அவல் லட்டு/ராஜேஷ் குமார்

லட்டுக்கு இல்லையா ஒரு எண்டுங்கறது போல… லட்டு ரெசிபி எடுத்தாலே சிம்பிள் லட்டுல இருந்து ரொம்ப மெனக்கெட்டு செய்யுற லட்டு வரைக்கும் நிறைய வெரைட்டிஸ் இருக்கு. அதுல ஒன்னுதான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம்.

அது என்னன்னு கேட்கறீங்களா… அதுதான் அவல் லட்டு… என்னது அவல்ல லட்டுவா… அது எப்படி இருக்கும்? இதெல்லாம்தான யோசிக்கிறீங்க… அவல் லட்டு சிம்பிள் ரெசிபியா இருந்தாலும் சுவைக்கு எந்த வித குறைச்சலும் இருக்காது. இதை மட்டும் செஞ்சி குடுத்திங்கன்னா குழந்தைங்க மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க. இந்த தீபாவளிக்கு இதையும் நம்ம லிஸ்ட்ல சேர்த்துடுவோமா.

வாங்க அவல் லட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிகப்பு அல்லது வெள்ளை அவல் – 3 கப்
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – அரை கப்
முந்திரி பருப்பு – 10
திராட்சை – 10
பால் – கால் கப்
பாதம் – 10
துருவிய தேங்காய் – கால் கப்
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்

முதல்ல முந்திரி, பாதம், திராட்சை மூன்றையும் நெய் சேர்த்து பொன்னிறமா வறுத்து தனியே எடுத்து வெச்சுக்கோங்க.

3 கப் சிகப்பு அல்லது வெள்ளை அவல் எடுத்துக்கோங்க. அதே கடாயில இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து அவலை பொன்னிறமா வறுத்துக்கோங்க. அதே போல துருவிய தேங்காயையும் பொன்னிறமா வறுத்துக்கோங்க.

மிக்ஸி ஜார்ல வறுத்து வெச்சிருக்க அவல் கூட ஏலக்காய், நாட்டு சர்க்கரை அது கூட வறுத்த தேங்காயும் சேர்த்து நல்லா அரைச்சுக்கோங்க….

அரைத்த கலவையில் வறுத்து வெச்ச முந்திரி, திராட்சை, பாதாம் மூன்றையும் அது கூட கலவையாக சேர்த்து கலந்துக்கோங்க.

அந்த கலவையுடன் கொஞ்சம் நெய், சூடான பால் கால் கப் சேர்த்து நல்லா பிசைஞ்சிக்கோங்க. சூடு ஆறி போகறதுக்கு முன்ன லட்டு போல உருண்டையா பிடிச்சிடுங்க.

அவ்வளவு தான் ப்ரண்ட்ஸ்… சுவையான அவல் லட்டு தயார்.

இந்த தீபாவளிக்கு மட்டுமில்ல தீபாவளி முடிஞ்சதும் கூட இதை மாலை நேர சிற்றுண்டியா செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அசத்தலா இருக்கும்.

சரி ப்ரண்ட்ஸ்… என்ன செய்யணும்னு உங்களுக்கே தெரியும்… செஞ்சிடுங்க…