அழகியசிங்கர்/நவீன விருட்சம் 126வது இதழ்

இந்த ஆண்டு நவீன விருட்சம் 125 இதழுக்குப் பிறகு ரொம்ப நாட்களாய் அடுத்த இதழ் கொண்டு வர முடியவில்லை. ஏன் இந்த தாமதம் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டேன்.
ஒன்றுமே செய்யாமல் வெறுமையாக பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
ஆனால் எப்படியோ 125 வது இதழ் மே மாதம் வந்தது. 126 வது இதழ் இந்த மாதம்
வந்து விட்டது.
நியாயமாகப் பார்த்தால் நாலு இதழ்கள் ஒரு ஆண்டிற்குள் தயாரித்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டு இதழ் 125 லிருந்து இதழ் 128 வரை வந்திருக்க வேண்டும்.

இன்னும் இரண்டு மாதங்களில் இரண்டு இதழ்கள் கொண்டு வர உத்தேசித்துள்ளேன்.

உங்கள் படைப்புகளை editorvirutcham@gmail.com அனுப்புங்கள்.