ஆர்க்கே/காலத்திசையறிதல்

திரைகடல் திரிகிறேன்.
தரைநிலம் அளக்கிறேன்.
நிலமளித்த
பூக்களனைத்தையும்
வானளித்த
நட்சத்திர மலர்களையும்
என்
எண்ணத்தின்
படகில் இட்டு நிரப்பி
என்
உள்ளத்து ரோஜாவையும்
உள்ளே மலர்த்தி வைத்து
காலச் சமுத்திரத்தில்
கவிதையெனும்
துடுப்புப்போட்டு
நீ இருக்கும் இடம் நோக்கி
நிறைய நிறைய
குவித்து வாரேன்.
நித்ய கண்மணியே!
அத்தனையும் சூடிக்கொள்.
ஆட்கொள்
அத்தனை
பூக்களையும்
அதனோடு
என்னையும்!

One Comment on “ஆர்க்கே/காலத்திசையறிதல்”

Comments are closed.