ஷண்முக சுப்பையா/ரொட்டிக்காரன்

ரொட்டி தின்ன ஆசைதான்
துட்டுக்கெங்கே போக நான்
அம்மையை விட்டு
அப்பாவிடம் கேட்டு
துட்டு வாங்கு முன்னே
ரொட்டிக்காரன் சண்டி
மீட்டிடுவான் கம்பி