுப்பாய் உறைந்துபோயிற்று
இவன் கையிலிருந்த சிகரெட்டைக் கடைசியாக இழுத்துவிட்டு வீசினான். வீடுகளின் உட்பக்கச் சுவரோரம் வளர்ந்திருந்த தென்னை மரங்கள் காற்றில் அசைய, லேசாக மழை துளிர்க்க ஆரம்பித்தது. இவன் மெதுவாக நடந்தான். அந்த லேசான தூறலில் நனைவது ரொம்பு இதமாக இருந்தது. தெரு விளக்கின் ஒளியில் மழைத் துளிகள் வீழ்வதை ரசித்துக்கொண்டே நடந்தான். இவனுக்கு ஓரிரு கஜங்களுக்கு முன், தெருவின் மையத்தில் ஏதோ ஒன்று கிடந்தது. இவன் அது. என்னவாக இருக்கும் என்பதை உடனடியாக ஊகித்துக்கொண்டான் பிறகு சற்றும் அவசரமில்லாமல் அதை நெருங்கிப் பார்த்தான். வேகமாய்ப் பாய்ந்த லாரியில் சிக்கி மடிந்துவிட்ட பெருச்சாளி ஒன்று கிடந்தது. நிதானமாக அருவருப்பில்லாமல் அதன் பிணத்தைப் பார்க்க ஆரம்பித்தான். தூரத்தில் எரிந்த தெரு விளக்கின் மங்கலான ஒளியில் அதைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இவன் குனிந்து உட்கார்ந்து அதைப் பார்த்தான். அதன் குடலிலிருந்து வால்வரை பிளந்து சிதறி வீட்டிருந்தது. பாதிக்குமேல் சிதைந்துபோய்விட்டிருந்த அதன் வாலின் மிச்ச நுனியிலிருந்த சின்னச்சின்ன ரோமங்கள் லேசாகக் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. இவன் அதற்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டே தெருவை நிமிர்ந்து பார்த்தான். சாவதற்கு முன் இந்த மூட ஜந்து என்ன உணர்ந்திருக்கும்? ஆம், ரொம்பப் பயந்துதான் போயிருக்க வேண்டும். அதன் தலையும் கழுத்தும் சக்கரத்திலிருந்து தப்பிய பிறகும் அதன் உடலும் வாலும் நசுங்கிச் சிதையும் முன்பும் இடைப்பட்ட காலத் துகளில் எத்தனை உக்கிரமாய் அது பயத்தை உனார்ந்திருக்கும்! அந்த வீரியமான துகள், அதன் சின்ன வாழ்க்கையின் எத்தனை முக்கியமான துகள்! சாவின்போது பிராணி மனிதனைவிட வேறல்ல. ஆனால் வாழ்வில் இவன் அதைவிடவும் மூடன். வாழ்வு தேடுகிலும் சின்னச்சின்ன பயங்களைத் தவிர வேறெதுவும் இவன் உணர்வதில்லை. ஒன்றை ஒன்று விழுங்கி மற்றதைப் பற்றி மற்றொன்றாய் மாறி அலைக்கழிக்கும் பயத்தின் தன்மையே வேடிக்கையானது. சிறிய பயத்தைப் பெரியது விழுங்கி… இவன் தனக்குள் பேசிக் கொண்டே எழுந்து நடந்தான்.
தன்னைக் கடந்து போகும் இவனைப் பார்த்ததும், உறங்கிக் இடத்த ஒரு நாய் விழித்து, திடீரென்று எழுந்து குரைத்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத இவனை, அந்தச் சப்தம் இவன் தலைக்குள் தெளிந்த எண்ணங்களைச் சுத்தமாய்த் துடைத்தெறிய, பயம் தாக்கி அடைத்தது. இவன் வலது காலுக்கு வெகு சமீபத்தில் இவனைத் தோடர்ந்து வந்தது நாய். அது நீட்டியும் சுருக்கியும் குரைத்துக் கொண்டேயிருந்தது. இவன் முழுதாகத் தன்னை உணர்ந்து நடந்து கொண்டிருந்தான். நாயின் உறுமலுக்கும் குரைப்புக்கும், ஒரு குரைப்புக் கும் மறு குரைப்புக்கும் இடையில் தெறித்த சிறு அவகாசத்தில் நாயின் மறு குரைப்போ, உறுமலோ, தன்னைச் சிறிதும் சலனித்துவிடக் கூடாது என்று அவசரமாய்த் தீர்மானித்துக்கொண்டான். அப்படி இருக்சு ஒவ்வொரு முறையும் இவன் மிகவும் பிரயாசைப்பட்டுப் பட்டுத் தோற்றுப்போனான்.
