
இன்று
மதியம் மகள் வீட்டில்
நன்றாகத் தூங்கினேன்
எழுந்தவுடன்
கூட்டத்தில் வீற்றிருந்த
கொலுவைப் பார்த்தேன்
ஏனோ
இங்கேயும் காந்தி இல்லை
ஒரு நாவலைப் படித்து
முடிக்கும்
நிலையில் இருந்தேன்
நாவல் முடியும் தறுவாயில்
நாவல் சோகமாக இருந்தது
கொலுவைப் பார்த்தேன்
மகள் உற்சாகமாக
இருந்தாள்
சுண்டல் சாப்பிட்டேன்
