இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்கள் வந்திருக்கின்றன.
முக்கியமாக அழகியசிங்கரின் நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும்.
இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் விருட்சம் சார்பில் அனுப்பப்பட்டு விட்டது.
ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார் என்ற விபரக் குறிப்பை இப்போது தருகிறோம்.
அழகியசிங்கரின் நான்குப் புத்தகங்கள்
- அஞ்சல் அட்டை கதைகள் அல்லது துரித கதைகள் – பேசுவோர் திருப்பூர் கிருஷ்ணன், அமுதசுரபி ஆசிரியர் புத்தகப் பிரதியைப் பெறுபவர் – மீ.விஸ்வநாதன்.
. - துளிகள் (தொகுதி 4) – கட்டுரைத் தொகுப்பு – பேசுவோர் : டாக்டர் பாஸ்கரன். அவரிடமிருந்து புத்தகப் பிரதியைப் பெறுபவர் : எஸ் எல்.நாணு
- வாசிப்போம் வாசிப்போம் – தொகுதி 2 – கட்டுரைகள் -பேசுவோர் : கிரிஜா ராகவன், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவரிடமிருந்து புத்தகப் பிரதியைப் பெறுபவர் – எச்.என்.ஹரிஹரன்
- வெளியே மழை நின்று விட்டது – கவிதைத் தொகுப்பு- பேசுவோர் – நாகேந்திர பாரதி – புத்தகப் பிரதியைப் பெறுபவர் – சுரேஷ் ராஜகோபாலன்
லாவண்யா சத்தியநாதன் சிறுகதைத் தொகுப்பு
- ரயிலில் ஒரு பயணி – லாவண்யா சத்யநாதனின் சிறுகதைகள் – பேசுவோர் : ராஜேஸ் சுப்பிரமணியன் – புத்தகப் பிரதி பெறுபவர் ரம்யா வாசுதேவன்
கூட்டம் நடக்குமிடம் : அண்ணா நூலகம், கோட்டூர் புரம் – இரண்டாவது மாடி
நாள் : 24.12.2024 மாலை 5.30 மணிக்கு (செவ்வாய்க் கிழமை)
மாலை 5.30 மணிக்கு டீ
அனைவரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கடவுள் வாழ்த்து , தமிழ் வாழ்த்து பாடுபவர்கள் உஷா பாரதி லதா கிருஷ்ணகுமார், சாந்தி ரசவாதி.
இங்ஙனம்,
அழகியசிங்கர்
லாவண்யா சத்யநாதன்
