திரு வி. க/பெண்ணின் பெருமை

  1. பெண் வளர்ப்பு

(பெண்ணும் உலகமும் – நற்பிள்ளைப் பேறும் தாய் தந்தையர் பொறுப்பும் – பெண் உலகோபுந்தாய் – பிள்ளைகளை வளர்த்தல் பெருந்தொண்டு – நல்லிணக்கம் வேற்றுமை நினைவும் (பெண் ஆண் நினைவு – உயிர் நிலைச் சிறப்பு – பிஞ்சிற் பழுத்தல் – கீழ்மக்கள் சேர்க்கை கூடாது – தாய் தந்தையர் கடமை – அவர்தம் கடமை) – கல்வியும் கற்பும் (கல்வி எது? – அறிவும் ஒழுக்கமும் – தாய்மைக்கு அஞ்சுதல் – இயற்கைக் கல்வி – போலி நாவல்களில் புன்மை – உடற்கூற்றுக் கல்வி – பெண் ஒரு பல்கலைக் கழகம் – சமயக் கல்வி – கற்பு – கற்பிழக்கும் பெண் – எண்ணமும் கற்பும் – தீ நட்பு களைதல் – கூட்ட்த்தில் நடமாடல் – சோதனைப் பருவம்) – உடலோம்பல் (அகத்தூய்மை புறத்தூய்மை – உறக்கம் நேரம் இடம் முதலியன – துயிலெழல் – காலைக் கடன் மலச்சிக்கல்- அதனால் விளையுங் கேடுகள் – அவை போக்கும் வழி – பயிற்சி – ஆட்டங்கள் இயந்திர அரக்கன் – செல்வப் பெண்கள் – நீராட்டல் – உணவு – விரதம் – உண்டிசுருங்குதல் – பொருந்தாத உணவு – பொருந்தாப் பானங்கள் – நகரப் பெண்மக்கள் உடை – நூற்றல் – நகை – நகையால் கேடு – தலைமயிர் ) – அழகு – அழகோவியம் – பேய்ச் சோதனை)

பெண்ணைப்‌ போற்றி வளராகக. – பழமொழி

இன்சொல்‌ விளைநிலனாய்‌ ஈதலே வித்தாக
வன்சொற்‌ களைகட்டி வாய்மை எருவட்டி
அன்பு நீர்ப்‌ பாய்ச்சி அறக்கதிர்‌ ஈனவோர்‌
பைங்கூழ்‌ சிறுகாலைச்‌ செய்‌. – அறநெறிச்சாரம்‌

உலகமும்‌ பெண்ணும்‌

உயிர்களின்‌ தோற்றத்துக்கும்‌ ஆக்கத்துக்கும்‌ மூலமாயிருப்பவள்‌ பெண்‌. அப்பெண்ணின்‌ வளங்குன்றுமேல்‌ உலக வளனும்‌ குன்றும்‌. பெண்ணின்‌ வளன்‌ பெரிதும்‌ அவளது இளமை வளர்ப்பையே ஓட்டிநிற்கும்‌. பெண்‌ தீயவழியில்‌ வளர்ந்து வருவளேல்‌, அவள்வழித்‌ தோன்றும்‌ உலகமும்‌ தீயதாகும்‌; பெண்‌ நல்வழியில்‌ வளர்ந்து வருவளேல்‌, அவள்‌ வழித்தோன்றும்‌ உலகமும்‌ நல்லதாகும்‌. உலகை நல்லதாக்க வேண்டுமென்பதே இயற்கையின்‌ நோக்கம்‌. அந்நோக்கத்துக்குத்‌ துணைபுரிய வேண்டுவது பெற்றோர்‌ கடன்‌.

நற்பிள்ளைப்பேறும்‌ தாய்‌ தந்தையர்‌ பொறுப்பும்‌

முதலாவது நற்பிள்ளைப்‌ பேற்றிற்குத்‌ தாய்‌ தந்தையரின்‌ உடல்‌ வளனும்‌, நல்லியல்பும்‌ இன்றியமையாதன. அவர்‌, நல்லுடலும்‌ நல்லியல்பும்‌ பெறுந்‌ துறையில்‌ இறங்கி உழைப்பது அறம்‌. நில விதைகளுக்கேற்ற வண்ணமன்றோ பயிரின்‌ இயல்பிருக்கும்‌? தாய்‌ தந்தையர்‌ உடல்‌ நலனும்‌ இயல்பும்‌, பிள்ளையின்‌ வளர்ப்பிற்கு நீரும்‌ ஒளியும்‌ போன்றன. தாய்‌ தந்தையர்‌ நன்னடை, பிள்ளைகட்குப்‌ பெருந்துணை செசய்யும்‌. நற்பிள்ளைப்‌ பேற்றிற்கும்‌, வளர்ப்பிற்கும்‌ தாய்‌ தந்தையர்‌ பெரும்‌ பொறுப்பாளர்‌. பொறுப்புணர்ந்து நடக்குந்‌ தாய்‌ தந்தையர்‌ வாழ்க.

பெண்‌ உலகோம்புந்தாய்‌

பொதுவாக உலகில்‌ பல இடங்களிலும்‌, சிறப்பாக நமது நாட்டிலும்‌ பிறந்த குழவி பெண்ணாயிருப்பின்‌, “ஐயோ! பெண்ணா”என்று தாய்‌ தந்தையரும்‌, உற்றார்‌ உறவினரும்‌ இடி கேட்ட நாகம்போலக்‌ கலக்க முறுகின்றனர்‌. இஃதென்ன அறியாமை! பின்‌ தாயாகி உலகோம்பக்‌ கடவுள்‌ அளித்த பெண்‌ பிறவியைக்‌ கண்டா கலக்க முறுவது? “தாயாகும்‌ பேறுடைய பெண்குழவி நம்‌ வயிற்றிற்‌ பிறந்ததே!” என்று பெற்றோர்‌ இன்பக்‌ கடலிலன்றோ திளைத்தல்‌ வேண்டும்‌? பெண்ணாகப்‌ பிறத்தல்‌ எற்றுக்கு? பின்‌ தாயாகி, உயிர்களை ஈன்று, உலகை வளர்ப்பதற்‌கன்றோ? பெண்‌ பிறவி இல்லையேல்‌ கடவுளின்‌ படைப்பு நோக்கம்‌ எங்ஙனம்‌ நிறைவேறும்‌? கடவுளின்‌ படைப்பு நோக்க நிறைவேற்றத்துக்குப்‌ பிறந்த பெண்ணைக்‌ கண்டு கலக்கமுறுவது அறியாமை. பெற்றோர்‌, தம்‌ வயிற்றிற்‌ பிறந்த பெண்குழவியைப்‌ பார்க்குந்‌ தோறும்‌ பார்க்குந்தோறும்‌ “உலகோம்புந்‌ தாய்‌ நம்பால்‌ பிறந்திருக்கிறாள்‌” என்று அடங்காக்‌ கழிபேறுவகை எய்துவாராக. அவ்வுவகை ஊற்றினின்றும்‌ பொங்கி எழும்‌ அன்பு நீரும்‌, அருட்கண்‌ ஒளியும்‌ கான்முளையை இனிது வளர்த்து வரும்‌.

பிள்ளைகளை வளர்த்தல்‌ பெருந்தொண்டு

தாய்‌ தந்தையர்‌ பிள்ளைகளைப்‌ பெறுவது மட்டும்‌ பெருமையாகாது. அவற்றை நல்வழியில்‌ வளர்ப்பதே பெருமை. பிள்ளைகளை ஓழுங்கு முறையில்‌ வளர்க்குந்‌ தொண்டினுஞ் சிறந்தது பிறிதொன்றில்லை. பின்னுலகு ஆக்குதற்கு உயிர்களைப்‌ பண்படுத்தி விடுவது சிறந்த தெய்வத்‌ தொண்டாகும்‌.
பிள்ளைகளை நல்வழியில்‌ வளர்க்க முனையாத பெற்றோர்‌, பின்னை உலகத்துக்குக்‌ கேடு சூழ்ந்தவராவர்‌, எத்தனையோ பாவங்கட்கு விதையிட்டவராவர்‌. பிள்ளைகளை – சிறப்பாகப்‌ பெண்பிள்ளைகளை – வளர்ப்பதில்‌ தாய்‌ தந்தையர்‌ பெருங்‌ கவலை செலுத்தல்‌ வேண்டும்‌. ஒரு பெண்ணின்‌ வாழ்வு அவளோடு நிற்பதில்லை. அஃது அவள்‌ வழித்தோன்றும்‌ உலகையுந்‌ தொடர்ந்து நிற்பது. “தொட்டிற்பழக்கம்‌ சுடுகாடு மட்டும்‌” என்பது முதுமொழி. பெண்ணின்‌ தாய்மைக்குரிய வித்து, அவளது இளமை வளர்ப்பாகலின்‌, அவளது இளமை, நல்வழியில்‌ அரும்புமாறு பெற்றோர்‌ உழைத்தல்‌ வேண்டும்‌. ஆகவே, தாய்‌ தந்தையர்‌, பெண்ணின்‌ தாய்மை விழுப்ப முணர்ந்து, பெண்ணை வளர்ப்பாராக.

நல்லிணக்கமும்‌ வேற்றுமை நினைவும்‌

பெற்றோர்‌ பெண்ணை வளர்க்கும்‌ முறைகளைப்‌ பற்றி ஈண்டு விரிக்கிற்‌ பெருகும்‌. அம்முறைகளை விரித்துக்‌ கூறுவது இந்நூலின்‌ நோக்கமுமன்று. எடுத்த பொருளுக்கேற்பச்‌ சில குறிப்புக்களை மட்டும்‌ பொறிக்கப்‌ புகுகிறேன்‌.

ஆண்பெண்‌ நினைவு

குழந்தைகளின்‌ மன மொழி மெய்களில்‌ எக்காரணம்‌ பற்றியும்‌ தீமை படியாதவாறு தாய்‌ தந்தையர்‌ அவைகளைக்‌ காத்து வருவாராக. தாய்‌ தந்தையர்‌ தமது நடத்தையால்‌ குழந்தைகளின்‌ நலனைக்‌ காத்துவருவதோடு மற்றவர்‌ கூட்டுறவாலும்‌, அவைகட்குக்‌ கேடு நிகழாதவாறு காத்து வருதல்‌ சிறப்பு. குழந்தைகள்‌ உள்ளத்தில்‌ ஆண்‌ பெண்‌ என்னும்‌ நினைவே தோன்றலாகாது. அவ்வெண்ணந்‌ தோன்றுமுறையில்‌ தாய்‌ தந்தையார்‌ நடத்தல்‌ கூடாது. மற்றவர்‌ வாயிலாகவும்‌ அவ்வெண்ணம்‌ குழந்தைகள்‌ மனத்தில்‌ நுழையாதவாறு காக்க வேண்டுவது தாய்‌ தந்தையார்‌ கடமை.

சிறந்த உறுப்பு

பெண்‌ ஆண்‌ உணர்வை உற்ற வயதில்‌ இயற்கை தோற்று விக்கும்‌. அக்காலத்துக்கு முன்னர்‌, இளமையில்‌ அவ்வெண்ணம்‌ பதிவது, பின்னை வாழ்வின்‌ நலத்துக்குரிய அறிவு – மனம்‌ – உடல்‌ – எல்லாவற்றையும்‌ அழிப்பதாகும்‌. அறிவு விளக்கம்‌ மன அமைதியைப்‌ பொறுத்து நிற்பது. மன அமைதி உடல்நலத்தைப்‌ பொறுத்து நிற்பது. உடல்நலம்‌ இனத்தை அறிவிக்கும்‌ உறுப்பின்‌ அகப்புற வளத்தைப்‌ பொறுத்து நிற்பது. அவ்வுறுப்புக்குப்‌ பழுது நேரின்‌, வாழ்வே குலைந்துபோகும்‌. உடவில்‌ எவ்வுறுப்புக்கு ஊறு நேரினும்‌ சிகிச்சை செய்தல்‌ கூடும்‌; எவ்வுறுப்பு இழந்தேனும்‌ வாழ்தல்‌ கூடும்‌. அந்தோ! குறிக்கு ஊறு நேரிலோ எவ்விதச்‌ சுகிச்சையுமில்லை. சிகிச்சை செய்து கொள்ளினும்‌ ஊறு நீங்காது. ஊறுடன்‌ வாழ்தலும்‌ முடியாது.

உயிர்நிலை

எல்லா உறுப்புக்களிலும்‌ சிறந்தது, பால்‌ பிரிக்கும்‌ உறுப்‌பாகும்‌. எல்லா உறுப்புக்-கட்கும்‌ அஃது உயிர்‌ போன்றது; வேர்‌ போன்றது. இந்நுட்பம்‌ உணர்ந்தே நந்‌ தமிழ்மக்கள்‌ அவ்‌ வுறுப்புக்கு “உயிர்நிலை” என்ற பெயர்‌ சூட்டினார்கள்‌. ஆன்றோர்‌ வழிபற்றி அவ்வுறுப்பை “உயிர்‌ நிலை’ என்றே யானும்‌ இனி குறித்துவருவன்‌.

இப்பொழுது மேல்நாட்டு அறிஞர்‌ உயிர்நிலையின்‌ நுட்பங்களைச்‌ செவ்வனே ஆராய்ந்து, அதன்‌ இயல்புகளை எவரும்‌ உணரும்‌ முறையில்‌ அறிவுறுத்தியுள்ளனர்‌. அவ்வியல்புகளை ஓவ்வொரு பெண்மகளும்‌ ஆண்மகனும்‌ உணரல்‌ வேண்டு மென்பது எனது வேட்கை. உயிர்நிலையின்‌ நுட்பங்களை உணராது, நெறியல்லா நெறியில்‌ சென்று, எத்துணையோ உயிர்கள்‌ பாழ்படுகின்றன.
உயிர்நிலையாக உள்ள உறுப்பு, எக்காரணத்தால்‌ மெலிவுறினும்‌, நரப்புக்‌ கட்டுக்களெல்லாம்‌ மெலிந்து குலைந்துபோகும்‌. நரப்புக்கட்டுக்‌ குலையப்‌ பெற்ற ஒருத்தியோ ஒருவனோ உடல்‌ நலமிழந்து, மன அமைதி குன்றி, அறிவு விளக்கங்‌ கெட்டு, தோல்‌ பொம்மைபோலாகி, உலகிற்குப்‌ பெருஞ்‌ சுமையாதல்‌ திண்ணம்‌.

எண்ணமும்‌ உயிர்நிலையும்‌

இளமையிலேயே பெண்‌ ஆண்‌ நினைவு அடிக்கடி, ஊட்டக்‌ கூடிய வளர்ப்பு, பின்னைப்‌ பல கேடுகட்கு இடமுண்டாக்கும்‌. பெண்‌ இளமையிலேயே அவ்வெண்ணம்‌ கொள்ளல்‌ பெருந்‌ தவறு. அவ்வெண்ணம்‌, அடிக்கடி இன்ப உறுப்பின்மீது கருத்தைச்‌ செலுத்தி காலத்தில்‌ அதை மலர்விக்கும்‌. எண்ணத்‌துக்கும்‌, உயிர்நிலை உணர்ச்சிக்கும்‌ நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணம்‌ இல்லையேல்‌ உணர்ச்சியும்‌ இல்லை என்க.

பிஞ்சிற்‌ பழுத்தல்‌

பெண்ணினத்தின்‌ படைப்பிற்குரிய உள்ளுறுப்பு, ஏறக்‌குறைய பத்தாண்டுவரை எடுப்பின்றி உறக்கத்திலேயே கிடக்கும்‌. பத்தாண்டிற்குமேல்‌ அது சிறிது முகிழ்த்தெழும்‌. அதற்குள்‌ தீய எண்ணத்தால்‌ அதன்‌ எழுச்சியை ஒடுக்கி, அதன்‌ சத்தைக்‌ கெடுத்தல்‌ எவ்வளவு பாவம்‌! அதன்‌ செழுமை குன்றின்‌, அதன்‌ வாயிலாகத்‌ தசைகட்குச்‌ செல்லத்தக்க மூலச்சத்தின்‌ சார ஓட்டங்‌ குறைந்துபோகும்‌. அந்தச்‌ சத்தே பெண்ணின்‌ அழகிற்கு உணவு போன்றது. அதன்‌ பசுமையைப்‌ போக்கும்‌ இளம்‌ பெண்‌, பின்னைப்‌ பெண்மைக்கும்‌ தாய்மைக்கும்‌ இன்றியமையாத கட்டழகைக்‌ குலைத்துக்‌ கொள்கிறாள்‌. அவள்‌ பெண்ணல மெல்லாம்‌ இழக்கிறாள்‌ என்று சுருங்கச்‌ சொல்லலாம்‌.
ஏறக்குறைய பத்தாண்டில்‌ சிறிது முகிழ்த்துத்‌ தலைகாட்டும்‌ இன்ப உறுப்பு, தன்னை முற்றும்‌ பண்படுத்தற்குரிய தசைக்‌ கட்டுக்களைக்‌ கட்டிக்‌ கொள்வதில்‌ ஊக்கம்‌ காட்டி நிற்கும்‌. தசைக்கட்டும்‌, பிறவும்‌ பின்னைய தாய்மைக்கு வேண்டற்பாலன. அத்தசையையும்‌, பிறவற்றையும்‌ கட்ட இயற்கை அடிகோலும்‌ வேளையில்‌, இளமைப்பெண்‌ தீய எண்ணத்தாலோ சேர்க்கையாலோ இன்ப உறுப்பின்‌ இளங்-கொழுமையைப்‌ போக்கப்‌ புகுதல்‌ அறியாமை. இக்கேடு உறாதவாறு, குழந்தைப்‌ பருவத்‌ திலேயே பெண்‌ ஆண்‌ வேற்றுமை, உள்ளத்தில்‌ நுழையா வழியில்‌, குழந்தையைப்‌ பெற்றோர்‌ வளர்த்தல்‌ சிறப்பு என்று சொல்லலும்‌ வேண்டுமோ?
பின்னைப்‌ பன்னிரண்டு அல்லது பதினான்கு வயதில்‌ இன்ப உறுப்பு மலர்ச்சியடைந்து தனது கடனாற்றத்‌ துவங்கும்‌. அப்பொழுது கருக்குழி செவ்விய நிலை எய்துதற்கு வேண்டப்‌படும்‌ முயற்சியில்‌ அவ்வுறுப்புத்‌ தலைப்பட்டு அதை (கருக்குழியை) ஒழுங்குபடுத்தும்‌. அந்நிலையிலும்‌, கன்னியின்‌ மனம்‌ உறுதி யினின்றும்‌ பிறழ்தலாகாது. பிறழுமேல்‌ பிஞ்சிற்பழுத்த கதையாக முடியும்‌. திருமணம்‌ வரை, பெண்ணிற்குத்‌ தீக்கிளர்ச்சி எண்ணம்‌ உறுதலே கூடாது. தீய எண்ணத்துக்கு இரையாகாத முறையில்‌ பெண்ணை வளர்ப்பதில்‌ பெற்றோர்‌ பெருங்கவலை செலுத்தல்‌ வேண்டும்‌.

