நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

குவாங்க்

சீனாவில் குவாங்க் என்ற ஒரு பையன் இருந்தான். அவன் மிகவும் கெட்டிக் காரப் பையன்.
ஒரு சமயம் அவனும் அவனுடைய நண்பர்களும் விளையாடிக் கொண்டிருக் கையில், ஒரு பையன் ஒரு பெரிய ஜாடிக்குள் விழுந்துவிட்டான். அந்த ஜாடி நிறையத் தண்ணீர் இருந்தது. ஜாடி மிகவும் உயரமாக இருந்ததால் அதன் வாயையும் எட்ட முடியவில்லை.
அந்தச் சிறுவனைக் காப்பாற்றியாக வேண்டுமே! அவன் ஜாடியில் இருந்த தண்ணீரில் முழுகி இறந்துவிட்டால் என்ன செய்வது? மற்ற சிறுவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கையில் குவாங்க் ஒரு யோசனை செய்தான். தரையில் கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி ஜாடியின் மீது எறிந்தான். ஜாடி பொத்துக் கொண்டு அதில் இருந்த தண்ணீர் வழிந்தது. ஜாடிக்குள் இருந்த சிறுவனும் உயிர் தப்பினான். பிறகு பெரியவர்கள் வந்து அவனை ஜாடியிலிருந்து எடுத்தார்கள். குவாங்கின் கெட்டிக்காரத்தனத்திற்காக அவனை பெரிதும் பாராட்டினார்கள்.

One Comment on “நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3”

Comments are closed.