
தன் தாயின் நெருங்கிய சிநேகிதி பிரபல சின்னத்திரை நடிகை காமேஸ்வரியை பார்க்க வந்த நித்யா “என்ன ஆன்டி உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைனு
பேப்பரில் படிச்சேன். பல தடவை போன் பண்ணிப்பார்த்தேன். நம்பர் ஈஸ் நாட் ரீச்சபிள்னு வந்தது.. என்ன ஆச்சு ஆன்டி?”
“வாம்மா உக்காரு எப்படி இருக்கே?”
“நீங்க எப்படி இருக்கீங்க?”
“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன்”
“அப்படியா? உங்களுக்கு ரொம்ப உடம்பு சரி
யில்லாததாலே இனிமேல் நீங்க நடிக்கிறது
சந்தேகம்னு பேப்பரில் படிச்சேனே. சிறந்த
வில்லி மாமியார் கதாபாத்திரத்துக்கான
விருது இரண்டுதடவை கிடைச்சிடுச்சு .யார்
கண்ணு பட்டிடுச்சோன்னு கவலையோடு
வந்தால் நல்லா இருக்கேன்னு சொல்லறீங்க.
என்ன ஆன்டி இது?”
“அது ஒண்ணுமில்லே இந்த வயசுலே எல்லா
ருக்கும் வருகிற சுகர் பிராப்ளம்,ரத்த அழுத்த
நோய்,முட் டிவலிஎன்கிற பிரச்சனைகள்தான்”
“அதுக்காக நீங்க நடிக்கிறதை விடலாமா?
சின்னத்திரையில் நீங்க எத்தனைபிரபலம்..
நீங்க என்அம்மாவின் நெருங்கிய சினேகிதி
ன்னு சொல்லிக்கவே எனக்கு பெருமையாக
இருக்கு”
“ஒரு ரசிகையின் பார்வை அது. ஒரு உறவின்
பார்வையாக அது மாறும்போது அதுவே உறுத்தலாகிவிடும்னு எனக்கு இப்பதான்
புரிகிறது.”
“என்ன சொல்லறீங்க ஆன்டி?”
“உனக்குத்தெரியும். என் பிள்ளை விவேக்
நல்லாப்படிச்சு தனியார் நிறுவனத்தில் நல்ல
வேலையிலிருக்கான். பார்க்கவும் ஸ்மார்ட்டாக இருக்கான். அப்பா அம்மான்னா
அத்தனை பாசம். காதல் கல்யாணம் வேண்
டாம்னு தீர்மானமாய் இருக்கிறதாலே நான்
வரன் பார்க்க ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷமா
எதுவும் க்ளிக் ஆகல்லே. நான் வில்லி நடிகை
என்கிறதாலே பெண்வீட்டுக்காரங்க இந்த உறவு வேண்டாம்னு விலகிப்போகிறாங்க.
நான் என்ன செய்யட்டும் சொல்லு. என் பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமை
ச்சுகொடுக்கிறது என் கடமை யல்லவா?
எனக்கு என் மகனும் குடும்பமும்தான் முக்கியம். அதனால்தான் நடிப்பதை நிறுத்தி
விட நினைக்கிறேன்.”
“நடிப்பு வேறு நிஜவாழ்க்கை வேறு என்கி
றதை அவங்க ஏன்புரிஞ்சுக்க மாட்டேங்கிறா ங்க?”
“அதுவோ எதுவோ இதுதான் என்வாழ்க்கை
அப்படின்னு நான் தீர்மானிச்சுட்டேன்.நீயாவது
என்னை புரிஞ்சுப்பே என்கிறநம்பிக்கை
எனக்கிருக்கு”
“ஆன்டி யூ ஆர் ரியலி கிரேட்” நித்யாபாசத்து
டன் காமேஸ்வரியை அணைத்துக்கொண்டாள்.
.

ahp2tn