கீழ்மக்கள்‌ சேர்க்கை கூடாது

குழந்தைமையில்‌, பெண்‌ ஆண்‌ வேற்றுமை உணர்வு தோன்றாத வழியில்‌, குழந்தையை வளர்க்க வேண்டுமென்று தாய்‌ தந்தையர்க்கு அடிக்கடி. நினைவூட்டுகிறேன்‌. “இஃதென்ன சிறிய காரியம்‌” என்று பெற்றோர்‌ கவலை ஈனமாக இருத்தல்‌ இயக்கத்தை மறந்ததாகும்‌. கீழ்மக்கள்‌ காற்றும்‌ குழந்தை மீது வீசுதலாகாது. கீழ்மக்கள்‌ வாயினின்றும்‌ வரும்‌ “வேத மொழிகளை”: ஈண்டு நினைவூட்ட வேண்டுவதில்லை. கீழ்‌ மக்களின்‌ பேச்சில்‌ நூற்றுக்கு எண்பது சொற்கள்‌ பெண்ணின்‌ வண்ணமாக ஒழுகும்‌. அச்சொல்லொழுக்கின்றி அவர்களால்‌ கருத்தை வெளியிடல்‌ இயலாது. அவர்களை அறியாமலும்‌ “அந்‌ நறு மலர்கள்‌’ அவர்கள்‌ வாயினின்றும்‌ உதிர்ந்துவிடும்‌. என்‌ செய்வார்கள்‌ பாவம்‌/ சிறிதும்‌ நாணமின்றி, அக்கம்‌ பக்கத்துள்ள குழந்தைகளையும்‌ கன்னிகளையும்‌ கவனியாது, கீழ்‌ மக்கள்‌, இன உறுப்பைப்‌ பற்றிப்‌ பேசுவதும்‌ குறிப்பதும்‌ இயல்பாகிவிட்டன! இக்காட்சி காணுங்‌ குழந்தைகளும்‌ விளையாட்டாகக்‌ கீழ்மக்கள்‌ உரைகளைப்‌ பகர்கின்றன; பிறவுஞ்‌ செய்கின்றன. விளையாடல்‌, பின்னை வினையாக முடிகிறது. அதலால்‌, குழந்தைகளைக்‌ கீழ்கள்‌ கூட்டத்தினின்றும்‌ பெற்றோர்‌ பிரித்தே தீரக்‌ கடமைப்‌ படுவாராக.

தாய்தந்தையர்‌ கடமை

தாய்‌ தந்தையர்‌ பழக்கத்தாலோ, வேறு எதனாலோ சில குழந்தைகள்‌ கைகளால்‌ அடிக்கடி, உயிர்‌ நிலையைத்‌ தொடுகின்றன. இவ்வழக்கம்‌ மிகக்‌ கொடியது. நாளடைவில்‌ அவ்‌விடத்தில்‌ ஒருவித உணர்ச்சி தோன்றும்‌. அவ்வுணர்ச்சி, இன்ப உறுப்பின்‌ நோக்கை வேறு வழியில்‌ திருப்பி, உடலில்‌ சத்தைப்‌ பரப்புஞ்‌ சக்தியின்‌ வினையைக்‌ கெடுக்கும்‌. அதனால்‌ வாழ்வு இளமையிலேயே வெம்பி விழுந்து போகும்‌. குழந்தை அறியாமையால்‌ தீச்செயல்‌ புரியும்போது, அதன்‌ கருத்தை வேறு வழியில்‌ திருப்பத்‌ தாய்‌ தந்தையர்‌ முயல்வது நலம்‌. குழந்தை, தாய்‌ தந்தையர்‌ வழியில்‌ சார்ந்து நிற்றலால்‌, அஃது அவர்‌ சொல்‌ வழியே நிற்கும்‌ என்பதில்‌ எட்டுணையும்‌ ஐயமில்லை. ஈன்ற அன்னையார்‌ குழந்தையை நோக்கி, “அங்கே போகாதே; பூதம்‌ பிடித்துக்‌ கொள்ளும்‌” என்று இரண்டொரு முறை சொற்றால்‌, குழந்தை குறிப்பிட்ட இடத்திற்குப்‌ போக அஞ்சுவது இயல்பு. பிற குழந்தைகள்‌ அங்கே செல்லும் போதும்‌, “போகாதே-யுங்கள்‌; பூதம்‌ பிடித்துக்‌ கொள்ளும்‌” அம்மா சொன்னார்‌. என்று அக்குழந்தை தன்‌ நண்பரையுந்‌ தடுக்கும்‌. இது குழந்தைகள்‌ இயல்பு. எத்துணைத்‌ தாய்மார்‌ “பேய்‌ வருகிறது; பூதம்‌ வருகிறது; சோறுண்‌” என்று அச்சமூட்டிக்‌ குழந்தைக்குச்‌ சோறூட்டு கின்றனர்‌. வெறுக்கத்தக்க அச்சமூட்டி, அச்சவழியில்‌ குழந்தையை நிறுத்தியாளும்‌ தாய்‌, குழந்தை அறியாமையால்‌ பின்‌ வாழ்வைக்‌ கெடுக்கவல்ல தீச்செயல்‌ நிகழ்த்தும்‌ போதும்‌, ஒருமுறை இரு முறை அதைத்‌ தடுத்தால்‌, அது மீண்டும்‌ அத்‌ தீச்செயலில்‌ தலைப்படுமோ? தலைப்படாது.

தாய்‌ தந்தையர்‌ மடமை

சில தாய்‌ தந்தையரின்‌ மூடச்‌ செயல்களாலும்‌ குழந்தைகள்‌ கெடுகின்றன. அவற்றை ஈண்டு விரித்துக்‌ கூறவேண்டுவதில்லை. இரண்டொன்றைக்‌ குறிப்பிடுகிறேன்‌. சில தாய்‌ தந்தையர்‌ தமது அன்பைக்‌ குழந்தைகளின்‌ உயிர்‌ நிலையில்‌ காட்ட விரும்பு கின்றனர்‌. இதனாலும்‌ குழந்தைகள்‌ அடிக்கடி தங்கள்‌ உயிர்‌ நிலையைக்‌ தொடும்‌ பயிற்சி பெறுவதுண்டு. சில மூடப்‌ பெற்றோர்‌, சிறு அறையில்‌ விளக்கேற்றி வைத்துக்‌ குழந்தைகளையும்‌ உடன்கிடத்தி ஆடல்‌ பாடல்‌ புரிகின்றனர்‌. சிறிது உணர்வு பெற்ற குழந்தைகள்‌, தாய்‌ தந்தையர்‌ நாடகத்தை நடிக்கத்‌ தொடங்கு கின்றன. அதைப்‌ பார்த்து மகிழும்‌ கயவரும்‌ இருக்கின்றனர்‌! குழந்தைகளின்‌ தீய ஆடல்களை மற்றவரோடு பேசிக்‌ களிப்புறுஞ்‌ சிற்றினங்களும்‌ உலகில்‌ வாழ்கின்றன. என்ன இழிவு! இப்பாவிகளா குழந்தைகளை நல்வழியில்‌ வளர்ப்பவர்கள்‌? இவர்‌களல்லவோ குழந்தைகளைக்‌ கொலை செய்யும்‌ யமன்கள்‌? குழந்தைகளுடன்‌ தாய்‌ தந்தையர்‌ ஓரே படுக்கையிற்‌ படுத்தலே தவறு. படுத்து ஆடல்‌ பாடல்‌ புரிவது எத்தகைய தவறு!
உயிர்‌ நிலையைத்‌ தொடும்‌ பயிற்சியில்‌ குழந்தை இறங்கும்‌ போதே பெற்றோர்‌ அதைக்‌ தடுத்தல்‌ வேண்டும்‌. அப்பயிற்சி யினின்றும்‌ குழந்தை விலகு மட்டும்‌ பெற்றோர்‌ பெருங்கவலை செலுத்தல்‌ வேண்டும்‌. குழந்தை சிறிது உணர்வு பெற்றதாயின்‌, “அம்மா அங்ஙனஞ்‌ செய்யாதே. கண்ணைத்‌ தொட்டு அழுத்திக்‌ கொண்டேயிருந்தால்‌, கண்ணின்‌ நிலை என்னாகும்‌? கண்‌ கெட்டாலும்‌ உலகில்‌ வாழலாம்‌. உயிர்நிலை கெட்டால்‌ மரணமே நேரும்‌” என்று பெற்றோர்‌ அறிவு கொளுத்தி, எவ்வழி யிலாதல்‌ குழந்தையின்‌ தீப்‌ பயிற்சியைத்‌ தொலைக்க முயல்‌ வாராக.
எவ்வழியிலும்‌ குழந்தைகள்‌ தங்கள்‌ உள்ளத்தில்‌ பெண்‌ ஆண்‌ என்னும்‌ நினைவே தோன்றாவண்ணம்‌ வளர்வதும்‌, அவைகளைப்‌ பெற்றோர்‌ அந்நெறியில்‌ வளர்ப்பதும்‌ பின்னைய பேரின்ப வாழ்விற்கு அடி கோலுவதாகும்‌. நல்வளர்ப்புக்குக்‌ கேடு விளைக்கவல்ல சிற்றினங்களைக்‌ கண்ணால்‌ காணவும்‌ குழந்தை களை விடலாகாது. சிற்றினச்‌ சேர்க்கையே கொடுமை; கொடுமை. குழந்தை நல்லவழியில்‌ வளர்க்காது, பின்னை விதி – கர்மம்‌ – ஊழ்‌ – பேச்சுப்‌ பேசுவது அறிவுடைமையாமோ?

தீயாரைச்‌ காண்பதுவுற்‌ தீதே திருவற்ற
தீயார்சொற்‌ கேட்பதுவுந்‌ தீதே – தீயார்‌
குணங்க ளுரைப்பதுவுற்‌ தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந்‌ தீது

எனவரூஉம்‌ ஒளவையார்‌ அறிவுரையை நோக்குக.

கல்வியும்‌ கற்பும்‌

பெண்மக்கள்‌ வாழ்விற்குக்‌ கல்வி இன்றியமையாதது. பெண்‌ கல்வியைப்‌ பற்றிப்‌ ‘பெண்ணுரிமை’த்‌ தலைப்பிலும்‌ கூறியிருக்கிறேன்‌. பெண்மக்கள்‌ கல்வியை இளமையிற்‌ கற்றல்‌ விழுப்பம்‌. இளமை கல்விக்குரியது. “’இளமையிற்‌ கல்” என்றார்‌ ஒளவையார்‌. இளமைக்‌ கல்வி, பின்னை வாழ்விற்குப்‌ பெருந்‌ துணை செய்யும்‌. பெண்ணின்‌ இளமை, கல்வித்துறையிற்‌ கழிவது அறம்‌.

கல்வி எது?

பல்லாயிரம்‌ நூல்களை மட்டும்‌ வாசிப்பது கல்வியாகாது. பாடங்களை நெட்டுருச்‌ செய்து தேர்வில்‌ வெற்றியடைந்து பட்டம்‌ பெறுவதும்‌ கல்வியாகாது. கல்வி என்பது, வாழ்வில்‌ இரண்டறக்‌ கலந்து, வாழ்வுக்குரிய பயனை அளிப்பது. கல்வியின்‌ பயன்‌ என்னை? அறிவையும்‌ ஓழுக்கத்தையும்‌ வாழ்விற்கு வழங்குவது கல்வியின்‌ பயன்‌. கல்வி – அறிவு – ஒழுக்கம்‌ – என்னும்‌ அடுக்கு வழக்கை அராய்க ; ஆராய்ந்தால்‌ உண்மை விளங்கும்‌. இங்கே விளக்கந்‌ தேவையில்லை.

அறிவும்‌ ஒழுக்கமும்‌

கல்வியாற்‌ பெறும்‌ அறிவு விளக்கமட்டும்‌ வாழ்விற்குப்‌ போதாது. அறிவோடு ஓழுக்கமிருத்தல்‌ பொருத்தம்‌. ஒழுக்க மில்லா வாழ்வு எத்தகையதாயினும்‌, அதனால்‌ வாழ்வு நோக்கம்‌ நிறைவேறாது. ஓழுக்கத்துக்குரிய கல்வியே கல்வி. மற்றையது கல்வியாகாது. தாய்மைக்குரிய பெண்ணிற்கு ஓழுக்கம்‌ உயிர்‌ போன்றது. ஒழுக்கமே பெண்ணாக வளர்தல்‌ வேண்டும்‌. ஒழுக்கமில்லாப்‌ பெண்‌ பெண்ணல்லள்‌. அவள்‌ பேய்‌. அதலால்‌, தன்னைத்‌ தெய்வமாக்கும்‌ ஓழுக்கத்தை அளிக்கவல்ல கல்வியைப்‌ பெண்‌ இளமையில்‌ பெற்றே தீரல்‌ வேண்டும்‌.

தாய்மைப்‌ பேற்றிற்கு அஞ்சல்‌ தவறு

இப்பொழுது பெண்மக்கள்‌ பல இடங்களில்‌ ஆண்‌ மக்களைப்‌ போலவே கல்வி பயில்கிறார்கள்‌; உயர்‌ கல்வியும்‌ பெறுகிறார்கள்‌. இக்கல்வி பெறுவோருள்‌ சிலர்‌, தாய்மை நிலை பெறுதற்கு அஞ்சி, வாளா காலங்‌ கழிக்கின்றனர்‌. இவரைக்‌ கற்றவரென்று யான்‌ கூறேன்‌. பெண்‌ வாழ்வின்‌ நோக்கம்‌ என்னை? தாய்மை நிலை பெறுதலன்றோ? இறைவன்‌ படைப்பு நோக்கமும்‌ அஃதே; இயற்கையின்‌ நோக்கமும்‌ அஃதே. இரண்டுக்கும்‌ மாறுபட்டுப்‌ பெண்ணை வாழச்‌ செய்யுங்‌ கல்வி கல்வியாகுங்-கொல்‌? இயற்கை யோடியைந்த வாழ்வை அளிக்கக்‌ கூடிய கல்வியே பெண்ணிற்கு வேண்டற்பாலது. ஆணுக்கும்‌ அத்‌தகைய கல்வியே தேவை. இளமையிலேயே இயற்கை நுட்பத்தை உணர்த்தக்கூடிய கல்வியைப்‌ பெண்‌ மக்கட்குப்‌ பெற்றோர்‌ ஊட்‌டுவாராக.