சிறிது நடந்த பின், இவன் இன்னும் வெகு தூரம் நடப்பான் என்பதை உணர்ந்துகொண்டதுபோல் ஓரிடத்தில் நாய் சட்டென்று நின்று இவனைப் போக விட்டது. பின் அது அவசரமில்லாமல் திரும்பி, லேசாக உறுமி, பார்த்துக்கொண்டே ஓடிப்போயிற்று: போய்விட்டதை இவன் லேசாகத் தலையைத் திருப்பிப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக்கொண்டான். அதே சமயம், தனக்குப் பசித்ததை இவன் சட்டென்று உணர்ந்தான்.
மிக இயல்பாக, இவன் நடையின் வேகம் முன்பைவிடக் குறைத்து போயிற்று. இவ்வளவு நேரமும் பசியை மறந்து நினைவுகளில் மூழ்கிப் போயிருந்ததுபற்றி நினைத்துக்கொண்டான். தொடர்ந்து, கொச்சையான வார்த்தைகளில் தன்னையே ஏசிக்கொண்டான். நினைவுகள் அர்த்தமற்ற நினைவுகள், காட்சிகளை அரிக்கும் நினைவுகள், இடம் விட்டு இடறிவிட்டு உறையச் செய்யும் நினைவுகள், காலத்தைச் சக்கையாய் உறிஞ்சிவிடும் உருவமற்ற பிணங்கள். நினைவுகளையும் சபித்தான். துளிர்த்துக்கொண்டிருந்த மழை ‘சடசட’வென்று சப்த்ததுடன் கனக்க ஆரம்பித்தது. இவன் துரிதமாக நடக்க ஆரம்பித்தான். வீட்டை நெருங்க நெருங்க இவன் மனத்தில் சலிப்பும் களைப்பும் அவசரமாகப் பரவின.
இவன் ஒரு நீண்ட சந்திற்குள் நுழைந்தான். அந்தக் குறுகலான சந்தின் இடப் பக்கச் சுவரோரம் குடங்களும், டின்களும், ஒரு ஜாதிக்காய் பெட்டியும், அதை அடுத்து துவைக்கிற சிறிய கல்லும் வரிசையாக இருந்தன. வலப் பக்கம், துருப்பிடித்த பழைய தகரப் பெயர்ப் பலகைகளையும் மரப் பலகைகளையும் இணைத்து நிமிர்த்திச் சுவராக நிறுத்தியிருத்தப்பட்டிருந்தது. அதன்மேல் வீடு துடைக்கிற, உடுத்திச்செல்கிற கந்தல் துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. சந்தின் தரை குழிகளாகப் பெயர்ந்து கிடந்தது.
வீட்டின் கதவை அடைந்து அவசரமாய்த் தட்டினான். அந்தச் சத்தின் அசிங்கமான சூழலும் தன் சிறிய வீட்டின் அசௌகரியமான தினைவும் பசியும் அந்தக் கணத்தில் இவனை மிகவும் பாதித்தன. கதவை மறுபடியும் கோபத்துடன் தட்டினான். கதவு திறக்கப்பட தேரம் பிடித்தது. அந்தச் சில கணங்கள் பாறைகளாய்க் கனத்தன. இலையிலுள்ள நரம்புகள் அனைத்தும் இழுபடுவதைப் போல் உணர்ந்தான்.
மீண்டும் ஆக்ரோஷமாய் மிக வேகத்துடன் பலமாகக் கதவைத் தட்டினான். தட்டிக்கொண்டேயிருந்தான்.
சிறிது நேரம் கழித்து இவன் தாய் உள்ளே இருந்த மின்விளக்கைப் போடாமலேயே கதவைத் திறந்து மௌனமாக நின்றாள். உட்பக்கச் சுவரின் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிம்னி விளக்கின் ஓளியில், நரைக்கத் துவங்கியிருந்த அவளது கேசம் மின்னியது. இவன் உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டு அடுப்பைப் பார்த்தான். மீண்டும் விளக்கை எரிச்சலுடன் அணைத்துவிட்டு அந்த மங்கலான ஒளியில் உடை மாற்றிக்கொள்ளத் துவங்கினான். நேற்று மதியம் வெள்ளையடித்த அடுப்பு அப்படியே இருந்தது. இன்று சமைக்கவே இல்லை. உடை மாற்றிக்கொண்ட பிறகு இவனுக்காக விரிக்கப்பட் இருந்த பாயில் சாய்ந்தான். ஓரிரு கணங்களுக்குப் பின் உடலை நன்றாகத் தளர்த்திக்கொண்டு கூரையை வெறிக்க ஆரம்பித்தான்.
