
எனது நான்காவது கவிதைத் தொகுப்பு தலைப்பு ஐந்தாவது யுகம் என்ற நூலாகும். அந்த நூல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பரிந்துரை பேரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. ஆண்டு 2004
ஓராண்டு கழித்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்
அப்போது காவ்யா பதிப்பகம் அரங்கிற்கு நுழைந்து என்னுடைய நூல்களில் போக்குவரத்து எப்படி உள்ளது என்பதை ஆய்வதற்காக எனது நூல் வைத்திருந்த அடுக்ககத்தில் போய் எனது நூலை நானே புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். எனது முதுகு பக்கம் காவ்யா உரிமையாளர் சகோதரர் சண்முகம் சுந்தரம் அவர்கள் நான் நுழையும் போது அவர் கவனிக்கவில்லை. அடுக்ககத்தில் போய் நான் எனது நூலை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தபோது எனது முதுகு பக்கம் மட்டுமே அவருக்கு தெரிந்தது.
சரி ஐந்தாவது யுகத்தை வாங்கவும் ஒரு ஆள் வந்து விட்டார் என்று நினைத்து அவசர அவசரமாக எழுந்து வந்து அருகில் நின்றார். டக்கென்று நான் முகத்தை திருப்பி வணக்கம்
வைத்தேன். உடனே அவர் *ஓ ஓ… ஜெயதேவன் தானா.. நான் கூட யாரோ புதிய வாசகர் வந்துவிட்டார் என்று நினைத்து ஆர்வமாக வந்தேன்
இந்தப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கும் முதல் வாசகர் நீங்கள் தான் *என்றார்
ஒரு பதிப்பாளர் இப்படி சொல்லும் போது நான் எப்படி அதிர்ந்து போய் இருப்பேன் என்று இப்போது நினைக்கிறேன். பெரிய பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு நலன்கள் விசாரித்துவிட்டு அரங்கத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்
அப்போது அச்சடித்த ஐந்தாவத யுகம் நூல் 22 ஆண்டுகள் கழித்தும் இப்போதும் கைவசம் சில படிகள் உள்ளன. இப்போது போல அப்போது நூறு படிகள் அடிப்பது இல்லை 300
படிகளுக்கு கீழே அச்சடிப்பது இல்லை
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நாம் ஒரு கவிதை நூல் அல்லது கதை நூல் போட வேண்டும் என்றால் பதிப்பகம் புகழ்பெற்ற பதிப்பகமாக இருந்தால் மட்டும் போதாது. அந்தப் பதிப்பகம் எப்படிப்பட்ட நூல் அச்சடிக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். சில பதிப்பகங்கள் கவிதைக்காக மட்டும் புகழ் பெற்றதாக இருக்கும் குறிப்பாக அன்னம் பதிப்பகம்
சில பதிப்பகங்கள் வெளிநாட்டு நூல்கள் மொழியாக்கம் மட்டும் வெளியிடும் அப்படிப்பட்ட பதிப்பகங்கள் சில உள்ளன உதாரணமாக எதிர் பதிப்பகம் போல
காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் அவர்களுக்கு என்று ரெடிமேடு எழுத்தாளர்கள் இருப்பார்கள் அவர்கள் நூல்களில் மட்டும் அக்கறை செலுத்துவார்கள் அதுவாக உலகளவில் இருக்கக்கூடிய தமிழர்கள் வாசிக்கக்கூடிய நூல்களாக வெளியிடுவார்கள் அவர்களுடைய நெட்வொர்க் பெரியது
அப்படிப்பட்ட நூல்கள் வெளியிடும் பதிப்பகம் நம்முடைய நூல்களை வெளியிட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் அந்த போயஸ் கார்டனுக்குள் நாம் நுழையுவது சாத்தியம் இல்லை
உயிர்மை பதிப்பகம் ஓரளவு கவிதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பதிப்பகம் தான் ஆனாலும் மனுஷ்யபுத்திரன் அவர்கள் தன்னுடைய கவிதைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியை மற்றவர்களுக்கு எடுப்பது இல்லை ஆகவே அங்கு வெளியிட்டாலும் பெரிய அளவில் மக்களுக்கு சேராது
தமிழினி போன்ற பதிப்பகங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு தரும்
கண்ணதாசன் பதிப்பகம் ஓசோ கண்ணதாசன் போன்ற தத்துவ நூல்களுக்கு முக்கியத்துவம் தரும்
ஆக புதிய பதிப்பகங்கள் தவிர கவிதைக்கு வேறு பதிப்பகம் இல்லை
நான் செய்த தவறு காவ்யா பதிப்பகம் நாட்டுப்புறவியல் நூல்களை மட்டும் வெளியிடும் பதிப்பகம் அப்படிப்பட்ட பதிப்பகத்தில் என்னுடைய நூலினை வெளியிட்டது தவறு
நாட்டுப்புறவியல் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அரிதாக அந்த பதிப்பகத்திற்கு வருவார்கள். அவர்கள் கவிதை பக்கம் போக மாட்டார்கள்
இதன் மூலம் சகல கவிஞர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எந்த பதிப்பகத்தை நாடுகிறீர்களோ அதை பொறுத்து தான் உங்கள் நூல் வாசகனை சென்றடையும்
இப்போது கவிதைக்கு என்று நம்பிக்கை அளிக்கக்கூடிய பதிப்பகங்கள் ஒன்று இரண்டு தான் உள்ளன குறிப்பாக படைப்பு
வேரல் பதிப்பகம் மற்றும் வெளவ்வல் பதிப்பகம் போன்ற சில தான் உள்ளன
அவர்களும் POT என்னும் பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில்தான் அச்சடிக்கின்றனர். இருப்பினும் இந்த பதிப்பகங்கள் கவிதைக்கு முக்கியத்துவம் தருகின்றன ஆகவே இப்படிப்பட்ட பதிப்பகங்களை நாடலாம்
பெரிய பேனரில் வெளிவர வேண்டும் என்றால் நமக்கு கொடுப்பினை வேண்டும். அது எல்லோருக்கும் அமையாது.
PTO முறையில் அச்சாகும் பதிப்பகங்கள் இன்னும் தனியாக
கடை போடும் அளவு முன்னேறவில்லை
இது எப்படி என்றாலும் கதைக்கென்று உள்ள பதிப்பகங்களில் கதைகளை வெளியிடுங்கள் .கவிதைக்கு என்று உள்ள பதிப்பகங்களில் கவிதைகளை வெளியிடுங்கள். சில பதிப்பகங்கள் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரும் ..
பெரும்பாலான பதிப்பகங்கள் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் கட்டுரைகளுக்கு மதிப்பீடு என்ன என்பது இன்னும் தெரியவில்லை…. ஆய்வு கட்டுரைகளுக்கு எப்போதும்
மதிப்பு உண்டு
ஆகவே சேரும் இடம் அறிந்து சேர வேண்டும். சேராத இடம் தனில் சேர்ந்தால் தீராத இரும்பை தரும்
