எல்.ரகோத்தமன்/ சத்துணவு

புழுதி கிளப்பிக் கொண்டு ஒரு ஆடி கார் அந்த கிராமத்தில் நுழைந்து பயணித்தது. ஊரே  காரை உற்று பார்த்தன.  நேரே போய் பச்சை நிற பெயின்ட் அடித்த ஒரு மச்சு வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர்.  நீல நிற பனியனும் ஜீன்சும் அணிந்த இஞைன்
“  மாமா.. மாமா என்று கதவை தட்டினான் “
உள்ளே இருந்து “ யாரது “ என கேட்டுக் கொண்டே 50+ மணிதர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.
அந்த இஞைனை கண்டதும் “ ஏண்டா கிறுக்குப் பயலே இப்படியா சொல்லாம கொள்ளாம வர்ரது..”
இருவரும் வீட்டின் உள்ளே சென்று ஊஞ்சலில் அமர்ந்தனர். இருவருக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தார் பெரியவர். உள்ளே வேலையாய் இருந்த தன் மனைவியை அழைத்து இருவரையும் வரவேற்க வைத்தார். இருவரையும் சாப்பிட்டு விட்டுச் செல்ல வற்புறுத்தினாள். இளைஞர்கள் மௌனமாக இருக்கவே பெரியவர் “ அதெல்லாம் நம்ம புள்ளைங்கதான் ..சாப்டுதான் போவாங்க..” என்று சொல்லவே  அவர்களும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
“ அதெல்லாம் சரி.. தம்பி யாரு..என்ன விஷயமா வந்துருக்கீங்க…”
“ இவர் பேரு சுரேஷ் ரிசர்ச்ல என்னோட பார்ட்னர்.  மாட்டுத்தீவணம் பத்தி ஆராய்ச்சி பன்றோம் “
“ அதுக்கு நான் என்ன பண்ணனும்…”
“  நாங்க புதுசா ஒரு தீவணம் கண்டு பிடிச்சருக்கோம்.. அதுக்கு அப்ரூவலும் கிச்சிடுச்சி…இப்ப அதை டெஸ்ட் பண்ணி பாக்கணும்… நம்ப பண்ணைல தான் டெஸ்ட் பண்ணிப் பாக்கலாம்னு….”
”  அப்படி என்ன புது விதமான தீவணம்…”
“  புல்லு, புண்ணாக்கு, தவுடு எல்லா சத்தும் இந்த ஒரு தீவண்த்திலேயே இருக்கு. அது தவிர தேவையான விட்டமின்சும் இதுலேயே கலந்திருக்கு..”
“  அப்படியா.. தாராளமா கொடுத்துப் பாருங்க..”
“  தேங்ஸ் அங்கிள்..”
“ வாங்க  நம்ம பண்ணைய ஊர சுத்திப்பாத்துட்டு வரலாம்..”
மூவரும் ஊரைப் பார்க்கச் சென்றனர். பண்ணை, அவரது 30 ஏக்கர் சாகுபடி செய்திருந்த நிலம், சல சல ஓடை… எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வீடு திரும்ப ஒரு மணி நேரம் ஆயிற்று. பின் சுவையான உணவுக்குப் பின் அடுத்த வாரம் வருவதாக சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.  புழுதி கிளப்பிக் கொண்டு  ஆடி கார் கிராமத்தை விட்டு கெளியேறியது.
அடுத்த வாரம் இருவரும் அதே ஆடி காரில் தாங்கள் கண்டுபிடித்த ஆவணத்துடன் கிராமத்தை வந்தடைந்தனர்.
 அப்பெரியவர் பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.  அவர் சில மாடுகளை சுட்டிக்காட்டி அவற்றிற்கெல்லாம் கொடுக்கச் சொன்னார். அந்த இளைஞர்கள் தீவணத்தை திருப்பதி லட்டு போல் உருட்டி  அதன் தொட்டியில் வைத்தனர். ஆனால் ஒரு மாடு கூட சாப்பிடவில்லை. நக்கிவிட்டு விட்டுவிட்டன.
” மாமா எந்த மாடும் சாப்பிட மாட்டேன் என்கிறது..”
“ அப்படியா.. “  –  அவரே வந்து பார்த்தார்.  லேசாக எடுத்து நக்கிப் பார்த்தார்.
“ தம்பிகளா  அத மாடு சாப்பிடது… அதோட சுவை உணர்ச்சி வேற.. அதுக்கு வேறும் சத்து மட்டும் போதாது.. சுவையும் வேணும்.  ஏன் சொல்றேன் கேளுங்க.. கடையில நம்க்கெல்லாம் சத்து மாவு விக்கறாங்களே அத அப்படியே நீங்க சாப்பிடுவீங்களா.. இல்லையில்ல அதான் விஷயம்.. மாட்டோட டேஸ்ட் என்னுன்னு உங்களுக்கு தெரியல.. போயி நல்லா ஆராயச்சி பண்ணி எடுத்துட்டு வாங்க..”
பெரியவர் சொன்னதை கேட்டு விழி பிதுங்க நின்றனர் அந்த இளைஞர்கள்.