
போன ஆண்டு புத்தக காட்சியின் போது 7 புத்தகங்கள் மட்டும் கொண்டு வந்தேன். அதில் முக்கியமான ஒரு புத்தகம் கநாசு படைப்புகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள் புத்தகத்தைக் கொண்டு வந்தேன். 110 கவிதைகள். அவர் ஞான ரதம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, ஏராளமான கவிதைகள் எழுதினார். அத்தனையும் திரட்டி அவர் கவிதைகள் பற்றி மேலும் சொன்னது, ஞானக்கூத்தன் அவர் கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரை எல்லாம் கொண்டு வந்தேன்.
அந்தப் புத்தகம் ரூ.250.

இந்த ஆண்டு புத்தகக் காட்சி முன்னிட்டு நான் 27 புதிய புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன். இணையக் காலக் கவிதைகள் என்று இரண்டு தொகுப்பு நூல்கள், சூமில் ஏற்பாடு செய்த கவி அரங்கத்தில் வாசித்த கவிதைகளை அரங்கக் கவிதைகள் என்ற புத்தகம்.
போன ஆண்டு =வெற்றிடம் எதற்கு+ என்ற 100 கவிதைகள் அடங்கிய என் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்தேன். இந்தப் புத்தகக் காட்சியின்போது “வெளியே மழை நின்று விட்டது” என்ற இன்னொரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளேன். இன்னொரு 100 கவிதைகளைச் சேர்த்து விட்டேன். இதுவரை 600 கவிதைகள் எழுதி விட்டேன்.

போன புத்தகக் காட்சியின் போது க.நா.சு கவிதைகள் மாதிரி, இப்போது இரண்டு முக்கிய கவிதை நூல்களைக் கொண்டு வந்து விட்டேன்.
ஒரு புத்தகம் எழுத்து காலத்தில் தன் முத்திரையைப் பதித்த தி.சோ வேணுகோபாலன் கவிதைகள், இரண்டாவது கவிதைத் தொகுதி நகுலன், க.நா.சு பாரட்டிய ஷண்முக சுப்பையா கவிதைகள்.ரூ.200க்கு இந்த இரண்டு கவிதைத் தொகுதிகளை வாங்கி விடலாம்.
வரும் புத்தகக் காட்சியில் அரங்கு எண் 675 இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.
இப்போதே வேண்டுமென்றால் கூகில் எண் 9444113205 பணம் அனுப்பினால் போதும்.
