மதுவந்தி/பாரதி -142

தமிழ்ச் சரித்திரத்தில்
பாரதிக்கு முன்
பாரதிக்குப் பின்
எனச் சொல்லத் தோன்றுகிறது.

எத்தனையெத்தனை
முதன் முதலில் படைத்து
களிவளரச் செய்து
வைத்தான் பாரதி.
முதலில் சிறுகதை
புதுக்கவிதையின்
முன்னோடியாக
வசன கவிதை.
பத்திரிகையில்
கேலிச்சித்திரம்
சொற்புதிது
சுவை புதிதென
நவகவிதைகள்.

எல்லோரும் நாயக நாயகியாய்
பார்த்த இறையை
தோழனாய் , தாயாய்
தந்தையாய்,, குழந்தையாய்
அரசனாய், சேவகனாய்,
சற்குருவாய்,, சீடனாய்,
ஆண்டானாய், குலதெய்வமாய்ப்
பாடிய மகாகவி.

எட்டயபுரம் முதல் காசி வரை,
கடயம் முதல் திருவல்லிக்கேணி வரை,
புதுவை முதல் மதுரை வரை
பாரதி தடம் பதிந்த இடமெலாம்
அவனைக் கொண்டாடும்.
தமிழ் பேசும் உலகெலாம்
பாரதியை மனதில் பதிந்து
கூத்தாடிக்கொண்டாடும்
இன்றும் என்றும்..

            . 11.12.24( பாரதி 142 ஆவது பிறந்த தினம்).