இயற்கைக்‌ கல்வி

பெற்றோர்‌ தமது பெண்ணிற்கு இளமையிலேயே இயற்கையைக்‌ காட்டிக்காட்டி, ஆடல்‌ பாடல்களை அறிவுறுத்துவது நல்லது. மரம்‌, செடி, கொடி, மலை, நிலா, ஞாயிறு முதலிய இயற்கைப்‌ பொருள்‌ நினைவு தோன்றும்‌ வழியில்‌, பெண்ணை ஆடுமாறும்‌ பாடுமாறும்‌ பெற்றோர்‌ வளர்த்தல்‌ வேண்டும்‌. நமது நாட்டில்‌ பழைய தாய்மார்‌ பனைப்பாட்டு, மலைப்பாட்டு, நிலாப்பாட்டு, வானப்பாட்டு, பறவைப்பாட்டு முதலிய இயற்கைப்‌ பாடல்களைப்‌ பாடிப்‌ பாடிக்‌ குழந்தைகளைக்‌ தாலாட்டுவது வழக்கம்‌. இயற்கையைப்‌ பற்றிய பல கதைகள்‌ பாட்டிமார்‌ சொல்வதுமுண்டு. திருடன்‌ கதை, கொலைஞன்‌ கதை, குடியன்‌ கதை, பேய்க்கதை, அச்சமூட்டுங்‌ கதை முதலிய ஆபாசக்‌ கதைகளைக்‌ குழந்தைகட்கு எவருஞ்‌ சொல்லுதலே கூடாது. மரஞ்‌ செடிகள்‌ அழகாக வளர்ந்து காய்கனிகள்‌ தருவதையும்‌, காற்று வீசுவதையும்‌, ஞாயிறு ஒளி உமிழ்வதையும்‌ காட்டி, “இம்மரஞ்‌ செடியும்‌, காற்றும்‌, ஞாயிறும்‌ ஏதாவது பயன்‌ கருதிக்‌ கடன்‌ களாற்றுகின்றனவா?” என்று பெற்றோர்‌ அடிக்கடி இளம்‌ பெண்ணுடன்‌ பேசிப்‌ பேசிப்‌ பரோபகார சிந்தையை அவள்‌ உள்ளத்தில்‌ பெருக்குவாராக.

கடவுள்‌ நினைவு

பின்‌ தாயாகும்‌ பெண்ணுள்ளத்தில்‌ பயன்‌ கருதாது தொண்டாற்றும்‌ அன்புக்‌ கடவுளைப்‌ பதியச்‌ செய்யத்‌ தாய்‌ தந்தையர்‌ முயல்வது நலம்‌. பெற்றோர்‌ குழந்தையைத்‌ தமது பிள்ளை என்று கருதுவதைப்‌ பார்க்கினும்‌, அதைக்‌ தாய்மைக்‌ கூரிய ஒன்று என்று வளர்ப்பது சிறப்பு.

போலி நாவல்களின்‌ புன்மை

இளம்‌ பெண்கள்‌, தீய எண்ணங்களை ஊட்டவல்ல களிக்‌ கதைகளை – போலி நாவல்களை – மறக்கதைகளை – இன்னோரன்ன பிறவற்றைக்‌ கேட்டலுமாகாது; அவைகளைச்‌ கையால்‌ தொடுதலுமாகாது. இதில்‌ பெற்றோர்‌ பெருங்‌ கவலை செலுத்துவாராக. போலி நாவல்கள்‌ பெண்ணுலகையே கெடுத்து வருகின்றன. “தங்கள்‌ வாழ்வை நஞ்சென எரிப்பது போலி நாவல்” என்று பெண்மணிகள்‌ கருதுவார்களாக. போலி நாவல்களையும்‌ போலி நாடகங்களையும்‌ படித்து, நல்வாழ்வை இழந்து பின்னை வருந்தி வருந்தி மாண்ட சில பெண்மக்கள்‌ கதைகள்‌ எனக்குத்‌ தெரியும்‌. அருமைக்‌ குழந்தைகளே! போலி நாவல்களைப்‌ படியாதே யுங்கள்‌, தொடாதேயுங்கள்‌; உங்கள்‌ வாழ்வு குலைந்து போகும்‌; நோய்வாய்ப்பட்டு வருந்தி வருந்திச்‌ சாவீர்கள்‌. கடவுள்‌ உங்களை ஏன்‌ உலகிற்கு அனுப்பினார்‌? பிஞ்சில்‌ பழுத்து உதிரவா? நோய்‌ வாய்ப்பட்டு வருந்தவா? அண்ணன்‌ தம்பி உற்றார்‌ உறவினார்‌ ஊளரார்‌ “சீ சீ” என்று ஏசி ஏசி உங்களை ஒதுக்கவா? அன்று; அன்று. “நீங்கள்‌ தாயாதல்‌ வேண்டும்‌; நல்வாழ்வு எய்தல்‌ வேண்டும்‌; பேரின்பம்‌ அடைதல்‌ வேண்டும்‌” என்பது ஆண்டவன்‌ நோக்கம்‌. அப்பெருவாழ்விற்கெனப்‌ பிறந்த நீங்கள்‌ சிறுநாவல்‌ பித்தால்‌ வாழ்வையா குலைத்துக்‌ கொள்வது? போலி நாவல்களைப்‌ படி யாதேயுங்கள்‌; படியாதேயுங்கள்‌. போலிநாவல்கள்‌ இளம்‌ பெண்கள்‌ கண்களிற்‌ படாதவாறு பெற்றோரும்‌ ஆசிரியன்‌ மாரும்‌ காப்பாராக.

உடற்கூற்றுக்கல்வி

பெண்மக்கட்கு உடற்கூறு நன்றாகத்‌ தெரிதல்‌ வேண்டும்‌. உடற்கூற்று நூல்கள்‌ செவ்வனே பெண்‌ மக்கட்குப்‌ போதிக்கப்‌ படல்‌ வேண்டும்‌. உடற்கூறு தெரியாது எத்துணையோ பெண்‌கள்‌ பலவழியிலும்‌ கெடுகிறார்கள்‌. உடல்‌ இயல்பு நன்றாகத்‌ தெரிந்தால்‌, அதற்கேற்றவண்ணம்‌ வாழ்வு நடாத்தல்‌ அவர்‌களால்‌ இயலும்‌. கருக்குழியைப்‌ பற்றியும்‌, அதன்‌ சினைகளாக உள்ள சிறுசிறு உறுப்புக்களைப்‌ பற்றியும்‌, அவற்றின்‌ தொடர்‌ உறுப்புக்களைப்‌ பற்றியும்‌ பெண்‌ மக்கள்‌ போதிய உணர்வு பெறுதல்‌ சால்பு. சில பெண்மக்கள்‌ உறுப்புக்களின்‌ நிலை யுணராது, வழி துறை தெரியாது உழன்று, இன்பமிழந்து நிற்பதோடு, வேறு பல நோய்களையும்‌ தேடிப்‌ பாழ்படுகிறார்கள்‌. உடற்கூற்றை உணர்ந்துகொள்வதோடு, அகத்திணை (உள்‌ ளொழுக்கு – மனோ தத்துவம்‌) தெரிந்து கொள்ள அதைப்பற்றிய நூல்களைப்‌ பெண்மக்கள்‌ பயிலுதல்‌ மேன்மை. மக்கள்‌ இயல்பை அளந்தறியும்‌ அற்றல்‌ பெண்‌ மக்கட்கு இருத்தல்‌ அவசியம்‌, அவசியம்‌.

பலகலையறிவு

இல்வாழ்க்கை நடாத்தவும்‌, பிள்ளைகளைத்‌ தக்க வழியில்‌ வளர்க்கவும்‌, சமயம்‌ நேர்ந்துமி வேறுபல துறைகளில்‌ இறங்கிக்‌ கடனாற்றவும்‌ பெண்மக்கள்‌ பலதிறக்‌ கலைகளைப்‌ பயிலுதல்‌ இன்றியமையாமை. எல்லாப்‌ பெண்மக்கட்கும்‌ பதார்த்த குணம்‌, வைத்தியம்‌, கணிதம்‌, அரசியல்‌ முதலிய கலைகளில்‌ பொது அறிவு செறிதல்‌ சிறப்பளிக்கும்‌. பெண்‌ எனில்‌, அவள்‌ ஒரு பல்கலைக்‌ கழகமாயிருத்தல்‌ வேண்டும்‌. இல்லையேல்‌, அவன்‌ தாயாகிப்‌ பிள்ளைகளை எப்படி வளர்த்தல்‌ முடியும்‌?

சமயக்‌ கல்வி

எல்லாவிதக்‌ கல்வித்‌ துறைகட்கும்‌ மேலாகப்‌ பெண்மணி கற்கத்தக்க ஒரு சிறப்புக்‌ கல்வியுளது; அதாவது சமயக்‌ கல்வி. மேற்கூறிய கல்வித்‌ துறைகளெல்லாம்‌ உடல்‌ போன்றன. சமயக்‌ கல்வியோ உயிர்போன்றது. அவ்வுயிர்க்‌ கல்வி மிகமிக இன்றியமையாதது. இயல்பாகப்‌ பெண்மக்களிடத்துக்‌ கடவுட்டன்மை யுண்டு. இதை முன்னருங்‌ கூறியிருக்கிறேன்‌. அவ்வியல்பு அரும்ப, அதைத்‌ தூண்டுதற்குச்‌ சமயக்‌ கல்வி வேண்டற்பாலது.

பெண்மக்கள்‌, உலகியற்‌ கல்வியையும்‌, கடவுளியற்‌ கல்வியையும்‌ முறையே பெறுவார்களாயின்‌, அவர்கள்‌ உடல்நிலை, ஓழுக்கநிலை, அன்புநிலை முதலியவற்றை நன்கு உணர்ந்து, நற்றாய்மார்களாகி அறத்தொண்டு செய்து இன்பம்‌ நுகர்வார்கள்‌. அதலால்‌, பெண்மக்களை இளமையிலேயே கல்வித்‌ துறைகளில்‌ வல்லவர்களாக்கத்‌ தாய்‌ தந்தையர்‌ பெருங்கவலை செலுத்தி உழைப்பாராக.

கற்பு

பெண்மக்கள்‌ கேட்டிற்குக்‌ காரணம்‌ கல்வி இன்மையே. கல்வி பயின்று, உடலியல்‌, உயிரியல்‌, ஒழுக்கவியல்‌, அன்பியல்‌ முதலியவற்றைப்‌ பெண்மக்கள்‌ செவ்வனே உணர்வரேல்‌, அவர்கள்‌ கனவிலும்‌ மறந்தும்‌ தயொழுக்கத்தை நினையார்கள்‌. நிறைக்கேட்டால்‌ இன்னின்ன துன்பங்கள்‌ உண்டு என்று இளமையில்‌ செவ்வனே உணரப்டெறும்‌ பெண்மணி, ஒரு போதும்‌ ஓழுக்கந்‌ தவறி வாழ நினையாள்‌. தாஞ்சாக மருந்துண்‌ போர்‌ ஒருவரும்‌ இல்லை.

பெண்ணிற்குள்ள பெருமை யாண்டுளது? “கற்பில்‌” என்று எவருங்‌ கூறுவார்‌.

பெண்ணிற்‌ பெருந்தக்க யாவுள கற்பென்னுந்‌
திண்மையண்‌ டாகப்‌ பெறின்‌

என்றார்‌ திருவள்ளுவனார்‌. பெண்ணிற்‌ பெருந்தகையது ஓன்‌றில்லை. எப்பொழுது? அவள்‌ கற்பென்னுந்‌ தண்மை யுண்டாகப்‌ பெறுவளேல்‌. அப்பொழுது அவள்‌ பெருந்தகைமைக்கு உடையவளாகிறாள்‌. பெண்ணிற்குள்ள பெருமையெல்லாம்‌ கற்‌பில்‌ அடங்கியிருத்தல்‌ ஊன்றி ஊன்றி உணரற்பாலது. கற்புடையவளே பெண்‌. அஃதில்லாதவள்‌ பெண்ணல்லள்‌.

கற்பிழக்கும்‌ பெண்‌

கற்பிழக்கும்‌ பெண்‌, முதலாவது தனது உயிர்நிலை உறுப்புக்களாகிய இன்பக்‌ கருவிகளின்‌ உணர்ச்சியை நாளடைவில்‌ இழப்பள்‌. அவ்வுணர்ச்சி குன்றக்‌ குன்ற உடலில்‌ இரத்த ஓட்டம்‌ குன்றும்‌. இரத்த ஓட்டம்‌ குறையக்‌ குறைய உடற்கட்டுக்‌ குலையும்‌. உடற்கட்டுக்‌ குலைவால்‌ அழகெனும்‌ தெய்வம்‌ மறையும்‌. பின்னை எந்நிலை உறும்‌? உயிர்‌ நிலையின்‌ உள்ளும்‌ புறமும்‌ பற்பல வெந்நோய்கள்‌ தோன்றும்‌. அவை உடலெலாம்‌ பரவும்‌. அப்பாமும்‌ பெண்‌ படுந்துயரத்துக்கு ஓர்‌ அளவும்‌ உண்டேோ? அவள்‌ படுவது நரகத்‌ துயரன்றோ? அவள்‌ நிலையை உன்ன உன்ன உள்ளம்‌ உருகுகிறது. நோய்‌ வாய்ப்படும்‌ பெண்‌, தாயாகும்‌ பேரின்பத்தை இழக்கிறாள்‌. பேரின்பம்‌ இல்லை யேனும்‌ உடலின்பமேனும்‌ உண்டே? இரவும்‌ பகலும்‌ “நோயின்பம்‌” தவிர வேறின்பம்‌ அவளுக்கு ஏது? இவ்வளவு கேட்டிற்கும்‌ காரணம்‌ என்னை? கற்பிழந்தமையே. கற்பிழந்தவள்‌ அழகை இழக்கிறாள்‌; பெண்மையை இழக்கிறாள்‌; தாய்மையை இழக்‌ கிறாள்‌, எல்லாவற்றையும்‌ இழக்கிறாள்‌.

எண்ணமும்‌ கற்பும்‌

கற்புக்‌ காத்தல்‌, ஒருத்தியின்‌ மனோநிலையைப்‌ பொறுத்து நிற்பது. மனத்தில்‌ எழுந்‌ தீய எண்ணமே கற்பைக்‌ குலைப்பது. நல்‌லெண்ணமோ பெண்ணை வளர்ப்பது. நல்லெண்ணம்‌ அறிவைப்‌ பொறுத்து நிற்பது. அறிவ, எண்ணங்கட்கு ஏற்ற வண்ணம்‌ ௧ரு உறுப்புக்களின்‌ தன்மை நிலவும்‌. இந்நிலைக்கு ஏற்ற உடல்‌ அமையும்‌. தூய அறிவும்‌ தூய எண்ணமும்‌ நிறைகாத்து, நல்லுடல்‌ அமைத்து, அழகெனுங்‌ கடவுளைப்‌ பெண்ணின்பால்‌ எழுந்தருளச்‌ செய்யும்‌. அழகமையாப்‌ பெண்‌, பெண்ணல்லள்‌. அழகென்பது வெண்தோலையோ, மஞ்சள்‌ தோலையோ, சிவப்புத்தோலையோ பற்றி நிற்பதன்று. அது, தூய மனத்தால்‌ அமையும்‌ கற்புறுதியினின்றும்‌ எழும்‌ இரத்த ஓட்டத்தானும்‌, தசைக்கட்டானும்‌ தோற்றமுறும்‌ அருவத்‌ தன்மையது. சுருங்கக்‌ கூறின்‌ “பெண்ணின்‌ நலன்‌ அவள்‌ கற்பிலிருக்கிறது” என்று கூறலாம்‌. இடையிடையே இந்நூற்கண்‌ இதைப்பற்றிக்‌ குறித்துச்‌ செல்வன்‌.
கற்பிழத்தலால்‌ விளையுங்‌ கேட்டை உணராத பெண்ணே தன்னொழமுக்கத்தைக்‌ கெடுக்கப்‌ புகுவள்‌. கற்பிழத்தலால்‌ இத்‌ துணைக்‌ கேடுகள்‌ உண்டு என்பதைப்‌ பெண்‌ இளமையிலேயே கல்வியறிவால்‌ உணர்ந்திருப்பளேல்‌, அவள்‌ ஒழுக்கந்‌ தவற நினைக்கவும்‌ மாட்டாள்‌. கல்வியில்லாக்‌ குறையால்‌ பெண்ணுலகில்‌ பல கேடுகள்‌ விளைகின்றன. அதலால்‌, பலதிறக்‌ கலைகளைப்‌ பெண்‌ இளமையில்‌ பயில்வது சிறப்பு.
“கல்வி பயின்ற பெண்கள்‌ நிறை தவறி நிற்பதில்லையோ” என்று சிலர்‌ வினவலாம்‌. ஏட்டைப்‌ படித்தவரெல்லாரும்‌ கல்வி கற்றவராகார்‌. நூல்களெல்லாம்‌ நூல்கள்‌ ஆகா. பெண்களைக்‌ கெடுக்கும்‌ நூல்களும்‌ உண்டு. தீயார்‌ செயல்கள்‌ எத்துணையோ நாட்டில்‌ உலவுகின்றன. அவரால்‌ எழுதப்பட்ட நூல்களும்‌ நாட்டில்‌ நடமாடுகின்றன. தீய நூல்களைப்‌ படிப்பவர்‌ எங்ஙனங்‌ கற்றவராவார்‌?
சில நன்னூல்களைப்‌ படித்தவரும்‌ கெடுதல்‌ உண்டு. நல்லுணவடன்‌ தீயவுணவைக்‌ கலந்துண்டால்‌ எவ்வுணவின்‌ பயன்‌ மிகுந்து நிற்கும்‌? தீயவுணவின்‌ பயனே மிகுந்து நிற்கும்‌. நன்னூற்‌ பயிற்சியோடு வேறு தீப்பயிற்சிகளையும்‌ பெண்‌ பெறுவளேல்‌ அவளுக்குக்‌ கேடு விளைதல்‌ இயல்பு. நட்பு, கூட்டுறவு, சுற்றம்‌ முதலியவற்றையும்‌ வாழ்வு பொறுத்து நிற்கிறது. நன்னூற்‌ பயிற்சியோடு நட்பு முதலியனவும்‌ நல்லனவாக அமைதல்‌ அழகு. தீய நூல்களை விலக்குவது போலத்‌ தீ நட்பு முதலியவற்றையும்‌ விலக்குதல்‌ விழுப்பம்‌. தீ நட்பு முதலியவற்றால்‌ வாழ்வு கெடுதல்‌ ஒருதலை.

