
எனக்கான மனிதர்கள்
ஒரு குடைக் கீழ்
ஒளிந்து கொள்ள
ஓடிவந்த போது
ஒதுக்கித் தள்ளினார்கள்
பனி நீரை மழையாக்கிப்
பயிர் வளர்த்தார்கள்
முளைப் பாலிப் பயிர்களை
மூழ்கடித்தார்கள்
கண்ணில் நீர் பெருக்கிக்
காலில் விழுந்தாலும்
கானல் நீர்ப் பாசத்தைக்
காட்டிச் சிரித்தார்கள்
எல்லாமாயிருந்து
இல்லாத தாக்கி விடவே
எங்கேயும் தொடர்ந்தார்கள்
எனக்கான மனிதர்கள்
(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
