உருண்ட முனையில்
கந்தகச் செழுமை
குருதிச் செம்மை
பரந்த பரப்பில்
ரஸாயனக் கலவை
சிமிழின் சீற்றம்
அழுந்தி ஆழ்கையில்
அழிக்கும் செந்தீ
ஆக்கும் வெண்தீ
எரிந்து
அடங்கையில்
புகையிழை, கரித்துகள்கள்
நூலிழை, உயிர் லட்சங்கள்
1967
உருண்ட முனையில்
கந்தகச் செழுமை
குருதிச் செம்மை
பரந்த பரப்பில்
ரஸாயனக் கலவை
சிமிழின் சீற்றம்
அழுந்தி ஆழ்கையில்
அழிக்கும் செந்தீ
ஆக்கும் வெண்தீ
எரிந்து
அடங்கையில்
புகையிழை, கரித்துகள்கள்
நூலிழை, உயிர் லட்சங்கள்
1967