தீ நட்பு களைதல்‌

நண்பரை – அதினும்‌ ஆண்‌ நண்பரைத்‌ – தெரிந்தெடுப்பதில்‌ பெருங்கவலை செலுத்தும்‌ பெண்‌ பின்னே நல்வாழ்வுக்குரிய மகளாவள்‌. பெண்கள்‌ ஆடவரோடு நட்புக்‌ கொள்ளல்‌ ஆகாது என்று யான்‌ கூற மாட்டேன்‌. அவர்கள்‌, எவரோடும்‌ நட்புக்‌ கொள்ளலாம்‌. அந்நட்பு, தீயதாயிருத்தல்‌ கூடாதென்பதை மட்டும்‌ வலியுறுத்துகிறேன்‌. எவ்வாடவானதல்‌ பேசுகையில்‌ காமக்கிளர்ச்சி எழுப்பக்‌ கூடிய உரை பகர்வனேல்‌, அவன்‌ தன்னைக்‌ கொல்லவந்த யமன்‌ என்று கருதி, அவனது நட்பை உடனே பெண்மகள்‌ களைவாளாக. ஏட்டுக்‌ கல்வியினும்‌, நட்பாராய்ந்து தெரியப்‌ பயிலுங்‌ கல்வி மிகச்‌ சிறந்தது. இதுவும்‌ கல்வி இனத்திற்‌ சேர்ந்ததாகும்‌.

கூட்டத்தில்‌ நடமாடல்‌

பெண்மக்கள்‌ இனவேற்றுமை கருதாது ஆண்‌ மக்களுடன்‌ விளையாடலாம்‌. வயதேற வயதேறத்‌ தனித்து ஒரு தனி ஆடவனோடு போதலும்‌ வருதலும்‌ ஆடலும்‌ பாடலும்‌ கூடா. எதைச்‌ செய்தாலும்‌ பெண்மக்களும்‌ ஆண்மக்களும்‌ கூட்டங்‌ கூட்டமாகக்‌ கூடிச்செய்யின்‌, வேறு எண்ணத்துக்கு இடம்‌ பெரிதும்‌ நேராது.

சோதனைப்‌ பருவம்‌

வயதடைந்த நாள்‌ தொட்டுத்‌ திருமணம்‌ வரை, பெண்ணுக்‌குரிய பருவம்‌ மிக நெருக்கடியானது; சோதனைக்கும்‌ உரியது. அக்காலத்தில்‌ தன்னைக்‌ காக்கும்‌ பெண்ணே பின்னைப்‌ பெருந்‌தேவியாவள்‌. நற்கல்வியும்‌, நன்னட்பும்‌, நல்வளர்ப்பும்‌ பின்னைத்‌ தாய்மைக்குரிய எல்லா நலன்களையும்‌ தரும்‌. உற்ற வயதில்‌ பெண்மக்கள்‌ உள்ளத்தில்‌ “பின்‌ தாயாதற்கு ஆக்கந்‌ தேடத்தக்க பருவம்‌ இது. இதனை நல்வழியில்‌ ஓம்புதல்‌ அறம்‌” என்னும்‌ எண்ணமே உறுத்து நிற்றல்‌ வேண்டும்‌. இதற்குரிய கல்வி, நட்பு முதலியவற்றை அவர்கள்‌ இளமையில்‌ பெற முயல்வார்களாக.

உடலோம்பல்‌

கல்வி அறிவு ஒழுக்கம்‌ முதலிய எல்லாவற்றிற்கும்‌ நிலைக்‌ களன்‌ உடல்‌ என்பதை விளக்க வேண்டுவதில்லை. உடலை ஓம்பாது, வெறுங்‌ கல்வி அறிவை மட்டும்‌ பெற முயல்வதால்‌ என்ன பயன்‌ விளையும்‌? கல்வி அறிவைப்‌ பயன்படுத்த நல்லுடல்‌ தேவை. அதலால்‌, உடலோம்புவதிலும்‌ பெண்மக்கள்‌ கருத்துச்‌ செலுத்துவார்களாக.

உடலோம்பு முறைகள்‌ இன்ன இன்ன என்று இந்நூலில்‌ விரித்துக்‌ கூறுதல்‌ பொருத்தமன்று. அவைகட்கெனக்‌ தனி நூல்கள்‌ பல இருக்கின்றன. ஈண்டுச்‌ சிற்சில முறைகளைச்‌ சுருங்கச்‌ சொல்கிறேன்‌.

அகத்தூய்மை

தூய்மை, அகத்தூய்மை புறத்தூய்மை என இரண்டு வகைப்‌படும்‌. அகத்தில்‌ நல்ல எண்ணங்களே தோன்றுமாறு மக்கள்‌ பழகல்‌ சிறப்பு. இய எண்ணங்கள்‌ அகத்திலுறுமேல்‌, அவை உடல்‌ வளனைக்‌ கெடுத்து, வாழ்வையே சிதைக்கும்‌. உடலோம்பலுக்கு முதல்‌ முதல்‌ வேண்டத்தக்கது அகத்தூய்மை. அகத்தூய்மை, உடல்‌ நலத்துக்குப்‌ பெரிய அமிழ்தம்‌. அதற்கு உரியது வாய்மை. “அகத்தூய்மை வாய்மையால்‌ காணப்படும்‌” என்றும்‌, “பொய்யாமை பொய்யாமை ஆற்றின்‌ அறம்பிற – செய்யாமை செய்யாமை நன்று” என்றும்‌ திருவள்ளுவ நாயனார்‌ அருளிச்‌ செய்திருத்தல்‌ காண்க. வாய்மையுள்ள இடத்தில்‌ வேறு பல அறத்துறைகள்‌ உறைவது இயல்பு. பிறவற்றை மேலே போந்துள்ள “நல்லிணக்கம்‌” என்னுந்‌ தலைப்பின்‌ கீழ்ப்‌ பார்க்க.

புறத்தூய்மை

அகத்தூய்மையைப்‌ போலவே புறத்தூய்மையையும்‌ மக்கள்‌ காத்தல்‌ வேண்டும்‌. புறத்தூய்மை இல்லாத பெண்மகளின்‌ அகம்‌ தூய்மையா யிராது. “அகமே புறம்‌”, “மனம்போல வாழ்வு” என வரூஉம்‌ மூதுரைகளை உற்றுநோக்குக. புறத்தூய்மையில்‌ உடல்‌ தூய்மைமையும்‌ வீட்டுத்‌ தூய்மையையும்‌ சேர்த்துக்‌ கொள்க. உடல்‌ தூய்மையைக்‌ காவாது விடின்‌, அஃது உடலில்‌ அழுக்குச்‌ சேர்த்துப்‌ பலதிற நோய்களை உண்டு பண்ணும்‌. வீடுகளிலும்‌ அழுக்குகள்‌ அடைந்திருந்தால்‌, அவற்றினின்றும்‌ பலதிற நச்சுப்‌ பூச்சுக்கள்‌ தோன்றி நோய்களைப்‌ பிறப்பிக்கும்‌.

சுகாதாரம்‌

புறத்தூய்மைக்குப்‌ பல சுகாதார முறைகள்‌ தேவை. பெண்‌ மக்கட்கு இளமையிலே சுகாதாரக்‌ கல்வி பயிற்றல்‌ நல்லது. சுகாதார அறிவு பெறாத பெண்ணால்‌ (அவள்‌ வாழ்விற்கும்‌, அவளைத்‌ தொடர்ந்தோர்‌ வாழ்விற்கும்‌) பலதிறக்‌ கேடுகள்‌ விளையும்‌. சுகாதார முறைகளை ஆண்மக்கள்‌ மட்டும்‌ கவனிப்பதால்‌ பயன்‌ விளையாது. அவை பெண்மக்களாலும்‌ கவனிக்கப்‌ பெறல்‌ வேண்டும்‌.

சுகாதார உணர்ச்சியில்லாத பெண்ணுடன்‌ எப்படி வாழ்வது? அவள்‌ சமைக்கும்‌ உணவை எப்படி, உண்பது? அது நஞ்சன்றோ? பெண்‌ தாயாகலான்‌, அவள்‌ வாழ்வு சுகாதார முடையதாயிருத்தல்‌ அவசியம்‌. அவள்‌ சுகாதார வழியில்‌ நிற்பாளாயின்‌, அவள்‌ வயிற்றிற்‌ பிறக்கும்‌ பிள்ளைகளும்‌ அவ்வழியில்‌ நிற்கப்‌ பயிலும்‌. ஆன்மா சார்ந்ததன்‌ வண்ணமாகும்‌ இயல்பின தன்றோ?

“புறந்தூய்மை நீரால்‌ அமையும்” என்றார்‌ திருவள்ளுவனாரர்‌. நீராடலை ஈண்டுக்‌ குறிப்பதற்கு முன்னர்‌, வேறு சில கடன்‌ முறைகளையுங்‌ குறிப்பது நலம்‌ என்று தோன்றுகிறது.

உறக்கம்‌ : ஆண்மக்களினும்‌ பெண்மக்கட்கு உறக்கம்‌ சிறிது அதிகந்‌ தேவை. நமது நாட்டில்‌ இதற்கு மாறுபட்ட வழக்கம்‌ உண்டு. பெண்மக்கள்‌ உறக்கத்துக்கு ஆண்மக்கள்‌ பல வழியிலும்‌ கேடு சூழ்கிறார்கள்‌. பெண்ணின்‌ உடல்‌ இயல்பையும்‌, அமைதித்‌ தன்மையையும்‌ உணரும்‌ ஆண்மகன்‌, பெண்‌ மகள்‌ உறக்கத்துக்கு இடையூறு செய்யான்‌. பெண்மணிகள்‌ நன்றாக உறங்கி எழுவதே நலம்‌. உறக்கம்‌ வாழ்வுக்கு இன்றியமையாதது. உறக்கமாவது மன ஓய்வேயாகும்‌. ஒருவரது உறக்கத்தைக்‌ கொண்டு அவரது உடல்நிலையை அளந்து கொள்ளலாம்‌. உறக்கத்தின்போது பற்பல எண்ணங்களும்‌, பற்பல கனவுகளும்‌ தோன்றுதல்‌ கூடாது. நல்லுடல்‌ பெற்றிருப்-போர்க்கு அவை தோன்றா. நோயுள்ளார்க்கே அக்கொடுமைகள்‌ தோன்றும்‌. இரவில்‌, குலையாத உறக்கம்‌ வரும்‌ முறையில்‌ மக்கள்‌ பகலில்‌ உடற்பயிற்சி செய்து பழகுவார்‌களாக.

உறக்கநேரம்‌

உறக்க நேரத்தைப்‌ பற்றிப்‌ பலதிறக்‌ கருத்து வேற்றுமைகள்‌ உண்டு. சிலர்‌ எட்டு மணி நேரம்‌ என்பர்‌; சிலர்‌ ஆறு மணி என்பர்‌; சிலர்‌ நான்கு மணி என்பார்‌. எட்டு மணிக்கு மேலே போகாமலும்‌, நான்கு மணிக்குக்குறையாமலும்‌ உறங்குவது நலம்‌. ஆறு மணி நேரம்‌ மிகப்‌ பொருத்தம்‌. நேரம்‌ அவரவர்‌ உடல்நிலைக்கு ஏற்ற வண்ணம்‌ அமையும்‌. உறக்கம்‌ இடை இடை இடர்ப்படல்‌ அகாது. அவ்விடரால்‌ பல கேடுகள்‌ விளையும்‌. இரவு பத்து மணிக்குப்‌ படுத்து, வைகறை எழுவது இனிது.

உறங்குமிடம்‌

உறங்குமிடம்‌, நறுங்காற்று எளிதில்‌ உலவக்‌ கூடியதாய்ப்‌ பகலில்‌ ஞாயிற்றின்‌ ஒளி படரக்‌ கூடியதா யிருத்தல்‌ வேண்டும்‌. இவை நன்கு பரவாத குகைகளில்‌ படுத்துறங்குவது நாளடைவில்‌ உடல்‌ வளத்தைக்‌ குலைத்துக்‌ கொள்வதாகும்‌. படுக்கை அறைக்‌ கதவுகளும்‌, பலகணிகளும்‌ திறக்கப்பட்டி ர௬த்தல்‌ இயற்கைக்குத்‌ துணை போவதாகும்‌. கதவுகளையும்‌ பலகணிகளையும்‌ அடைத்து உறங்குவதால்‌ பல நோய்கள்‌ உண்டாகும்‌. காசநோய்க்குச்‌ சொல்‌லப்படும்‌ பல காரணங்களுள்‌ புழுக்கமான அறையில்‌ படுத்‌ துறங்குவதும்‌ ஒன்று.
படுக்கைகளில்‌ அழுக்கேறலாகாது. அவற்றைத்‌ தூய்மையாக வைத்திருத்தல்‌ நல்லது. அன்றாடம்‌ ஞாயிற்றின்‌ ஒளியில்‌ படுக்கைகளை உலர்த்தல்‌ உத்தமம்‌. பெண்மக்கள்‌ எக்காரணம்‌ பற்றியும்‌ அடுப்புள்ள அறையில்‌ படுத்தல்‌ கூடாது. அங்கே நச்சுக்‌ காற்று அதிகம்‌.
துயிலெழல்‌ : ’வைகறைக்‌ துயிலெழு:’ என்பது ஒளவையார்‌ திருமொழி. வைகறையில்‌ துயில்‌ எழுவதைப்பற்றி இயற்கை நூலார்‌ பலபடக்‌ கூறி இருக்கின்றனர்‌. பறவைகள்‌ விலங்குகள்‌ முதலிய அஃறிணை உயிர்கள்‌, பெரிதும்‌ இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்துகின்றன. அவை எப்பொழுது துயில்‌ எழுகின்றன? விடியற் காலத்திலல்லவோ? ஞாயிறெழுந்த பின்னர்ப்‌ படுக்கை விட்டெழுவது இயற்கைக்கு மாறுபாடு. அவ்‌ வாறெமும்‌ பயிற்சியுடையார்‌ விரைவில்‌ நோய்வாய்ப்படுவர்‌. இயற்கை எழும்பும்போது மக்கள்‌ படுக்கையில்‌ கிடப்பது, குருதியை வெம்மைப்படுத்தி, நாளடைவில்‌ கொதிப்பூட்டிப்‌ பல நோய்கட்கு இடந்தருவதாகும்‌. அதலால்‌, வைகறைத்‌ துயிலெழல்‌ இயற்கை வாழ்விற்குரியதென்க.

காலைக்‌ கடன்‌

காலைக்‌ கடன்‌ : காலையில்‌ எழுந்ததும்‌ மலங்கழித்தல்‌ ஒழுங்கு. மலம்‌ சிக்கலுறாது கழிவது நல்லுடலுக்கு அறிகுறி. மலம்‌ சிக்கல்‌, நோய்க்குக்‌ கால்கொள்வதாகும்‌. மலச்சிக்கல்‌ உற்றதும்‌ சிலா்‌ மருந்துங்‌ கையுமாக நிற்கின்றனார்‌. அது தவறு. மலச்சிக்கல்‌ உற்றதற்குக்‌ காரணம்‌ யாது என்பதைக்‌ காண மக்கள்‌ முயலல்‌ வேண்டும்‌. பொருந்தா உணவருந்தல்‌, மீதூண்‌ கொள்ளல்‌, பசியெழா முன்னஞ்‌ சாப்பிடல்‌, கள்‌ குடித்தல்‌, தீயொழுக்கம்‌, கெட்ட எண்ணம்‌, கவலை, புழுங்குமிடத்தில்‌ வாழ்தல்‌, எப்பயிற்சியுஞ்‌ செய்யாது ஓரே இடத்தில்‌ கிடத்தல்‌ முதலியன மலத்தைச்‌ சிக்கச்‌ செய்கின்றன. இத்தீமைகளினின்றும்‌ விலகாது மருந்தை மட்டும்‌ உண்பது தவறு. மருந்துண்ணும்‌ நேரத்தில்‌ குணங்காணலாம்‌. மருந்து முடிந்ததும்‌ மீண்டும்‌ மலச்சிக்கல்‌ தோன்றி நோயாளரை வருத்தும்‌.

மலச்சிக்கலால்‌ விளையும்‌ கேடுகள்‌

“மலச்சிக்கல்தானே”’ என்று எவரும்‌ ஒரு நொடிப்‌ பொழுதும்‌ கவலையீனமாக இருத்தலாகாது. எல்லாப்‌ பிணிகட்கும்‌ பிறப்‌பிடம்‌ மலச்சிக்கலே என்பதை மக்கள்‌ உணர்வார்களாக. மலம்‌, வேளையில்‌ கழியாது உள்ளே நின்றால்‌, அது நஞ்சாகி உடலின்‌ அகப்புற உறுப்புக்களை எரிக்கும்‌; உறக்கத்தைக்‌ கெடுக்கும்‌; நோயை உண்டாக்கும்‌; எல்லாக்‌ கொடுமைகளையுஷஞ்‌ செய்யும்‌.