அருகில் படுத்திருந்த இவன் தாய், அந்த இருட்டினூடே இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஏண்டா சாப்பிடலையா?” திடீரென்று அவள் மௌனத்தைக் கலைத்தாள்.
இவன் பேசாமல் இருந்தான். மீண்டும் அவளே பேசினாள். இருக்கிறதச் சாப்பிட வேண்டியதுதான். பாரு ராஜிக்கா, பாவம்! சோறு கொடுத்தனுப்பிச்சா சாயந்தரம். வேணும்னா எடுத்துச் சாப்பிடு.”
“பிச்சை வாங்கின சோறு எனக்கெதுக்கு. போய் ‘டிச்’சுலே பாடு,” இவன் அவமானமும் விரக்தியும் கலந்த குரலில் கூறினான்.
அவள் ஏதாவது பதிலுக்குச் சொல்லுவாள் என்று சங்கடத்துடன் எதிர்பார்த்தபடி, அவள் பேசுவதற்குச் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஊகித்துக் காத்திருந்தான். கூரையின் ஒரு மூலை யில் சொருகப்பட்டிருந்த தகரத்தின்மீது விழுந்த மழைத் துளிகளில் ஒலி சீராகக் கேட்டது. இவன் அதைக் கேட்டுக்கொண்டே தனது கோபத்திற்கான நியாயங்களைத் தேடி ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தான். இவன் எதிர்பார்த்ததுபோல் அவள் மீண்டும் பேச்சைத் துவக்கினாள்.
“ஒம் மொதலாளி ஏதாவது கொடுத்தானா?”
“ம்…”
“எவ்வளவு?”
“பத்து… அதிலே எனக்கு முடிவெட்ட இரண்டு ரூபா வேனும். இப்பவே சொல்லிட்டேன்.” இவன் சிறு குழந்தையைப் போல் கண்டிப்பாகக் கூறினான்.
அவள் லேசாகச் சிரித்து, இவன் தலையையும் நெஞ்சையும் வாஞ்சையுடன் வருடினாள். அந்த வருடலில் தன் மனத்தின் புழுச்சு குறைவதாய் இவனுக்குப் பட்டது. அவளது பரந்த மனத்தின்மேல் பாதுகாப்பாய் உறங்கும், லஜ்ஜை தெரியாத அம்மணக் குழந்தையாய் தன்னைப் பாவித்துக்கொண்டான். வருடிக்கொண்டிருந்த மென்மையான விரல்களிலிருந்தோ, அவளது மனத்தின் ஆழத்திலிருந்தோ ஏதோ ஒன்று சுரந்து தன்னை நனைத்துக் குளிர வைத்தது என்று இவன் நினைத்துக்கொண்டான். பின் இவனே பேச்சைத் தொடர்ந்தான்.
“மீதி இருக்கிற எட்டு ரூபாய எடுத்து சமைச்சு வை காலைலே”
“அது போகட்டும். நீ கடைலே எதாச்சும் சாப்பிட்டியார”
“இல்லே, காலைலே ஒரு டீ, சாயந்தரம் ஒண்ணு, அவ்வளவுதான்!!”
“மத்தியானம் என்ன செஞ்சே… மொதலாளிகிட்டே சொல்றதுதானே!”
“எனக்குக் கூச்சமா இருந்தது. இன்னிக்குத்தானே சேந்தேன். கடைலே வேற ஒரே கூட்டம்.”
“உன்ன பர்மனென்டா வெச்சுக்குவானா?”
“ஏன் வெக்காமெ! என்னை மாதிரி வேலை தெரிஞ்சவன் எங்க கெடைப்பான்?”
“சம்பளம்?”
”என்ன, நூத்தியம்பதுக்குள்ளே தருவான். பாக்கலாம். அது சரி, சாப்பிட்டியா?” இவன் குற்ற உணர்வுடன் தயங்கியபடி கேட்டான்.
“இல்ல.”
“காலைலேர்ந்து பட்டினியா?”
“ம்…”
இவன் எழுந்து விளக்கைப் போட நினைத்துக்கொண்டான். வெளியில் மழை இன்னும் கனக்க ஆரம்பித்தது.
