சசிகலா விஸ்வநாதன்/கொலு

கொலு வைக்க ஆசைதான்.
வேலை கொஞ்சம் மலைப்புதான்.
காலை அலுவல் போகணும்.
மாலை சுண்டல் செய்யணும்.
இதொன்றும் பெரிய வேலையில்லை‌
கூப்பிட்டவர் இல்லம் செல்லணும்.
நாலு பேர் பார்க்க,
நல்லதாய் நான் உடுத்தணும்.
நாளை வீட்டு அலுவல்
அலுவலக அலுவல்
அத்தனையும் மனதில் ஓட
சிந்தனைகளும் சவால்களும் முந்தி நிற்க
முறுவல் காட்டி
இன்முகத்துடன் பேசணும்
வீடு வந்து சேர
அடுப்படி வேலைகள்
கடுப்படிக்க கொலுவே வேண்டாம்;
ஒரு மனம் சொல்ல;
கொலு வைக்கும் ஆசை
என்னை விட்டு விடாமலும்,
தொட்டு இழுக்க; இந்த
வருடமும் கொலு உண்டு
வீட்டில் , வாருங்கள் நீங்களும்.