மலச்சிக்கலைப்‌ போக்க வழி

தண்ணீர்‌ மட்டுங்‌ கொண்டு ஒருநாளோ இரண்டு நாளோ நிலைமைக்கேற்றபடி விரதமிருந்தால்‌, உள்ளே கிடக்கும்‌ அழுக்குகளெல்லாம்‌ வெளியேவரும்‌,; பசித்தோற்றம்‌ உண்டாகும்‌. நீரும்‌, காற்றும்‌, ஞாயிற்றொளியும்‌ மலச்சிக்கலுக்கு பெரு மருந்துகள்‌. பழ உணவு மிகப்‌ பொருத்தம்‌. எளிதில்‌ ஜீரணமாகக்‌ கூடிய பொருந்திய உணவு கொள்ளுதல்‌ நலம்‌. உடற்பயிற்சிமீ து கவலை செலுத்தல்‌ சிறப்பு. பொருந்திய உணவும்‌, நீரும்‌, காற்றும்‌, ஞாயிற்றொளியும்‌, உடற்பயிற்சியும்‌ மலச்சிக்கலைப்‌ போக்கி நிலையை ஒழுங்குபடுத்தும்‌. மேலும்‌, மலச்சிக்கலால்‌ துன்புறுவோர்‌ எனிமாவாலாதல்‌ அன்றாடம்‌ மலத்தை வெளிப்படுத்தி, இயற்கை வாழ்வை மேற்கொள்வார்களாக. இந்நூலில்‌ இயற்கை முறைகளைப்‌ பற்றி விரித்துரைத்தல்‌ மிகையாகும்‌. நோய்வாய்ப்‌ படுவோர்‌ அவ்வப்போது இயற்கை நுட்பந்‌ தெரிந்த மருத்துவர்‌ மாட்டுக்‌ கேட்டு வாழ்வு நடாத்தல்‌ அறிவுடைமை.
பயிற்சி : உடலுக்குப்‌ பயிற்சி மிக அவசியம்‌; இல்லையேல்‌ கட்டுக்களும்‌, தசைகளும்‌, பிறவும்‌ பிணிப்புண்டு, பின்னை இடர்‌ விளைக்கும்‌. மக்கள்‌ பயிற்சியின்‌ நலத்தை முதலாவது உணர்தல்‌ வேண்டும்‌. உடற்பயிற்சி எதுவாயினுமாக. அதைக்‌ காலையில்‌ ஒழுங்காக மக்கள்‌ செய்துவரல்‌ உடற்காப்பாகும்‌. காலையிலும்‌ மாலையிலும்‌ பயிற்சி செய்து வரலாம்‌. காலை நேரத்தை விடுத்து, மாலை நேரத்தில்‌ பயிற்சி செய்தல்‌ இரண்டாந்தரமாகும்‌. காலையில்‌ பயிற்சி செய்ய முடியாதவர்‌ மாலையில்‌ செய்யலாம்‌. பயிற்சிக்குரிய காலம்‌ காலை நேரமே.

ஆட்டங்கள்‌

பயிற்சிகள்‌ பலதிறத்தன. இங்கே அவற்றை விரித்துக்‌ கூறாது பெண்மக்களுக்குரிய சிலவற்றின்‌ மீது கருத்தைச்‌ செலுத்துகிறேன்‌. மேல்நாட்டுப்‌ பெண்மக்கள்‌, நடை, குதிரை யேற்றம்‌, பந்தாட்டம்‌, தண்ணீரில்‌ நீந்தல்‌ முதலியவற்றைக்‌ கொண்டு வாழ்கிறார்கள்‌. இவற்றை நமது நாட்டுப்‌ பெண்‌ மக்களும்‌ கொள்ளலாம்‌. பந்தாட்டம்‌ பழைய காலத்தில்‌ நமது நாட்டு மகளிர்‌ ஆட்டங்களுள்‌ ஒன்றாயிருந்தது. இதனை நமது நாட்டுப்‌ புராணங்களிற்‌ காணலாம்‌.
நமது நாட்டு மகளிராட்டங்கள்‌ பல உண்டு. அவை கும்மி, குரவை, கோலாட்டம்‌, பரதநாட்டியம்‌, இசை முதலியன. இவ்‌ வாட்டங்கள்‌ மகிழ்ச்சியைப்‌ பெருக்கி உடல்நலனை உஊட்டும்‌. நமது நாட்டுப்‌ பெண்‌ பாடசாலைகளில்‌ இவ்வாட்டங்கள்‌ போதிக்கப்படல்‌ வேண்டும்‌. ஓவ்வொரு வீட்டிலும்‌ இவ்‌ வாட்டங்கள்‌ நிகழ்தல்‌ வேண்டும்‌. பரதநாட்டியம்‌ ஒவ்வோர்‌ உறுப்புக்கும்‌ உரமூட்டுவது. அஃது, இப்பொழுது வீட்டுக்‌ குல மகளிரை விடுத்து, மற்றவரிடம்‌ புகுந்து, பொருளீட்டுங்‌ களி யாட்டங்களுள்‌ ஒன்றாய்‌ ஒதுங்கிவிட்டது. பரதநாட்டியம்‌ தலையாய பயிற்சி. இசை மிக நுண்ணிய பயிற்சி. இது பல நுண்ணு அப்புக்களுக்கு உரமூட்டும்‌. பெண்மக்கள்‌ இசைப்‌ பயிற்சியால்‌ உடல்‌ நலத்தைக்‌ காத்துவரலாம்‌.
நமது நாட்டுப்‌ பெண்மக்கள்‌ வாழ்விலேயே வேறு பல பயிற்சிகளும்‌ அமைந்திருக்-கின்றன. அவை நீர்முகத்தல்‌, வீடு பெருக்கல்‌, அரிசி குத்தல்‌, மாவறைத்தல்‌, இராட்டை சுழற்றல்‌ முதலியன. இவை பெண்‌ மக்களின்‌ கை கால்‌ இடுப்பு முதலிய வற்றிற்கு உரமளிப்பன.

இயந்திர அரக்கன்‌

நாகரிகம்‌ என்னும்‌ பெயரால்‌ இப்பொழுது இயந்திரம்‌ என்னும்‌ அரக்கன்‌, உலகத்திலுள்ள இயற்கை ஆற்றலையும்‌ வனப்பையும்‌ வெட்டிச்‌ சாய்த்து வருகிறான்‌. அவ்வரக்கன்‌ நமது நாட்டிலும்‌ நுழைந்து சூறையாடுகிறான்‌; நமது நாட்டுப்‌ பெண்‌ மக்களின்‌ இரத்தம்‌, சத்து, தாது, அழகு முதலியவற்றை உறிஞ்சு கிறான்‌. பெண்மக்கள்‌ என்புக்‌ கூடுகளாகிக்‌ கணீல்‌ கணீல்‌ என இருமல்‌ ஓசை எழுப்புகிறவர்களாய்‌ மருந்துங்கையுமாய்‌ நிற்‌கிறார்கள்‌. நமது நாட்டில்‌ நெல்‌, அரிசி, மிளகு, சீயக்காய்‌ எல்லா வற்றையுந்‌ தூளாக்க மூலை முடுக்குகளிலெல்லாம்‌, இயந்திரங்கள்‌ நுழைந்திருக்-கின்றன. இயந்திரங்கள்‌ பெண்‌ மக்களைச்‌ சோம்பேறிகளாக்குகின்றன; அவர்கள்‌ உடல்‌ உரத்தையும்‌ கெடுக்கின்றன.
இயந்திரங்கள்‌ உணவுப்‌ பொருளிலுள்ள சத்துக்களைப்‌ போக்குகின்றன. உதாரணமாக இயந்திரத்தாற்‌ குத்தப்பெற்ற அரிசியை எடுத்துக்‌ கொள்வோம்‌. அரிசிமீது உமி இருக்கிறது. அரிசிமீதுள்ள சத்தின்‌ காப்புக்கென உமி இயற்கையில்‌ அமைந்‌திருக்கிறது. இயந்திரம்‌, உமியை நீக்கும்போது, அரிசிமீதுள்ள சத்தும்‌ இல்லாதவாறு அதைத்‌ தீட்டிக்‌ கழிக்கிறது. அந்தச்‌ சத்தில்‌ சில நலன்கள்‌ உண்டு. அவற்றுள்‌ ஒன்று ஜீரணத்துக்குத்‌ துணை நிற்பது. இச்சத்தில்லாச்‌ சோற்றை உண்பதால்‌ என்ன பயன்‌? தோயுறலே விளையும்‌ பயன்‌.

செல்வப்‌ பெண்கள்‌

செல்வர்‌ வீட்டுப்‌ பெண்மக்களிற்‌ பலர்‌ வீட்டு வேலையுஞ்‌ செய்வதில்லை; வேறு ஆட்டங்களும்‌ ஆடுவதில்லை. இவர்தம்‌ நிலைகுறித்துப்‌ பெரிதும்‌ இரங்குகிறேன்‌. இவர்‌ எத்துணையோ உயிர்க்கொலை செய்யும்‌ பாவத்துக்குள்ளாகிறார்‌ என்று சுருங்கச்‌ சொல்கிறேன்‌. உழைப்பில்லாப்‌ பெண்மக்கள்‌ கருவில்‌ உயிர்‌ தங்குதலே அரிது; தங்கினும்‌ இடையிடையே அது கரைந்துபோகும்‌; கரையாது நிற்பினும்‌, ௧ரு உயிர்க்கும்போது குழந்தை உள்ளே இறந்து போதலும்‌ உண்டு; சில சமயங்களில்‌ மருத்துவர்‌ பெருமுயற்சி செய்து கருவியால்‌ குழந்தையைத்‌ துண்டித்து வெளிப்-படுத்துவதும்‌ உண்டு. இக்கொலைகட்குக்‌ காரணர்‌ யார்‌? காரணம்‌ எது? உடற்பயிற்சி செய்யாத செல்வப்‌ பெண்மக்கள்‌ காரணர்‌. காரணம்‌ இவர்களின்‌ சோம்பல்‌; சோம்பல்‌. ஆகவே, பெண்மக்களுக்குப்‌ பயிற்சி இன்றியமையாதது.

நீராடல்‌ : நீராடலைப்‌ பற்றி மேல்நாட்டார்‌ பல முறைகள்‌ வகுத்திருக்கின்றனர்‌. அவற்றை ஆராய்ந்து, அவற்றில்‌ வீழ்ந்து புரள்வது அறிவுடைமையாகாது. குளிர்மிகுந்த அந்நாட்டிற்கு அம்முறைகள்‌ தேவையே. நமது நாட்டிற்குச்‌ சூரிய நாராயணன்‌ திருவருள்‌ உண்டு. அத்திருவருள்‌ எவ்வளவோ சுகாதாரக்‌ குறை களைப்‌ போக்கிவருகிறது. அதலால்‌, குளிர்‌ மிகுந்த மேல்நாட்டு முறைகள்‌ நமது நாட்டவர்க்குப்‌ பெரிதும்‌ பொருந்தி வருவன அல்ல.

காலையில்‌ தூய நீராடுதல்‌ வேண்டும்‌. மெலிந்த உடலினோர்‌ வெத்நீரில்‌ மூழ்குவது நலம்‌. ஊற்று நீரோ ஓடுநீரோ இல்லாத இடத்தில்‌ எல்லாரும்‌ வெந்நீரில்‌ மூழ்குவது சிறப்பு. ஓடுநீர்‌ மிக நறுமை யுடையதாயின்‌, மூன்று வேளையும்‌ அதில்‌ மூழ்கலாம்‌.

நீராடும்போது உடம்பிலுள்ள அழுக்குகளை நன்றாகத்‌ தேய்த்துக்‌ கழுவுதல்‌ அழகை வளர்க்கும்‌. பச்சைப்பருப்போ சீயக்காயோ புன்கோ உபயோகிக்கலாம்‌. சோப்‌ அநாவசியம்‌.

நாடோறும்‌ நீராடுவோரை நோய்‌ அணுகாது; மற்றவரை நோய்‌ வருத்தும்‌. நீராடல்‌ மிக மிக அவசியம்‌. நீராடாது பெண்‌ மகள்‌ எவ்வினையும்‌ நிகழ்த்தலாகாது. “கூழானாலும்‌ குளித்துக்‌ குடி- கந்தையானாலும்‌ கசக்கிக்‌ கட்டு” என்னும்‌ பழமொழியை உற்று நோக்குக.

நீர்‌ மூழ்கலைப்‌ போலவே வேறு இரண்டு மூழ்க்குகள்‌ இருக்கின்றன. ஒன்று காற்று மூழ்க்கு; மற்றொன்று ஞாயிற்‌ றொளி மூழ்க்கு. இவ்விரண்டிற்கும்‌ நீண்ட நேரமும்‌ பெரு முயற்சியும்‌ தேவையில்லை. சிறிது நேரம்‌ தூய காற்று வீசு மிடத்தில்‌ கதிரொளிபட நிற்றல்‌ சாலும்‌. அதிகாலையில்‌ புறப்படும்‌ இளஞ்செஞ்ஞாயிற்றொளியும்‌, மாலை ஞாயிற்றொளியும்‌ உடல்நலத்துக்குரியன. ஞாயிற்றின்‌ ஒலி ஓவ்வோர்‌ உறுப்பிலும்‌ படருமாறு புரண்டு புரண்டு படுத்தல்‌ மிகவும்‌ நன்று. இக்காலைக்‌ கடன்களைக்‌ குறைவற ஆற்றிச்‌ சிறிது நேரம்‌ அன்பு வடிவான ஆண்டவனை உன்னிப்‌ பொருந்திய உணவு கொள்ளல்‌ தகுதி.

உணவு

சுவையடக்கம்‌ : அடக்கம்‌ பெண்மக்கள்‌ உடைமை என்று மேலே சொல்லப்பட்டது. இவ்வுடைமை குழந்தைமை யிலேயே பெண்மக்கட்கு அணியப்‌ பெறல்‌ வேண்டும்‌. அடக்க நிலைகள்‌ பலதிறத்தன. அவற்றுள்‌ தலையாயது நாச்சுவை அடக்கம்‌. இவ்வடக்கம்‌ இருபாலார்க்குந்‌ தேவை. இது பெரிதும்‌ பெண்‌ மக்கள்பால்‌ சிறந்து விளங்கல்‌ நல்லது. நாச்சுவை அடக்கமிலாப்‌ பெண்‌, பின்னைப்‌ பிற அடக்கங்களையும்‌ இழப்பள்‌. அதலால்‌, சுவை அடக்கம்‌ பெண்மக்கட்கு மிகமிக இன்றியமையாதது.
குழந்தைமையில்‌ கண்டதைக்‌ தின்று பழகும்‌ பெண்‌, பின்‌ நா அடங்கி வாழ்தல்‌ அரிது. பெண்மகள்‌ குழந்தைமையில்‌ கண்டதைத்‌ தானே தின்னமாட்டாள்‌. தாய்‌ தந்தையர்‌ மடமை யால்‌ குழந்தை கண்டதைக்‌ தின்பதுண்டு. குழந்தைமையில்‌ பெண்மகள்‌ கண்டதைத்‌ தின்பது பின்னை வாழ்வைக்‌ குலைக்கு மென்பது மூடத்‌ தாய்‌ தந்தையர்க்கு விளங்குவதில்லை. குழந்தை மையிலேயே கண்டதைத்தின்று கொழுத்தால்‌ பின்னை வாழ்வில்‌ மகள்‌ மிக வலிமை உடையவளாய்‌ இருப்பள்‌ என்பது தாய்‌ தந்தையர்‌ கருத்துப்போலும்‌! குழந்தைகட்கு அளவாக உணவளித்து, நா அடங்க அவைகளை வளர்க்கத்‌ தாய்‌ தந்தையார்‌ பயில்வாராக.
சில தாய்‌ தந்தையர்‌ “அன்பு” “அன்பு” என்று கண்டதை வாங்கிக்‌ குழந்தைகட்குக்‌ கொடுப்பதுண்டு. இவ்வன்பு பின்னைப்‌ பெண்ணை எலும்பாக்கும்‌ என்பதைப்‌ பெற்றோர்‌ உணர்வ தில்லை. பிள்ளைகளுக்குக்‌ கண்டதை வாங்கிக்‌ கொடுக்கும்‌ வழியில்தான்‌ பெற்றோர்‌ அன்பைக்‌ காட்டல்‌ வேண்டும்‌ போலும்‌! இவ்வன்பு அன்பாகாது. இது, பெண்ணை விரைவில்‌ சுடு காட்டுக்கு அனுப்பும்‌ ’அன்பாக’ முடியும்‌. இப்போலி அன்பு எத்துணையோ பெண்மக்கள்‌ வாழ்வைக்‌ குலைக்கும்‌ யமனாகிறது. பின்‌ வாழ்வில்‌ பெண்‌ தாயாதற்கு வேண்டப்படும்‌ இயல்பும்‌ உடலும்‌ அமைதற்குரிய உணவு ஊட்டுவதில்‌, பெற்றோர்‌ கவலை செலுத்துவது பொருந்திய அன்பாகும்‌.
உணவின்‌ தன்மை, அளவு முறை, காலம்‌ முதலியவற்றைப்‌ பெண்ணின்‌ இளமையிலேயே தாய்‌ தந்தையர்‌ கணித்துப்‌ பழக்கத்தில்‌ கொணரல்‌ சிறப்பு. இப்பழக்கம்‌ நா அடக்கத்தை இயற்கையில்‌ கொணர்ந்து நிறுத்தும்‌. கண்ட பொருளைக்‌ காணுந்தோறும்‌ நாவறப்‌ பெறும்‌ பெண்ணால்‌, பெண்ணுக்‌குரிய வாழ்வு நடாத்தல்‌ இயலாது. அவள்‌ அடிக்கடி நோய்‌ வாய்ப்‌ பட்டுங்கிடப்பள்‌.

