லக்ஷ்மி ரமணன்/ சிகரம்

வாழ்நாள்சாதனையாளர் விருது பெறவிருந்த
பிரபல மூத்தநடிகர் உதயசந்திரனை பேட்டி
காண அடையாரில் இருந்த அவர் வீட்டுக்குப்
போன அருண் தோட்டத்தில் தனயாக
செடிகளுக்குநீரூற்றியவண்ணம் நின்ற
உதயசந்திரனைக்கண்டு திகைத்தான்.
முன்பெல்லாம் இவர்வீட்டில் ரசிகர்களின்
கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.
பிரபல இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள்,
நடிகர்கள்,என்று யாராவது வந்தவண்ணம்
இருப்பார்கள். கைப்பேசி அடித்து அழைத்தவண்ணமிருக்கும்.
சோப்பு, வேட்டி,நெய்,பேஸ்ட் என்று எல்லா விளம்பரங்களிலும் அவரைப்பார்க்கமுடியும்.
அந்த அளவுக்கு பிரபலமாகி பலராலும்புகழப்
பட்டபடங்களில் நடித்து பிரபலத்தின் உச்சியி
லிருந்த நடிகர் அவர்.
அப்படி சிகரத்தில்நின்ற அந்த நடிகர்இப்படி
தனிமையில்நின்ற காட்சியைப்பார்த்த அருணின் மனம் சங்கடப்பட்டது.
தன் மன ஆதங்கத்தை வெளிப்படையாக அவன் அவரிடம் சொல்லி”வருத்தமாக இல்லையா உங்களுக்கு?என்று கேட்டு விட்டான்
“நான் எதுக்கு வருத்தப்படணும்?வாழ்க்கையில் அது ஒருகாலகட்டம்.இது அடுத்தகாலகட்டம்.இரவுபகல் மாறி வருதேன்னு வருத்தப்படமுடியுமா? செஞ்சுரி
அடித்த டென்டுல்கர் மைதானத்திலேயா
நின்றார்? திரும்பிவரத்தானே செய்தார்.
எவரெஸ் ட்ஏறிய டென்சிங் அங்கேயா நின்றார்.
கீழே இறங்கிவரலியா? நேற்று என்னுடையதாக இருந்தது. இன்று அது இன்
னொருவருடையது. நாளை அது வேறுயாரு
டையதோ. இதில் வருத்தப்பட என்ன இருக்கி
றது?”
வாழ்க்கை க்கு அவர் கொடுத்த விளக்கம்
அருணைத்திகைக்க வைக்க அவன் தோளை
பாசத்துடன் தட்டிக் கொடுத்தார் உதயசந்திரன்.

One Comment on “லக்ஷ்மி ரமணன்/ சிகரம்”

Comments are closed.