அதிரன்/இடைவேளை

இயந்திரமாய்
பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்
தேநீர் இடைவேளை
மணி சத்தம் கேட்டு
ஆளுக்கொரு கோப்பை தேநீருடன்
புல்த்தரையில் வந்தமர்ந்து
சிரித்து மகிழ்ந்து
பேசிக் கொண்டிருந்தனர்.

மீண்டும் மணி ஒலிக்க
இயந்திரமாய் மாறிப்போனார்கள்

மகிழ்ச்சி என்பது
பலரது வாழ்வில்
ஒரு தேநீர் குடிக்கும் நேர அளவு மட்டுமே