நோயற்ற வாழ்வு

நோயற்ற வாழ்வன்றோ வாழ்வு? நோய்‌ பெரிதும்‌ உணவைப்‌ பொறுத்து நிற்பது. பலதிற நோய்கட்குக்‌ காரணம்‌ பெருந்‌ திண்டியே யாகும்‌. அன்றாடம்‌ உண்ணும்‌ உணவு, அன்றாடம்‌ ஜீரணமாவதாயிருத்தல்‌ வேண்டும்‌. ஜீரணமாகாது, அரைகுறை யாக உணவு வயிற்றுள்‌ நிற்கும்போது, மேலும்‌ மேலும்‌ உணவு ஏற்பது, நோயை உண்டுபண்ணாது, பின்னை எதை உண்டு பண்ணும்‌? பசி எழா முன்னம்‌ உணவருந்தும்‌ பயிற்சியினுங் கொடியது பிறிதொன்றில்லை. பெருந்திண்டி,, பொருந்தா உணவு, காலந்தவறிய உணவு முதலியன நோய்க்கு அடி கோலுவன.
“நோய்‌’ என்னும்‌ சொற்குத்‌ “துன்பம்‌” என்பது பொருள்‌. உடலுக்குத்‌ துன்பம்‌ எப்பொழுது நேர்கிறது? அவ்வவ்வுறுப்பு, தன்‌ தன்‌ கடனை ஆற்ற இயலாது, தடைபடும்போது, அதாவது பிணிபடும்போது துன்பம்‌ உண்டாகிறது. பிணிப்புக்கு அடிப்‌ படை பெருந்திண்டி, பொருந்தா உணவு முதலியன. எனவே, துன்பத்துக்கு அதாவது நோய்க்குக்‌ காரணம்‌ பொருந்தா உணவு முதலியன என்க. உணவை ஓமழுங்குபடுத்தி வாழ்வோர்க்கு நோய்‌ தோன்றல்‌ அரிது. நோயற்ற வாழ்விற்கு ஓழுங்குபட்ட உணவு தலையாய காரணம்‌ என்று கூறலாம்‌.

விரதம்‌

வேளை நாழி அறியாது, கண்டதை வயிற்றில்‌ அடைத்து, நோய்வாய்ப்படும்போது, பலதிற மருந்துகளைப்‌ பெண்மகள்‌ உண்பது, அவள்‌ தன்‌ கொழுமையைக்‌ கெடுப்பதாகும்‌. பெருந் திண்டியால்‌ உற்றநோய்க்கு மருந்து எற்றுக்கு? திண்டியின்‌ பெருக்கமும்‌, அரை குறை ஜீரணமும்‌, இவற்றால்‌ ஏற்படும்‌ மலச்‌ சிக்கலும்‌, பழைய மலக்கட்டு உடலுள்‌ பரப்பும்‌ நஞ்சும்‌ தொலைதற்கு விரதமிருத்தல்‌ பொருத்தம்‌. விரதம்‌, வயிற்றினுள்‌ளேயுள்ள ஆபாசங்களைத்‌ தள்ளி, உறுப்புக்களுக்கு ஏற்பட்ட பிணியையும்‌ சோர்வையும்‌ நீக்கி, உறுப்புக்களுக்கு ஊக்க மூட்டும்‌. நோய்‌ போக்கவல்லது நோன்பன்றி, மருந்தன்று என்பதைப்‌ பெண்மக்கள்‌ இளமையிலேயே உணரல்‌ வேண்டும்‌. இது குறித்துப்‌ பின்னுங்‌ கூறுவன்‌.

உண்டி சுருங்கல்‌

பெண்மக்கள்‌ தங்கள்‌ வாழ்விற்கு உணவும்‌ துணை செய்வதென்பதைத்‌ தெரிந்து நடப்பதும்‌ ஒருவிதக்‌ கல்விப்‌ பயிற்சியாகும்‌. ஓழுங்குபட்ட உணவைப்‌ பெண்மக்கள்‌ உண்டுவரின்‌, அவர்களிடம்‌ எந்நோயும்‌ தலைகாட்டாது. “உண்டி சுருங்குதல்‌ பெண்டிர்க்‌ கழகு’ என்றார்‌ நம்‌ மூதாட்டியார்‌. உண்டி சுருக்கத்தைப்‌ பற்றி இதுபோழ்து மேல்நாட்டார்‌ பல நூல்கள்‌ எழுதி வருகின்றனர்‌. அந்நூல்கள்‌ பெரிதும்‌ நமது பழைய முனிவரர்‌ கொண்ட உணவு முறையையே அறிவுறுத்துகின்றன. “உண்டி சுருங்குதல்‌” எனில்‌, நாடோறும்‌ பட்டினி கிடப்பதன்று. உண்டிப்‌ பெருக்கம்‌ கூடாதென்பதே அதன்‌ கருத்து. பெருந்‌ தண்டி யால்‌ மக்களுக்கு விலங்குணர்வு பெருகுவ தோடு நோயும்‌ பெருகும்‌. அதலால்‌, மக்கள்‌ உண்டிப்‌ பெருக்கை ஓழிப்பார்களாக.

பொருந்தா உணவு

“பெண்‌” என்னுஞ்‌ சொல்லிற்குச்‌ “கட்புலனாயதோரா்‌ அமைதித்‌ தன்மை” என்று மேலே எடுத்துக்‌ காட்டப்பட்டது. அமைதிக்குரிய பொருளையே பெண்மக்கள்‌ உண்பது நலம்‌. புளி காரம்‌ கலந்த பதார்த்தங்களும்‌, அவை கலந்த ஊறுகாய்களும்‌, புலால்‌ – காப்பி – தேயிலை – கொக்கோ – ஓவல்டைன்‌ முதலியவைகளால்‌ செய்யப்படும்‌ பான வகைகளும்‌, கள்‌ முதலிய மயக்கப்‌ பொருள்களும்‌ அமைதி குலைப்பனவாம்‌. மக்கள்‌ இவைகளைக்‌ கனவினுங்‌ கருதலாகாது.
அளவு கடந்த புளி காரம்‌ கலந்த பதார்த்தங்களும்‌, ஊறுகாய்களும்‌ நமது நாட்டின்‌ இரத்தத்தோடு கலந்துவிட்டன. அவற்றில்‌ சுவை உண்டு என்பது சிலர்‌ எண்ணம்‌. சுவை என்பது இயற்கைப்‌ பொருளில்‌ இருப்பது. இயற்கைச்‌ சுவையைக்‌ கெடுக்கும்‌ ஒன்று, சுவையாகக்‌ கருதப்படுவது பழக்கத்தின்‌ குற்றமாகும்‌. பெருமிதப்‌ புளி மிளகாய்க்‌ கலப்பு, கொதிப்பை உண்டாக்கி, மக்கட்குச்‌ சீற்றம்‌ முதலிய தீக்குணங்களை எழுப்பும்‌.
“உப்பு, புளி, காரம்‌ இருந்தால்தானே உடலுக்கு நல்லது” என்று நமது வீட்டுத்‌ தாய்மார்‌ சொல்வது வழக்கம்‌. உப்பு – புளி – காரத்தில்‌ மூழ்கியவர்‌ இரண்டொரு நாள்‌ அவற்றை விடுத்‌ திருப்பின்‌, அவர்‌ வானத்தில்‌ பறப்பதுபோலக்‌ காணப்பெறுவர்‌. மேலும்‌ மேலும்‌ அவர்‌ அவற்றை நீக்கிவரின்‌, நாளடைவில்‌ அவற்றின்‌ கொடுமை அவர்க்குப்‌ புலனாகும்‌. உப்பு – புளி – காரம்‌ உண்போர்‌, அவற்றைத்‌ திடீரென விட வேண்டுவதில்லை. படிப்‌ படியாக அவற்றைக்‌ குறைத்து வருவது நலம்‌.
உப்பை அளவாக உபயோகித்து வரலாம்‌. இயற்கைக்‌ காய்கறிகளை உண்போர்க்கு உப்பே தேவையில்லை. காய்கறிகளைச்‌ சமைத்துச்‌ சாப்பிடுவோர்‌ சிறிது உப்புச்‌ சேர்த்துக்‌ கொள்ளலாம்‌. நாளடைவில்‌ உப்பையும்‌ நீக்க முயன்று வருவது சிறப்பு.
புளி கொடிய தென்று சொல்லப்படுகிறது. “காட்டுக்குப்‌ புலி – நாட்டுக்குப்‌ புளி’ என்பது பழமொழி. புளியின்‌ கொடுமை யுணர்ந்து, பழமொழி கண்ட நாடு, புளியில்‌ தோய்ந்து கிடப்பது அநியாயம்‌. புளிக்குப்‌ பதிலாக எலுமிச்சஞ்‌ சாறு சேர்க்கலாம்‌. இதற்குப்‌ பழச்சாறென்ற சிறப்புப்‌ பெயரும்‌ உண்டு. புளியில்‌ விருப்புடையோர்‌, அளவைச்‌ சுருக்கி, அதைப்‌ பயன்படுத்தலாம்‌. புளியிலும்‌ ஜீவசத்து இருத்தல்‌ இக்கால அராய்ச்சியாளரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது.
மிளகாயைப்‌ பற்றி ஓன்றும்‌ விரித்துக்‌ கூற வேண்டு வதில்லை. பழைய காலத்தில்‌ மிளகாய்‌ நமது நாட்டில்‌ இல்லை. அக்காலத்தில்‌ காய்கறிகளிலும்‌ ஊறுகாய்களிலும்‌ மிளகாய்‌ காரங்‌ கலந்து நம்மவர்‌ உண்டாரில்லை. நம்மவர்‌ மிளகுநீர்‌ உண்டாரேயன்று மிளகாய்‌ நீர்‌ உண்டாரில்லை. மிளகு ரசம்‌ இப்பொழுது மிளகாய்‌ ரசமாக மாறிவிட்டது. மிளகாய்‌ நமது நாட்டில்‌ இடைக்காலத்தில்‌ நுழைந்தது. அதன்பாலுள்ள காரங்கண்டு, நம்மவர்‌ அதை “மிளகு காய்‌’ என்று அழைத்தனார்‌ போலும்‌! அது மிளகுகாய்‌ அன்று. நமது நாட்டு உணவுப்‌ பொருளில்‌ மிளகாய்‌ ஒன்றன்று. மிளகாய்க்குப்‌ பதிலாக மிளகைப்‌ பயன்படுத்தலாம்‌. மிளகாயைப்‌ பயன்படுத்திப்‌ பழகியவர்‌ அதை ஓரளவில்‌ பயன்படுத்துவது தீதாகாது. மிளகாயினும்‌ ஒருவித ஜீவசத்து உண்டு. மிளகாயை அளவு கடந்து உபயோகிப்பது தவறு.
இரஜோ குணத்தையும்‌, தமோ குணத்தையும்‌ எழுப்ப வல்ல கார வகைகளை அமைதி வடி வாயிலங்கும்‌ பெண்மக்கள்‌ உண்ணாதிருப்பார்களாக, பெரிதும்‌ உண்ணா-திருப்பார்களாக. பெண்மணிகள்‌ இயல்புக்குச்‌ சாத்துவிக உணவே பொருந்தியது. தாய்‌ தந்தையர்‌, குழந்தைகளுக்கு – சிறப்பாகப்‌ பெண்‌ குழந்தை களுக்கு – சாத்துவிக உணவு ஊட்டி வளர்ப்பாராக.

புலால்‌

எக்காரணம்‌ பற்றியும்‌ பெண்மக்கள்‌ புலால்‌ உண்ணல்‌ கூடாது. பெண்‌ மக்கள்‌ அனைவரும்‌ தூய உணவு அருந்துவதில்‌ உறுதி கொள்ளல்‌ வேண்டும்‌. அப்பொழுது ஆணுலகும்‌ திருந்தும்‌. மன்பதைக்குப்‌ (பெண்மக்களுக்கோ ஆண்‌ மக்களுக்கோ) புலால்‌ உணவு பொருந்தாததேயாகும்‌. புலால்‌ உண்ணாமையைப்‌ பற்றி நம்‌ நாட்டார்‌ எழுதிய நூல்கள்‌ பலப்பல. நம்மவர்‌ ஜீவகாருண்‌யத்தை அடிப்படையாகக்‌ கிடத்தி நூல்கள்‌ எழுதினர்‌. மேல்‌ நாட்டாரும்‌ புலால்‌ உண்ணாமைய௰யைப்‌ பற்றிப்‌ பலப்பல நூல்கள்‌ எழுதி வருகின்றனர்‌. அவர்‌ ஆராய்ச்சி வாயிலாக (உடல்‌ நலங்‌ கருதிப்‌ புலால்‌ உணவை மறுத்து வருகின்றனர்‌. “புலால்‌ உணவில்‌ வீரம்‌ உண்டு’ என்று சொல்வது அராய்ச்சி இல்லாதார்‌ கூற்று. அதை ஓதுக்குக. அறிஞர்‌ ஏற்கத்தக்க முறையில்‌, காரணங்காட்டி எழுதப்பட்டு வரும்‌ நூல்களைப்‌ படிக்குமாறு தோழர்களைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.
புலால்‌ உணவு குணத்தையும்‌ கெடுக்கும்‌, உடல்‌ வளத்தையும்‌ குலைக்கும்‌. “புலால்‌, உடல்‌ வளந்தருவது” என்னும்‌ கூற்றுக்கு அறிவு உலகில்‌ இனி அதரவு இராது. புலால்‌ உணவு, உடலுக்கு நலஞ்‌ செய்வதன்று. நலத்துக்குப்‌ பதிலாக அது நோய்‌ செய்யும்‌ என்க.
இயற்கையாகப்‌ பெண்மக்களுக்கு அமைதிக்குணம்‌ அமைந்‌திருக்கிறது. அமைதி, பெண்ணின்‌ வாழ்விற்கு உரியது. அதைப்‌ புலால்‌ உணவு சிதைக்கும்‌. இரஜோ குணத்தை எழுப்பி, மக்களைக்‌ கெடுக்கும்‌ புலாலை எக்காரணம்‌ பற்றியும்‌ பெண்‌ மக்கள்‌ உண்ணுதல்‌ கூடாது.

பொருந்தாப்‌ பானங்கள்‌

இக்கால நாகரிகம்‌ என்னும்‌ பெயரால்‌, காப்‌பி- தேயிலை- கொக்கோ – ஓவல்டைன்‌ – இவற்றால்‌ செய்யப்படும்‌ பானங்கள்‌, உலக முமுவதும்‌ பரவியிருக்கின்றன. நமது நாட்டிலும்‌ – கூக்கிராமங்களிலும்‌, குடிசைகளிலும்‌ – அப்பானங்கள்‌ குடியேறி விட்டன. காப்பிக்‌ கடைகள்‌ இல்லாத இடமில்லை. கட்குடியை ஓழிக்கப்பல தேசபக்தர்‌ முயன்றனர்‌. அம்முயற்சி காப்பிக்‌ கடை மீது திரும்புங்‌ காலம்‌ என்று வரும்‌? கள்ளுக்‌ கடைக்காதல்‌ சில கட்டுப்பாடுகள்‌ இருந்தன. காப்பிக்‌ கடைக்கோ எவ்விதக்‌ கட்டுப்‌ பாடும்‌ இல்லை. கள்ளுக்கும்‌ காப்பிக்கும்‌ பெரும்‌ வேற்றுமை இல்லை. இருவருஞ்‌ சகோதரர்‌. கள்ளார்‌ அண்ணனார்‌; காப்பியார்‌ தம்பியார்‌. இவ்வளவே வேற்றுமை. காப்பி முதலிய பானங்களால்‌ விளையுங்‌ கொடுமைகள்‌ அறிஞரால்‌ சொல்லப்‌ படுகின்றன; எழுதப்படுகின்றன. அனால்‌ அவற்றை ஓஒழித்தற்கு எவ்வித முயற்சியுஞ்‌ செய்யப்படுவதில்லை.
காப்பியும்‌, தேயிலையும்‌, கொக்கோவும்‌ வெம்மை நாட்டு மக்களை எப்படி அரிக்கும்‌ என்பதைச்‌ சொல்லத்‌ தேவையில்லை. நாட்டில்‌ காசம்‌ – க்ஷயம்‌ – நீரிழிவு முதலிய நோய்களைக்‌ காப்பி முதலிய குடிகள்‌ பெருக்கி வருகின்றன. கொடிய நோய்கட்கு இரையாகியும்‌, அக்குடிகளை ஓழிக்க நம்மவர்‌ துணிகிறாரில்லை. கூூயத்தால்‌ பீடிக்கப்பட்டு, உடல்‌ மெலிந்த பின்னர்‌ – “டாக்டர்‌” அறிவுறுத்திய பிறகு – வேண்டா வெறுப்பாக அக்கொடிய குடிகளை அகற்ற நம்மவர்‌ முயல்கின்றனர்‌. இஃதென்ன அறியாமை? இளமை தொட்டே கொடிய பானங்களை நீக்கி வந்திருந்தால்‌, காசத்துக்கும்‌ க்ஷ்யத்துக்கும்‌ மக்கள்‌ இரையாக வேண்டுவதில்லை. கண்ணிருந்தும்‌ குழியில்‌ விமுகிறவர்‌ நம்மவர்‌.

