குரங்குக் குட்டிகள்

லேவ் தல்ஸ்தோய்

ஒரு குரங்குக்கு இரு குட்டிகள் இருந்தன. ஒன்றை நேசித்தது மற்றதை நேசிக்கவில்லை. ஒருநாள் சிலர் அந்தக் குரங்கை விரட்டிப் பிடிக்க ஓடினார்கள் விருப்பமான குட்டியைத் தன்னுடன் தூக்கிக் கொண்டு குரங்கு ஓடியது. விரும்பாத குட்டியை விட்டுவிட்டுப் போனது. நேசிக்கப்படாத அந்தக் குட்டியோ அடர்ந்த புதரினுள் ஒளிந்து கொண்டதால், வேகமாகக் கடந்து சென்ற அம்மனிதர்கள் அதைக் கவனிக்கவில்லை.ஆனால் குரங்கு மரத்தின் மீது மிக வேகமாகத் தாவிய தால் விருப்பமான குட்டியின் தலை மாக்கிளையில் அடிபட்டு அது இறந்து போனது. ஆட்கள் போனவுடன் தான் நேசிக்காத குட்டியைத் தேடி குரங்கு சென்றது. ஆனால் குட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குரங்கு தனிமையானது.

(நீதிக்  கதைகள் )