
பழம்கொள் தெங்குஇலையெனப் பரந்து பாய்புனல்
வழங்குமுன் இயற்றிய கதைசெய் வாய்த்தலை
கழங்குரல் பம்பையிற் சாற்றி நாடெலாம்
முழங்குதீம் புனல்அக முரிய மொய்த்ததே…!
பெருக்கெடுத்து வரும் வெள்ள நாட்களில் ஊர் ஜனங்கள் கூடி நீர் வழிப்
பாதைகளைப் பிரித்து ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்படாவண்ணம்
பாதுகாத்தல் மரபாய் இருந்த தலையாய பணி என்பதை இக்காவியத்தின்
பாடல்கள் வழி நாம அறிந்து கொள்ள முடிகிறது.
பழம்கொள் தெங்கு இலையெனப் பரந்து பாய்புனல் -– பழுத்த
தென்னங்கீற்றைப் போல் பரந்து விரிந்து பாயச் செய்ய வேண்டி வாய்க்கால்
தலைமடைப் பகுதியை வெட்டிச் சீர் பண்ணுமிடத்தில் மக்கள் வந்து கூடி
நின்றனர்.
பெருக்கெடுத்து வரும் ஆற்று வெள்ளமானது கரையோரப் பகுதிகளை
அரித்துக் கொண்டு வருவதை ஊருக்கு பறையறிவித்துத் தெரிவித்திட, மக்கள்
தங்கள் தொண்டுப் பணிக்குத் தயாராகிறார்கள். பெரு வெள்ளத்தைத் தேக்கி
திசை மாற்றி அனுப்பிடும் தொண்டூழியம் வேண்டி நாட்டு மக்கள்
தயாராவதை எடுத்துரைக்கிறது இப்பாடல்.
வாய்த்தலை –வாய்க்காலின் தலைப்பு மதகு என்று பொருள் கொள்க.
தலைவாய் என்பதன் மாறுபெயர்.
ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்குத்
தலைவாய் என்று பெயர்.
(உ-ம்) காவிலியிலிருந்து வெட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் தலை