நகரப்‌ பெண்மக்கள்‌ நிலை

ஆண்மக்களில்‌ நூற்றுக்கு ஐம்பது பேரின்‌ நுரை ஈரல்‌ கெட்டிருந்தால்‌, பெண்மக்களில்‌ நூற்றுக்கு எழுபத்தைந்து பேரின்‌ நுரையீரல்‌ கெட்டிருக்கும்‌. நகரங்களிலுள்ள எப்‌பெண்மணி இருமாமலிருக்கிறாள்‌? வீடுகளில்‌ அழகொழுகும்‌ பெண்‌ மக்களா நடமாடுகிறார்கள்‌? என்புக்‌ கூடுகள்‌ அல்லவோ நிற்கின்றன? பெண்ணுலகின்‌ நிலை இஃதாயின்‌, பின்சந்ததியின்‌ நிலை என்னாகும்‌? வயிற்றைப்‌ பற்றிய பலதிற நோய்களும்‌, நீரிழிவு முதலிய கொடிய நோய்களும்‌ பெண்ணுலகை அரித்து வருவதை விரித்தலும்‌ வேண்டுமோ? இத்துணைத்‌ துன்பங்கட்குக்‌ காரணம்‌ காபி, தேயிலை, கொக்கோ முதலியன என்றுணர்ந்தும்‌, அவற்றை விட்டொழிக்க நம்மவர்‌ மனங்‌ கொள்கிறாரில்லை. காப்பி முதலிய குடிகள்‌ மிகுந்துள்ள இந்நாளில்‌, தாய்‌ தந்தையர்‌, பொதுவாகக்‌ குழந்தைகளை – சிறப்பாகப்‌ பெண்‌ குழந்தைகளை- அக்குடிப்‌ பயிற்சியினின்றுங்‌ காப்பாராக.
காப்பி, தேயிலை, கொக்கோ முதலிய குடிகட்குப்‌ பதிலாகத்‌ தூநீர்‌, நீர்மோர்‌, பழச்சாறு, இளநீர்‌ முதலியவற்றை மக்கள்‌ அருந்தலாம்‌. இவற்றால்‌ உடலுக்குக்‌ கேடில்லை. இவை உள்ளு அப்புக்களுக்கு எரியூட்டா; ஜீரணத்துக்கும்‌, இரத்த ஓட்டத்துக்கும்‌ ஈரல்‌ (ம) களக்கத்துக்கும்‌, பித்தச்‌ சுரப்புக்கும்‌ துணை புரியும்‌.
இயற்கை உணவு, அமைதிக்கும்‌ அன்புக்கும்‌ இன்பத்துக்கும்‌ உரியது. குழந்தைமை தொட்டுப்‌ பெண்மக்கள்‌ பொருந்திய உணவு அருந்தி வளருமாறு செய்ய வேண்டுவது தாய்‌ தந்தையர்‌ கடன்‌.

நேரம்‌

உணவுக்குரிய நேரம்‌, காலை – உச்சி – மாலை- என்று விளக்க வேண்டுவதில்லை. இப்பொழுது ஆறு முறை உண்போரும்‌ உளர்‌. அவர்‌, இன்ப வாழ்வை இழந்தவர்‌ என்பது எனது கருத்து. உணவுப்‌ பெருக்கால்‌ உடல்‌ நலமுறாது. உணவை அளவாக அருந்தலே பொருத்தம்‌. மூன்று வேளை உணவு நமது நாட்டு அறிஞரால்‌ மறுக்கப்படுதலும்‌ உண்டு. “மூன்று வேளை உண்பவன்‌ ரோகி, இரண்டு வேளை உண்பவன்‌ போகி, ஒரு வேளை உண்பவன்‌ யோகி” என்றொரு வழக்குத்‌ தொடர்‌ இந்நாட்டில்‌ உலவுகிறது. காலை மாலை இரண்டு வேளை எளிய உணவு ஏற்றுப்‌ பகல்‌ சிறிது கொழுமையான உணவு ஏற்பது நலம்‌. மேலே குறிப்‌பிட்ட பொருந்தா உணவு போக, மிகுதியுள்ள நல்லுணவை அவரவர்‌ வழக்கப்படி யே உண்டு வரலாம்‌. உணவுடன்‌ பழம்‌ அருந்தல்‌ நலம்‌. ஆரஞ்ச்‌ எவர்க்குந்‌ தீமை செய்யாது.
உணவை மென்று மென்று வாயூறலோடு கலக்கச்‌ செய்து விழுங்குவது நலம்‌ பயக்கும்‌. பிறவற்றைத்‌ தனி நூல்களிற்‌ காண்க.
உடை : நாகரிகம்‌ முதிர முதிர மக்கட்கு உடை ஏற்பட்டது. உடையை, உடல்‌ நலத்துக்கென அணிதல்‌ வேண்டுமேயன்றி அடம்‌ பரத்துக்கென அணிதல்‌ கூடாது. உலகில்‌ பெரும்‌ பான்மையோர்‌ அடம்பரத்துக்கென்றே உடை உடுத்துகின்றனர்‌. இதில்‌ பெண்‌ மக்கள்‌ பேர்‌ பெற்றவர்கள்‌. அடம்பர உடை ஒரு வரை உயர்த்து வதில்லை; அல்லாத உடை ஒருவரைத்‌ தாழ்த்துவதுமில்லை. உயர்வு தாழ்வு உடையில்‌ இல்லை.
உடை, அழகு நல்குகிறதென்றும்‌, மதிப்பளிக்கிறதென்றும்‌ எண்ணுவோரும்‌ உளர்‌. உடலில்‌ இல்லாத அழகும்‌, ஒழுக்கத்தில்‌ இல்லாத மதிப்பும்‌ உடையில்‌ எங்கிருந்து முளைக்கின்றனவோ தெரியவில்லை! உடையில்‌ அழகும்‌ மதிப்பும்‌ இருக்கின்றன என்று கருதுவோர்‌, தம்பால்‌ அழகும்‌ மதிப்பும்‌ இல்லாதவரா யிருத்தல்‌ வேண்டும்‌. இயற்கை அழகே அழகு; இயற்கை மதிப்பே மதிப்பு.

பெண்மக்களும்‌ உடையும்‌

சில இடங்களில்‌ “ஆண்மக்கள்‌ தேடும்‌ பொருளெல்லாம்‌ பெண்‌ மக்கள்‌ புடவைக்கே செலவாகின்றன”’ என்று சொல்வதுண்டு. பெண்‌ மக்கள்‌ விலையயர்ந்த புடவைகளை விரும்புவதற்குக்‌ காரணம்‌ என்னை? “உடை எதற்கு” என்னும்‌ அறிவை ஊட்டக்கூடிய கல்வியை அவர்கட்கு இளமையிலேயே பெற்றோர்‌ போதியா தொழிந்ததேயாகும்‌. நல்லறிவுடைய பெண்‌ மகள்‌, விலை உயர்ந்த உடைகளை வாங்கித்‌ தருமாறு எவரையும்‌ வலியுறுத்தாள்‌; தூய – எளிய – நல்லுடையையே அவள்‌ விரும்புவள்‌. இளமையில்‌ போதிய கல்வி கொடாது பெண்களை வளர்த்து விட்டால்‌, அவர்கள்‌ அழகும்‌ மதிப்பும்‌ ஆடம்பரத்தில்‌ உண்டு என்றே கருதுகிறார்கள்‌. இளமையிலே பெண்மக்கட்கு இயற்கை யழகு முதலிய நுட்பங்களை உணர்த்தத்தக்க கல்வி அளித்தல்‌ வேண்டும்‌. இளமையில்‌ பெண்ணைக்‌ தவறாக வளர்த்துப்‌ பின்னை அவளை மாடென்றும்‌ பேயென்றும்‌ பேசுவதால்‌ என்ன பயன்‌ விளையும்‌? பெண்வளர்ப்பு, பெரிதும்‌ தாயின்‌ பொறுப்பில்‌ இருப்பது. தாய்‌, அடம்பர உடை அணிவதை, இளம்பெண்‌ பார்த்துப்‌ பார்த்துப்‌ பழகினால்‌, அப்பெண்ணும்‌ வயதில்‌ அவ்வுடைமீதே கருத்துச்‌ செலுத்துவள்‌. ஆதலால்‌, தாய்‌, எளிய நல்லுடை அணிந்து வாழ்வு நடாத்துவது குழந்தைக்குப்‌ பெரும்‌ பாடமாகும்‌.
ஆடம்பர உடைமீது கருத்தைப்‌ பதிய வைத்துள்ள பெண்ணின்‌ வாழ்வு, பின்னை நலமுறுதல்‌ அரிது. நமது நாட்டில்‌ எத்துணைப்‌ பெண்மக்கள்‌ வாயைக்‌ கட்டி, வயிற்றைக்‌ கட்டி, நாயகனையும்‌ வஞ்சித்து, விலை உயர்ந்த புடவைகளை வாங்கிப்‌ பெட்டியில்‌ வைத்து, அழகு பார்த்து மகிழ்கிறார்கள்‌. உடை எற்றுக்கு என்று இளமையில்‌ உணராத குற்றமே இவ்வறி யாமைக்குக்‌ காரணம்‌.
பெண்மக்களின்‌ உடைக்கோலங்களோ உலகில்‌ பலவிதம்‌. அக்குப்பைகளை ஈண்டுக்‌ கிளற வேண்டுவதில்லை. இரண்‌டெொன்றை மட்டும்‌ குறிப்பிடுகிறேன்‌.

உடைச்‌ சுமை

உடை, உடையாக இருக்க வேண்டுமே யன்றிச்‌ சுமையாக இருத்தல்‌ அகாது. தாங்க முடியாத உடைச்‌ சுமைகளைச்‌ சில பெண்மணிகள்‌ சுமப்பதை யான்‌ காண்கிறேன்‌. “இவர்கள்‌ தலை எழுத்தென்னோ! சுமை தாங்கச்‌ சுமை தாங்கிகள்‌ இருக்கும்‌ போது, இவர்கள்‌ ஏன்‌ சுமை தாங்கிகள்‌ அகிறார்கள்” என்று யான்‌ நினைப்பதுண்டு. மேல்நாட்டுப்‌ பெண்மணிகளும்‌ முன்னே சுமைதாங்கிகளாக இருந்தார்கள்‌. இப்பொழுது அவர்கள்‌ தங்களைத்‌ தாங்குபவர்களாய்‌ விட்டார்கள்‌. இந்தியப்‌ பெண்மணி களின்‌ உடைச்‌ சுமையும்‌ நாளுக்கு நாள்‌ குறைந்து வருகிறது. உடைச்சுமை, உடல்‌ நலத்தைக்‌ கெடுப்பதென்பதைப்‌ பெண்‌ மணிகள்‌ இளமையிலேயே உணரும்‌ முறையில்‌, அவர்களைப்‌ பெற்றோர்‌ வளர்ப்பாராக.

உடை இறுக்கம்‌

இன்னுஞ்‌ சில இடங்களில்‌ பெண்மணிகள்‌ உடைகளை உடலில்‌ இறுக்கி இறுக்கிப்‌ பிணிக்கிறார்கள்‌. இதனால்‌ குருதி ஓட்டம்‌ பிணிப்புண்டு தடைபடுகிறது. பிணிப்புண்ட இடத்தில்‌ தொடக்கத்தில்‌ நமை தோன்றும்‌; பின்னைப்‌ புண்‌ உண்டாகும்‌, பின்னைச்‌ சீமும்‌ நீரும்‌ ஒழுகும்‌. சில இந்தியப்‌ பெண்மக்கள்‌ இடுப்பிலும்‌, உடலைச்‌ சுற்றிலும்‌ புண்‌ மலிந்த படைத்‌ தழும்புகள்‌ எழும்பி அவர்களை வருத்துகின்றன. இதற்குக்‌ காரணம்‌ அவர்கள்‌ புடவையையும்‌ இரவிக்கையையும்‌ இறுகப்‌ பிணித்துக்‌ கட்டுவதேயாகும்‌. உடைகளை இறுக்கிப்‌ பிணிக்கும்‌ பழக்கம்‌ மேல்நாட்டுப்‌ பெண்களிடையும்‌ ஒருபோது இருந்தது. இப்‌ பொழுது அப்பழக்கம்‌ முற்றும்‌ அவர்களிடை மறைந்து விட்டது. நமது நாட்டிலும்‌ அது மறைதல்‌ வேண்டும்‌.

உடையும்‌ நாட்டியலும்‌

நமது இந்திய நாடு, குளிர்‌ மிகுந்ததும்‌ அன்று; வெம்மை செறிந்ததும்‌ அன்று; இரண்டும்‌ ஒப்ப நிற்பது. இந்நாட்டில்‌ உடைச்‌ சுமையும்‌ இறுக்கமும்‌ எங்ஙனம்‌ புகுந்தனவோ தெரிய வில்லை. நமது நாட்டில்‌ வாழும்‌ மேல்‌ நாட்டுப்‌ பெண்‌ மணிகள்‌ இப்பொழுது மெல்லிய உடையை இலகுவாக அணிகிறார்கள்‌; இந்தியப்‌ பெண்மணிகளின்‌ உடைக்கோலமும்‌ மாறுபட்டு வரு கிறது. மாற்றம்‌ எத்தகையதாயினும்‌ ஆக. சுமையும்‌, இறுக்கமும்‌, பிணப்பும்‌ வேண்டா என்று மட்டுஞ்‌ சொல்கிறேன்‌.

உடையியல்‌

பிறர்‌ உள்ளத்தைக்‌ கவரும்‌ முறையில்‌ உடைக்கோலஞ் செய்யும்‌ பெண்மணிகள்‌ நிலை குறித்து இரங்குகிறேன்‌. தூய மனமுடைய ஆண்மக்கள்‌ நெஞ்சையும்‌ உடைக்கக்‌ கூடிய வேடிக்கை உடைகளைச்‌ சில பெண்‌ மக்கள்‌ அணிகிறார்கள்‌. இப்பழக்கம்‌ நிறுத்தப்படல்‌ வேண்டும்‌. உடையைக்‌ கொண்டு ஒருவர்‌ மனோநிலையை அறிஞர்‌ உணர்தல்‌ கூடும்‌. அவரவர்‌ நடைக்கேற்ற உடையையே அவரவர்‌ விரும்புவர்‌. ஒருவார்‌ உடை கொண்டு அவரது நடையையும்‌ அறிஞர்‌ அளந்து கொள்ளலாம்‌. இதை-யொட்டியே நடை உடை பழக்கம்‌’ என்னுஞ்‌ சொற்றோடர்‌ வழக்குத்‌ தோன்றியது போலும்‌! அமைதி வடிவங்களாகிய பெண்மக்கள்‌, பிறர்‌ மனத்தைக்‌ கவரத்தக்க உடை அணிதல்‌ பாவம்‌, பாவம்‌. அக்‌ கவரல்‌ பின்னைத்‌ தன்னைப்‌ பல வழியிலும்‌ கெடுக்கும்‌ என்பதைப்‌ பெண்மகள்‌ உணர்வாளாக. தய எண்ணம்‌ உலவும்‌ மனமுடைய அண்மக்கள்‌ மனத்தையும்‌ கவரக்‌ கூடாத அமைதி பொருந்திய உடைக்‌ கோலமும்‌ உண்டு. அத்தகைய தெய்வீக எண்ணமூட்டக்கூடிய உடைக்கோலங்‌ கொள்ளவே பெண்‌ மக்கள்‌ இளமை தொட்டுப்‌ பழகல்‌ வேண்டும்‌.

நூற்றல்‌

பெண்மக்கள்‌ தங்கள்‌ உடையைத்‌ தாங்களே செய்து கொள்ளலாம்‌. பெண்மக்கட்குப்‌ பெரிதும்‌ ஓய்வு உண்டு. அவ்‌வேளையில்‌ அவர்கள்‌ சில பல வீட்டுத்‌ தொழில்கள்‌ புரியலாம்‌. வீட்டுத்‌ தொழில்களுள்‌ தலையாயது நூற்றல்‌. நாடோறும்‌ அரை மணி நேரம்‌ ஒவ்வொருவரும்‌ நூற்றால்‌, அண்டுக்கு வேண்டப்படும்‌ உடையை அவ்வவர்க்கு அந்நூல்‌ அளிக்கும்‌. இவ்வாறு பெண்‌ மக்கள்‌ தங்கட்கும்‌, வீட்டிலுள்ள மற்றவர்‌ கட்கும்‌ உடை உதவலாம்‌. அதலால்‌, பெண்மக்கட்கு இளமை யிலேயே நூற்றல்‌ கற்பித்தல்‌ வேண்டும்‌. அவர்கட்‌ குத்‌ தையல்‌ பின்னல்‌ முடைதல்‌ முதலிய வீட்டுத்‌ தொழில்களையும்‌ கற்பிக்‌ கலாம்‌. மேல்நாட்டுப்‌ பெண்‌ மக்கள்‌ ஓய்ந்த வேளைகளில்‌ நகை களைப்‌ பார்த்துப்‌ பார்த்துக்‌ களிப்புறார்கள்‌. அவர்கள்‌ சிறுசிறு வீட்டுத்‌ தொழில்களைச்‌ செய்து நாட்டுக்கு நலன்‌ தேடுவார்கள்‌. இளமையில்‌ பெண்மக்கட்கு வீட்டுத்‌ தொழின்‌ முறைகளும்‌ போதிக்கப்படலாம்‌. பின்னை வாழ்விற்கு அத்தொழின்‌ முறைகள்‌ எவ்வளவோ துணை செய்யும்‌. நூற்றல்‌ முதலிய தொழின்‌ முறை கள்‌ கற்பையும்‌ காக்கும்‌ என்று அறிஞர்‌ கூறுகின்றனர்‌. இது குறித்து, “மனித வாழ்க்கையும்‌ காந்தியடிகளும்‌” என்னும்‌ நூலிலும்‌ விளக்கியிருக்கிறேன்‌. இது நிற்க.

நகை : நமது நாட்டுப்‌ பெண்மக்களுக்கு மற்றுமொரு பித்து உண்டு; அதாவது நகைப்‌ பித்து. இப்பித்து ஓழிதற்கு எத்துணை நாளாகுமோ அறிகிலேன்‌. இந்நாட்டுப்‌ பெண்மக்கள்‌, “நகை களில்‌ தான்‌ அழகுண்டு – இன்பமுண்டு – வாழ்வுண்டு – எல்லா மூண்டு’ என்று கருதுகிறார்கள்‌. நகையணியும்‌ நாயகனை நன்னாயகனென அவர்கள்‌ போற்றுகிறார்கள்‌. பெண்மக்கள்‌ பட்டினி கிடந்தேனும்‌, இழிதொழில்‌ செய்தேனும்‌, பொருளீட்டி, நகையணியவே முயல்கிறார்கள்‌. இதற்குக்‌ காரணம்‌, அண்‌ மக்கள்‌ பெண்‌ மக்களின்‌ உரிமையைக்‌ கடிந்து, அவர்கள்‌ அறிவைக்‌ கெடுத்து, அவர்களைக்‌ காமப்‌ பொருளாக்‌ கருதி, நகைகளால்‌ அணிசெய்து களிப்புற்றதென்று யான்‌ கூறுவேன்‌.

நகைப்பித்து

நீண்ட நாள்‌ பழக்கம்‌ இப்பொழுது நாட்டை வருத்துகிறது. சிறு வருவாயுள்ள ஒருவனுடைய நாயகியும்‌, தன்‌ நாயகனை வஞ்சித்தும்‌, தன்னை வஞ்சித்தும்‌ பொருள்‌ சேர்த்து, நகை வாங்க எண்ணுகிறாள்‌. பட்டினியால்‌ நோய்‌ மிகுந்து உயிர்‌ போகும்‌ வேளையிலும்‌ நகைப்பித்து அவளை விட்டு ஒழிவதில்லை. பெண்மகள்‌ இறந்த பின்னரும்‌, அவளது அறிகுறியாக அவள்‌ அணிந்திருந்த விலையுயர்ந்த உடைகளையும்‌ பூண்‌ களையும்‌ நடுவீட்டில்‌ வைத்து அவளுடைய உறவினர்‌ போற்று கின்றனர்‌. நகைகள்‌ நடுவீட்டில்‌ தெய்வங்களாகவும்‌ போற்றப்‌ படுகின்றன! நமது நாட்டுப்‌ பெண்‌ மக்களுக்கு நகைமீதுள்ள பித்தை இந்நூல்‌ முற்றும்‌ எழுதிக்‌ கொண்டே போகலாம்‌.

நகையால்‌ இரக்கமழிதல்‌

நகைப்பித்தால்‌ சில இடங்களில்‌ பெண்மக்கள்‌ வாழ்வே குலைகிறது. ஒருத்திமீது எத்துணை ஆயிரம்‌ ஆயிரம்‌ ஏறிஏறி நிற்‌கின்றன! எத்துணை ஏழை மக்கள்‌ உழைப்பு, பட்டினி, துயரம்‌, கண்ணீர்‌ ஒருத்தியின்‌ கழுத்திலும்‌ காதிலும்‌ தலையிலும்‌ ஏறி நிற்‌ கின்றன! ஒருத்திமீதுள்ள ஒரு நகை எவ்வளவோ ஏழை மக்கட்கு உணவளிக்கும்‌) உடையளிக்கும்‌, தொழிலளிக்கும்‌. ஏழை மக்களின்‌ கலி தீர்க்கவல்ல பொருள்‌, நகைச்சுமையாய்க்‌ கிடப்ப தால்‌ என்ன பயன்‌? நகையில்‌ அழகு உண்டா? அன்பு உண்டா? என்ன உண்டு? “அண்டை வீடுகளில்‌ ஏழைமக்கள்‌ பட்டினியால்‌ வருந்த, யான்‌ இவ்வளவு நகைகளைச்‌ சுமந்து கொண்டிருப்பது அறமா: என்று நகைப்‌ பித்துடைய பெண்‌ இரங்குவாளா? நகைப்‌ பித்து, பெண்ணின்‌ இயற்கைக்‌ குணமாகிய இரக்கத்தையும்‌ சிதைக்கிறது!

நகையால்‌ தீயொழுக்கம்‌

மூடப்‌ பெண்ணின்‌ நகைப்பித்து ஏழைமக்களைத்‌ தீய ஒழுக்கத்திலும்‌ இறங்கச்‌ செய்கிறது; அவர்களைப்‌ பொறாமையறச்‌ செய்கிறது; களவாடச்‌ செய்கிறது; சில வேளைகளில்‌ கொலையும்‌ நிகழ்த்தச்‌ செய்கிறது. நகையின்‌ கொடுமை என்னே! என்னே! “ஓழுக்கம்‌ உயிரினும்‌ ஓம்பப்படும்‌” என்றார்‌ திருவள்ளுவனார்‌. கல்வியறிவில்லாப்‌ பெண்மக்கள்‌, ஓழுக்கத்தினும்‌ நகையையே பெரிதும்‌ ஓம்புகிறார்கள்‌.

நகையும்‌ உடல்‌ நலனும்‌

நகைச்‌ சுமையால்‌ உடலுக்காதல்‌ நலன்‌ உண்டேடோ? ஓன்று மில்லை. உடல்‌ நலத்துக்கென முத்துமாலை, பவளமாலை, மணிபதிந்ததோடு முதலியவற்றை அணியலாம்‌. சில மணிகளால்‌ உடலுக்கு நலன்‌ உண்டு என்று சொல்லப்படுகிறது. பொன்னுக்கும்‌ அக்குணம்‌ உண்டாம்‌. உடல்‌ நலத்துக்கென ஏற்பட்ட இவை, பின்னாளில்‌ வெறுஞ்சுமை – சுமைகளாக அணியப்பட்டன. இப்‌பொழுது முத்து முதலியவற்றின்‌ குணநலன்‌ கண்டு, எப்‌பெண்ணும்‌ அவற்றை அணிவதில்லை. குணங்கண்டு அவற்றைப்‌ பெண்‌ அணிவளேல்‌, சுமை சுமையாக அணியமாட்டாள்‌. கலன்களாகவே அவை இப்பொழுது அணியப்படுகின்றன. குணங்கண்டு நகைகளை அணியும்‌ நல்‌அறிவு, மக்களுக்கு இருக்குமேல்‌, போலி முத்து- பவளம்‌ – மாணிக்கம்‌ – இவற்றை ஏன்‌ அவர்கள்‌ அணிகிறார்‌ கள்‌? சுகாதார முறைகளை நாடோறும்‌ ஓழுங்காகக்‌ கவனித்து, வாழ்வு நடாத்தும்‌ பெண்‌மகள்‌, உடல்‌ நலத்துக்கெனவும்‌ நகைகளை அணிய வேண்டுவதில்லை. இப்பொழுது உடல்‌ நலத்தைக்‌ கெடுக்கும்‌ சுமையாக வன்றோ நகை துயர்‌ செய்கிறது? நகைப்பித்து, உள்ளத்தில்‌ நுழையாதவாறு, பெற்றோர்‌ தம்‌ பெண்மக்களை இளம்‌ பருவத்திலேயே இயற்கை வழியில்‌ வளர்த்துவரல்‌ நலம்‌.

தலைமயிர்‌ : பெண்மக்கள்‌ தலைமயிரைப்‌ பற்றி இரண்டோர்‌ உரை கூற விரும்புகிறேன்‌. தலைமயிர்‌ உடையன்று. அஃது இயற்கைப்‌ பொருள்‌. அதையும்‌ உடை போலச்‌ சில பெண்மக்கள்‌ கருதுவதால்‌, அதன்‌ நினைவு எனக்கு இங்கே தோன்றிற்று. இயற்கைத்‌ தலைமயிரைச்‌ செயற்கை உடையெனக்‌ கருதி, அதைப்‌ பலவாறு அலைத்தல்‌ அறியாமை. பெண்மக்களிற்‌ சிலர்‌, தலை மயிரை இப்பொழுது பலவாறு திரித்து வருகின்றனர்‌. பெண்‌ மக்கள்‌ தலைமயிரைக்‌ கெடுத்துவரல்‌ அழகுக்கும்‌ சுகாதாரத்துக்‌ கும்‌ ஊறு செய்வதாகும்‌. பெண்மக்களுக்குத்‌ தலையில்‌ குறைந்தது பன்னிரண்டங்குலம்‌ நீண்ட மயிர்‌ இருப்பது சிறப்பு. இயற்கையில்‌ அமைந்த மயிரைச்‌ செயற்கை யால்‌ மாறு படுத்தவது வீண்‌.

அழகு

கல்வி அறிவு ஒழுக்கத்தானும்‌, நல்லோர்‌ இணக்கத்தானும்‌, நல்வழியில்‌ உடலோம்புவதானும்‌, பொருந்திய உணவு கொள்வ தானும்‌, அன்புக்‌ கடவுளைப்‌ போற்றுவதானும்‌, இயற்கையோடு இயைந்து வாழ்வதானும்‌ வளர்ந்துவரும்‌ பெண்ணின்பால்‌, கண்ணுக்குப்‌ புலனாகாத அழகுத்‌ தெய்வம்‌ கோவில்‌ கொள்ளும்‌.
கூய மனத்தால்‌ கற்பும்‌, கற்பால்‌ நல்லுடலும்‌, நல்லுடலால்‌ அழகும்‌ அரும்புதல்‌ மேலே விளக்கப்பட்டது.
எல்லாவற்றிற்கும்‌ மூலம்‌ அகத்தூய்மை. அகத்துரய்மை புறத்தே அழகாக அரும்பும்‌. அழகுத்‌ தெய்வம்‌ வீற்றிருக்கும்‌ பெண்ணே நன்‌ மனமுடையாள்‌; நிறையுடையாள்‌,; நல்லுட லுடையாள்‌’ என்று கூறல்‌ மிகையாகாது.
பெண்ணின்‌ உற்ற வயதில்‌ அழகு திரண்டு ஓளி வீசும்‌. அழ கொளி அண்டவன்‌ அருளொளி போன்றது. அண்டவன்‌ அழ கொளியாலும்‌ உலகம்‌ (பிள்ளைப்பேறு) மலர்கிறது. அண்டவன்‌ படைப்பு நோக்கத்தை நிறைவேற்ற வந்தவளல்லளோ பெண்‌? அப்‌ பெண்ணின்‌ கற்புத்‌ தண்மையால்‌ அரும்பும்‌ அழகு, அன்பருக்குத்‌ தெய்வமாகும்‌; புலவருக்குப்‌ பாட்டாகும்‌.

அழகோவியம்‌

அகிலத்துள்ள இயற்கை வனப்பெல்லாந்‌ திரண்டு பெண்‌ தெய்வமாகிக்‌ காட்சியளிக்கின்றன. “பெண்ணின்‌ முகம்‌ எனது புத்தகம்‌’ என்று அறிஞர்‌ பைரன்‌ என்பார்‌ கூறியிருக்கிறார்‌. இயற்கை வனப்பை ஓரிடத்தில்‌ திரட்டிக்‌ காட்சியளிக்கும்‌ ஒரு பெரும்‌ அழகு நிலையம்‌ என்றும்‌ பெண்ணைக்‌ கூறலாம்‌. அத்‌ தகைய ஒரு நிலையத்தை எச்சொல்லால்‌ சொல்வது? எவ்வெழுத்‌ தால்‌ எழுதுவது? தெய்வச்‌ சேக்கிழார்‌ என்னும்‌ ஓவியர்‌ அவ்‌ வழகு நிலையத்தை எழுத்தோவியமாக எழுதியுள்ளார்‌. அவ்‌ வோவியத்தை நோக்குவோமாக:
கற்பகத்தின்‌ பூங்கொம்போ காமன்தன்‌ பெருவாழ்வே
பொற்புடைய புண்ணியத்தின்‌ புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்‌ மதிபூத்த விரைக்கொடியோ.
ஓவியநான்‌ முகனெமுத ஓண்ணாமை உள்ளத்தான்‌
மேவியதன்‌ வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ.
அழகு நிலையத்தைப்‌ படத்தில்‌ பார்ப்பதினும்‌ பாட்டில்‌ பார்ப்பதில்‌ இன்பம்‌ உண்டு. வீடுகளில்‌ தெய்வ உருவங்களின்‌ படங்கள்‌ தூங்குவதைக்‌ காட்டினும்‌, அவ்வுருவங்களின்‌ பாட்டுகள்‌ தூங்குவது சிறப்பு.

பேய்ச்‌ சோதனை

உற்ற வயதடைந்து, வயதுக்கேற்ற உறுப்பு உரம்‌ பெற்று நிற்கும்‌ “புயல்‌ சுமந்து விற்குவளை பவளமலர்‌ மதிபூத்த விரைக்‌ கொடி” தனது உற்றவயதுன்னி, அகத்தூய்மை கெடுக்கும்‌ எதையும்‌ எண்ணுதலும்‌ கூடாது. அவ்வெண்ணம்‌ கொடியை எரித்து விரை போக்கும்‌. எத்துணைப்‌ பேய்ச்‌ சோதனைகட்கும்‌ விரைக்‌ கொடி. இடந்தாராது வளர்வாளாக. அவள்‌ பேய்ச்‌ சோதனைக்கு இடந்தருவது, பின்னைத்‌ தன்மாட்டுக்‌ கனியவேண்டிய தாய்மையைக்‌ கெடுப்பதாகும்‌. பெண்‌ வாழ்வின்‌ நோக்கம்‌ தாய்மைப்பேறு என்று முன்னருஞ்‌ சொல்லப்பட்டது. சிறு கவலை ஈனத்தால்‌ பெரும்‌ பயனை இழப்பது அறிவுடைமை யாகாது. தாய்மைக்குரிய கற்பையும்‌, உடலையும்‌, அழகையும்‌ அழிப்பவள்‌ பெரும்‌ பாவி. அவள்‌ இவ்வுலகிலேயே நரகத்‌ துன்பம்‌ எய்துவள்‌. தாய்மை நினைவின்றிக்‌ கெட்டழிந்த பெண்‌ மக்கள்‌ கதைகள்‌ பற்பல. அதலால்‌, சகோதரிகள்‌, “இவ்வுடல்‌, இவ்வழகு, இவ்வாழ்வு எல்லாம்‌ தாய்மைப்‌ பேற்றிற்கு” என்று ஒழுங்குபட்ட வாழ்வு நடாத்துவார்களாக. நல்வாழ்வு நடாத்தும்‌ பெண்ணிற்குத்‌ தாய்மைப்‌ பேறு இறையருளால்‌ காலத்தில்‌ உண்டாகும்‌.
அழகொழமுக நிற்கும்‌ பெண்மக்களிற்‌ சிலர்‌ மனத்தை வேறு வழியில்‌ விடாமலும்‌, திருமணம்‌ விரும்பாமலும்‌ வாழ்கின்றனர்‌. இவ்வாழ்வுங்கூடாது. இதனால்‌ வாழ்வின்‌ நோக்கம்‌ நிறை வேறாது, அரை குறையாய்‌ அழிந்துபடும்‌. ஒருவனோடு வாழாத ஒருத்தி முழுப்‌ பெண்தன்மை எய்தினவள்‌ அல்லள்‌. ஒத்தநலனும்‌, ஒத்த கல்வியும்‌, பிறவும்‌ உடைய ஒருவனுடன்‌ ஒருத்தி வாழ்ந்து, தாய்மைப்‌ பேறு பெற்று, அன்பு நிலையைக்‌ காண்டல்‌ அறிவுடைமை. இது பெண்ணின்‌ பெருமையுமாகும்‌. இது குறித்துச்‌ சிறிது விரிவுரை கூற விரும்புகிறேன்‌.

மலையிடைப்‌ பிறவா மணியே என்கோ
அலையிடைப்‌ பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப்‌ பிரவா இசையே என்கோ
தாழிருங கூந்தல்‌ தையால்‌ நின்னை. – இளங்கோ அடிகள்‌

அழகெனும்‌ அழகுமேோரர்‌ அழகு பெற்றதே. – கம்பர்‌